எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 10 மார்ச், 2024

அலறும் அப்பிராணி அண்ணாமலை! அமைதி காக்கும் கமல்ஹாசன்!!

தீய சக்தியான ‘திமுக’ உதவியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி[கமல்ஹாசன்] மாநிலங்களவைக்குச் செல்வது வேதனைக்குரியது. கமல்ஹாசன் சரியான பக்கம்[பீசேப்பி] இருந்திருந்தால் அவருக்கான அரசியல் வெகுமதிகள் எப்போதோ கிடைத்திருக்கும்[எத்தனைக் கோடி? என்ன பதவி?] என்று உளறுவாயன்ர் ‘பாஜக’ அண்ணாமலை அலறியிருக்கிறார்[இந்து தமிழ்].

நடைபெறவுள்ள தேர்தலில் ‘திமுக’ கட்சிக்குக் கமல்ஹாசன் பரப்புரை செய்வார். அதற்குப் பிரதிபலனாகத்தான் அக்கட்சி அவரை மாநிலங்கள் அவைக்கு அனுப்புகிறது.

இதில் தவறென்ன கண்டறிந்தார் ‘பீசேப்பி’த் தலைவர் அண்ணாமலை.

கமலஹாசன் இவரைப்போல, வடக்கன்களின் நிரந்தரக் கொத்தடிமை அல்ல; எப்பாடுபட்டாவது, தமிழனை அடக்கி ஆள அவர்கள் துடியாய்த் துடிப்பதைப் புரிந்துகொள்ளாத அப்பாவியும் அல்ல.

கமல்ஹாசன் தமிழ்ப் பற்றுள்ளவர்[சந்தேகமே வேண்டாம்]; உண்மைத் தமிழன்; மிகச் சிறந்த பகுத்தறிவாளர்; சுயமாக உழைத்துச் சம்பாதித்துத் தன்மானத்துடன் வாழ்பவர். 

அவர் மாநிலங்களவைக்குச் செல்வதால் தமிழகத்துக்கு நன்மைகள் பல விளையும்.

இவற்றில் எந்தவொன்றையும் புரிந்துகொள்ளாமல் வழக்கம்போல உளறிக்கொட்டியிருக்கும் அண்ணாமலையைச் சாடுவதால் பயன் ஏதுமில்லை.

ஏனென்றால், நாம் ஏன் அவரைச் சாடுகிறோம் என்பதைக்கூட புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத அப்பிராணி அண்ணாமலை.

அவர் நலமுடன் வாழ, மோடியால் உலக அளவில் பிரபலப்படுத்தப்பட்ட பகவான் ராமச்சந்திர மூர்த்தி அருள்பாலிப்பாராக!

                                   *   *   *   *   *

https://www.hindutamil.in/news/tamilnadu/1213241-mnm-going-to-rajya-sabha-with-dmk-help-is-painful-annamalai.html#emotes

காணொளியா, காணொலியா?

காணொலி 1:


காணொலி 2:


வேண்டுகோள்: இக்காணொலியின் 3ஆம் பத்தியில் தொடர்ப் பிழை நேர்ந்துள்ளது.

‘... சந்தேகிக்கும்படியாக...’ என்றிருப்பதை, ‘சந்தேகிக்கும்படியாகவும்...’ என்று திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறேன்.