செவ்வாய், 7 ஜூலை, 2026

கட்சி மாறும்/மாற்றும் கயவாளிகளின் ‘கட்டிப்பிடி’ நாடகம்! அரங்கேறும் இடம் தமிழ்நாடு!!

நேற்றுவரை ஒரு கட்சியில் பதவி பெற்று நோகாமல் கோடி கோடியாய்க் கொள்ளையடித்தவன்கள், அதைத் தக்க வைப்பதற்காக இன்னொரு கட்சிக்குத் தாவுகிறான்கள்.

அந்த இன்னொரு கட்சிக்காரன்கள் பொன்னாடை போர்த்துக் கட்டியணைத்து  இவன்களை வரவேற்கிறான்கள்.

இணைந்தவன்கள் நேற்றுவரை அங்கே பொறுக்கினான்கள். இணைத்துக்கொண்டவன்கள் இங்கே பொறுக்கக் கற்றுக்கொண்டிருப்பவன்கள்.

இரு தரப்பாருக்குமே மனசாட்சி இல்லை. மானம் அவமானம் எல்லாம் இவன்களுக்கு ஒரு பொருட்டல்ல. 

இந்தப் பொறுக்கிகள் இனி கூட்டணி அமைத்துப் பொறுக்க இருக்கிறான்கள்.

ஆகச்சிறந்த நடிகன்கள் இவன்கள்; மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடிக்கிறான்கள்.

கைதட்டிக் குதூகளிக்கும் கூமுட்டைத் தமிழர்கள் உள்ளவரை இவன்களின் காட்டில் மழையோ மழை!

கீழ்க்காணும் காணொலி இவன்களின் நடிப்பில் மயங்கும் தற்குறித் தமிழர்கள் தொடர்பானது.

தேரின்[பூரி ஜெகன்னாதர்] கயிற்றைத் தொடுவது புனிதமாம்! தொட்டவனைத் தொடுவது?!

பூரி ஜெகன்னாதர் பயணிக்கிற தேரின் புனிதமான கயிற்றைத் தொடுவதோ அல்லது இழுப்பதோ ஆன்மீக நற்பலன்களைத் தரும் செயல் என்று கோயிலின் மரபுகள்[?] கூறுகின்றன. கடந்தகாலப் பாவங்கள் அல்லது கர்மவினைகளை நீக்கவும், இறைவனின் அருளைப் பெறவும், அதே வேளையில் ஜெகன்னாதப் பெருமானுடன் ஒருவரின் பிணைப்பை ஆழப்படுத்தவும் இது உதவுகிறது[வார்த்தை ஜாலம்] என்று பல பக்தர்கள் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகள் தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு, இப்போது திருவிழாவின் அடையாளத்தில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக[மூடநம்பிக்கைகளாக] மாறியுள்ளன. ஆயினும், இந்தக் கயிற்றின் முக்கியத்துவம் மத நம்பிக்கையையும் தாண்டியதாகும்[Why even touching the rope of Jagannath's rath is considered a blessing].

தேரில் கட்டிய கயிறு[மனிதர்களால் திரிக்கப்பட்டது] புனிதமானது, அதைத் தொடுவது புனிதமானது என்றால், அதைத் தொடுபவனும் புனிதமானவனே.

அதாவது, புனிதமானவன் ஆன அந்தத் தொட்டவனின் அனைத்து உடல் உறுப்புகளும் புனிதமானவையே. அவற்றில் எதேனும் ஒன்றை[எதை வேண்டுமானாலும். ஹி... ஹி... ஹி!!!]த் தொட்டவனும் புனிதமானவன் ஆவானா?

முழுமுதல் சக்தியாக நம்பப்படுகிறவரும் தேரில் பயணிப்பவருமான ‘பூரி’ ஜெகன்னாதரைப் பார்ப்பதாலேயே ஒருவர் புனிதமானவர் ஆகலாமே? அப்புறம் எதற்குக் கயிற்றைத் தொடுவது தொட்டவனைத் தொடுவது எல்லாம்? 

வெறும் கயிற்றைத் தொட்டு முட்டாள் ஆகிறவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில். லட்சங்கள் கோடி கோடி கோடிகளாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இதைத் தடுத்துநிறுத்தும்... குறைந்தபட்சம் கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதற்குக் கட்சித் தலைவர்களோ, ஆளும் வர்க்கத்தினரோ ஆன்மிக முன்னோடிகளோ முன்வராதது ஏன்?

முட்டாள்களின் எண்ணிக்கை நாளும் அதிகரிப்பதுதான் தங்களின் நலனுக்கு[நாட்டு நலனுக்கல்ல] நல்லது என்று இவர்களெல்லாம் நம்புகிறார்களா?

பூரி ஜெகன்னாதர் என்று ஒரு கடவுள் இருப்பது உண்மையானால், இந்தப் புண்ணியப் பாரதத்தை[இந்தியா] அவர் காப்பாற்றுவாரா?!