நேற்றுவரை ஒரு கட்சியில் பதவி பெற்று நோகாமல் கோடி கோடியாய்க் கொள்ளையடித்தவன்கள், அதைத் தக்க வைப்பதற்காக இன்னொரு கட்சிக்குத் தாவுகிறான்கள்.
அந்த இன்னொரு கட்சிக்காரன்கள் பொன்னாடை போர்த்துக் கட்டியணைத்து இவன்களை வரவேற்கிறான்கள்.
இணைந்தவன்கள் நேற்றுவரை அங்கே பொறுக்கினான்கள். இணைத்துக்கொண்டவன்கள் இங்கே பொறுக்கக் கற்றுக்கொண்டிருப்பவன்கள்.
இரு தரப்பாருக்குமே மனசாட்சி இல்லை. மானம் அவமானம் எல்லாம் இவன்களுக்கு ஒரு பொருட்டல்ல.
இந்தப் பொறுக்கிகள் இனி கூட்டணி அமைத்துப் பொறுக்க இருக்கிறான்கள்.
ஆகச்சிறந்த நடிகன்கள் இவன்கள்; மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடிக்கிறான்கள்.
கைதட்டிக் குதூகளிக்கும் கூமுட்டைத் தமிழர்கள் உள்ளவரை இவன்களின் காட்டில் மழையோ மழை!
கீழ்க்காணும் காணொலி இவன்களின் நடிப்பில் மயங்கும் தற்குறித் தமிழர்கள் தொடர்பானது.