எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 15 பிப்ரவரி, 2023

“ஜக்கிக்குப் பாதுகாப்புத் தருபவர் ‘மோடி’ மட்டுமல்ல, ஸ்டாலினும்தான்”... பெ.மணியரசன்!

ல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஜக்கியை, காவல்துறையின் ‘விசாரிப்புக்கு’ உள்ளாக்காமல் இருப்பது, பிரதமர் மோடி அவர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும்.

ஈஷா ஆசிரமப் பயிற்சிக்குச் சென்று, அங்கிருந்து பெரும் பதற்றத்துடன் தப்பி ஓடி, எங்கோ ஒரு பாழுங்கிணற்றில் அழுகிய பிணமாகக் கிடந்தார் சுபஸ்ரீ என்னும் பெண்.

அவரின்[சுபஸ்ரீ] உடல் முறையாக ‘உடற்கூறு’ ஆய்வு செய்யப்படாமல், அவசர அவசரமாகத் தமிழ்நாடு காவல்துறையின் பாதுகாப்புடன் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.

இதுவும் பிரதமருக்கும் இங்குள்ள முதல்வருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை.

இந்த மரணம் தொடர்பாக, இதனோடு சம்பந்தப்பட்ட ஈஷா யோகா ஆசிரம அதிபர் ஜக்கி மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதோடு, அவரிடம் குறைந்தபட்ச விசாரணைகூட நடத்தப்படாதது ஏன் என்னும் கேள்வி எழுகிறது.

இது குறித்து எந்தவித விளக்கமும் இவ்விரு அரசுகளாலும் தரப்படவில்லை.

குறைந்தபட்ச விசாரணையைக்கூடத் தவிர்க்கும் அளவுக்கு உண்மையில் ஜக்கி கடவுளின் அவதாரமா, எல்லாம் ஜக்கிக் கடவுளின் திருவிளையாடல்கள் என்று நம்பி அமைதிகாப்பதற்கு?!

நம் குடியரசுத் தலைவர் அவர்கள் ஜக்கி கொண்டாடும் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்ள[18.02.2023] இருக்கிறார் என்னும் ஊடகச் செய்தி இந்தக் கேள்விக்கு வலிமை சேர்க்கிறது.

***தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களின் பேட்டியைச் செவிமடுத்ததன் விளைவு இந்தக் கேள்வி!
                                                
                                         *   *   *   *   *

கீழே காணொலி[பெ. மணியரசன் அவர்களின் பேட்டி]:

‘விஷ வித்து ஜக்கி’... ‘கோரா’வில் வெளியான விழிப்புணர்வுப் பதிவு!

தொடர் காணொலிப் பரப்புரைகளாலும், அதீத ஊடக விளம்பரங்கள் மூலமும், தான் ஒரு பிறவி ஞானி, கடவுள் அவதாரம் என்றெல்லாம் மக்களை நம்பவைக்கும் முயற்சியில் ஜக்கி தொடர்ந்து ஈடுபடுவது மக்களின் சிந்திக்கும் அறிவைச் சீரழிப்பதாகும்.

அவ்வப்போது, இந்த ஆளை விமர்சிக்கும் பதிவுகளை வெளியிடுவது நம் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவே.

வாசியுங்கள். இயன்றவரை உங்களின் வாசிப்பு அனுபவங்களைப் பிறருடன் பகிருங்கள்.

நன்றி.

//இவர் யார் தெரியுமா?

ஈசா யோக மையம் என்ற பெயரில் பல திறமையான இளைஞர்களைத் தன் கொத்தடிமைகளாக்கி, பாஜகவின் உதவியோடு பல கோடி ரூபாய் சொத்து குவித்த ஜக்கி வாசுதேவ் தமது மனைவியுடன்.

தனது மனைவியை இவர் கொலை செய்ததாக வழக்கு இன்னும் பெங்களூரில் நிலுவையில் உள்ளது[?]. வழக்குப் போட்டது இவருடைய மாமனார். மகள் இறந்த தகவல் அவருக்குக் கிடைத்து அவளைப் பார்க்க வந்துசேரும் முன்னரே உடலை ஜக்கி எரித்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இவ்வளவுக்கும் தமது குடும்ப வழக்கப்படி இறந்தவர்களை எரிப்பது இல்லை என்று சொல்கிறார்.

இவர் நமது பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பர். வடக்கில் ஶ்ரீஇராமரைப் பாஜக அரசியல் ரீதியாகக் கையில் எடுத்தது போல எதையாவது செய்து தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கப் பாடுபட்டுவரும் போலிச் சாமியார் இவர்.

சிவராத்திரித் தினத்தில் ஆண்டுதோறும் இவர் கொண்டாடும் முறை அனைத்து உண்மையான சிவபக்தர்களுக்கும் பெரும் ஆத்திரம் மற்றும் கடுப்பை வரவழைக்கும் செயலாகும். கவர்ச்சியான நடிகைகளை வைத்து ஒரு சினிமா கலைவிழா போல சிவராத்திரி கொண்டாடிவருகிறார்.

இந்தச் சிவராத்திரிக் கொண்டாட்டத்தின்போது நடிகை சமந்தாவின் இடுப்பைக் கேடுகெட்ட இந்தப் போலிச் சாமியார் கிள்ளும் வீடியோ ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி ரூபாய் கட்டணம் மற்றும் நன்கொடை வசூல் செய்கிறார். தமிழ் அரைகுறை. தட்டுத் தடுமாறிப் பேசும் இவர் தமிழக மக்களை மோடிக்குக் காட்டிக் கொடுக்கும் கீழ்த்தரமான வேலைகளைச் செய்துவருகிறார்.

உ பி, பீகார் போல அராஜகச் சாமியார்கள் இங்கு யாரும் கிடையாது. ஆதீனம், ராமகிருஷ்ண மடம் போன்றவையே உண்டு. அதை மாற்றி வடநாட்டுத் திருட்டுச் சாமியார்கள் போல இங்கு வளர்ந்திருக்கும் விஷச்செடி இவர். ஏகப்பட்ட இளைஞர்கள் இவர் வலையில் விழுந்துவிட்டார்கள்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஈஷா பவுண்டேஷன் கட்டிடங்கள் இருப்பதாக வனத்துறை 2012ஆம் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அதைக் கண்டுகொள்ளாமல் கட்டுமானப் பணிகளை ஈஷா தொடர்ந்ததாக CAG அறிக்கை கூறுகிறது.

இருந்தும் ஈஷா மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

அடுத்து அமைய இருக்கும் தமிழக அரசு[?] இவர் மீதும், இவர் போன்ற சட்ட விரோதமாகச் செயல்படும் போலிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் இவர் என்று மக்களின் முன்பு தோலுரித்துக் காட்ட வேண்டும்.

தமிழக இளைஞர்களின் வாழ்க்கையைச் சிதைக்கும் இந்த விஷவித்து விரைவில் களையப்பட வேண்டும்//