சனி, 11 ஜூலை, 2026

மனம் உடைந்து, கண் கலங்கிக் கதறி[crying] அழும் முதல்வர் ஜோசப்!!!

முக்கிய அறிவிப்பு: “புரியாத கடவுள் தத்துவங்கள், மூடநம்பிக்கைகள், கத்துக்குட்டித்தனமான கதைகள், அறுவைக் கட்டுரைகள் என்று எதையெதையோ கிறுக்கிக்கொண்டிருந்த நீ, அடுத்தடுத்து நம் முதல்வரை விமர்சிக்கிறாயே, இருந்த சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டதா?” என்று கேட்க நினைக்கிறீர்கள்தானே?

உங்கள் கேள்வி நியாயமானதுதான். நான் விரும்பி எழுதவில்லை; முதல்வர் எழுதத் தூண்டுகிறார் என்பதே என் பதில். இயன்றவரை, இவரை விமர்சிப்பது இனி தவிர்க்கப்படும் என்பது உறுதி.

மேற்கண்ட காணொலிகளில், முதலமைச்சர் ஜோசப் அவர்கள் மனம் உடைந்து அழும்போது அவரின் கண்கள் நீர் தளும்பும் குளங்கள் ஆவதையும்,  அவர் கலங்கி அழும்போது கன்னங்களில் தாரை தாரையாய் அது வழிவதையும், கதறி[crying] அழும்போது அது அருவியாய்ப் பெருக்கெடுப்பதையும் காண்கிறோம்.

அவரைத் தேற்றுவதற்கான வழி ஏதும் தென்படவில்லை.