எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 13 ஜூன், 2018

'நிலா'.....சில 'தடாலடி'த் தகவல்கள்!!

*நிலா ஒன்றல்ல; அண்டவெளியில் உலாவரும் இவற்றின் மொத்த எண்ணிக்கை 176! 175 நிலாக்கள் ரொம்ப ரொம்ப ரொம்பத் தொலைவில் இருப்பதால் ஒன்றே ஒன்று மட்டும் நம் கண்களுக்குத் தெரிகிறதாம்.

இவை...புதன், சுக்கிரன் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய், பூமி முதலான கோள்களுக்கு அருகருகே சுழல்கின்றனவாம்.

*நம் கண்ணுக்குத் தெரிகிற அழகு நிலா, பூமியிலிருந்து சுமார் 238857 கல்தொலைவு[384403 கி.மீ] இடைவெளியில் பூமியை வலம் வருகிறது. இது தோன்றி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன[மற்ற விவரங்கள் வேண்டாம். உணர்வு சலிக்கும்!].

*சூரியனிலிருந்து பூமி பிறந்ததல்லவா? அது போல, பூமியிலிருந்து இந்த நிலா பிறந்தது. பூமியிலிருந்து ஒரு துண்டாக இது சிதறியபோது உண்டான மகா மகா மகா பிரமாண்டக் குழியில்தான் பசிபிக் பெருங்கடல் உருவாயிற்றாம்.

*விண்வெளியில் அலைந்து திரிகிற கோள்களில் காதலர்களுக்குப் பிடித்தமானது குளுகுளு நிலவைப் பொழிகிற இந்த நிலா மட்டும்தான்.

'இது கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே போகிறது. சுருக்கம் லேசா...மிக மிக லேசாத்தான் இருக்கிறது. அதனால, பயப்பட ஒன்றுமில்லை'ன்னு அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்[அது எக்கேடு கெட்டால்  நமக்கென்ன...கவலைப்பட வேண்டியவர்கள் காதலர்கள் மட்டுமே].

*24.10.2010இல் பூமிக்கும் நிலாவுக்குமான இடைவெளி அதிகமாகி, நெடுநெடுந் தொலைவில் இது காட்சி தந்ததாம். அப்போது தோன்றிய முழு நிலா  15% அளவுக்குச் சிறுத்துக் காணப்பட்டதாம். இதுக்குத் 'தானிய நிலவு'ன்னு பெயராம். நம் மக்களெல்லாம் பார்த்துப் மகிழ்ந்தார்களாம். நீங்களும் நானும்தான் ஏமாந்துவிட்டோம்.

*'இந்த நிலா குறித்து மக்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை. நம்மவர்களுக்குக் கவலை தருவது சூரியபகவான்தான்[ஞாயிறு]. 457 கோடி அகவையுடைய இந்தக் குடுகுடுகுடு கிழவர், இன்னும் 543 கோடி ஆண்டுகளுக்கு அப்புறம் 'பொசு'க்குன்னு உயிரை விட்டுடுவார்' என்கிறார்கள் அறிவியல் மேதைகள். 

அய்யோ....அப்படீன்னா..... நம்ம வாரிசுகள் கதி அதோகதிதானா?!

ஆதார நூல்: 'இலக்கிய - அறிவியல் நுகர்வுகள்'; ஆசிரியர்: கா.விசயரத்தினம்; மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
=======================================================================
கீழே இடம் காலியா இருக்கேன்னு இன்னிக்கி நான் எடுத்துகிட்ட படத்தை[செல்ஃபி] இணைச்சிருக்கேன்.