செவ்வாய், 7 ஜூலை, 2026

தேரின்[பூரி ஜெகன்னாதர்] கயிற்றைத் தொடுவது புனிதமாம்! தொட்டவனைத் தொடுவது?!

பூரி ஜெகன்னாதர் பயணிக்கிற தேரின் புனிதமான கயிற்றைத் தொடுவதோ அல்லது இழுப்பதோ ஆன்மீக நற்பலன்களைத் தரும் செயல் என்று கோயிலின் மரபுகள்[?] கூறுகின்றன. கடந்தகாலப் பாவங்கள் அல்லது கர்மவினைகளை நீக்கவும், இறைவனின் அருளைப் பெறவும், அதே வேளையில் ஜெகன்னாதப் பெருமானுடன் ஒருவரின் பிணைப்பை ஆழப்படுத்தவும் இது உதவுகிறது[வார்த்தை ஜாலம்] என்று பல பக்தர்கள் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகள் தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு, இப்போது திருவிழாவின் அடையாளத்தில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக[மூடநம்பிக்கைகளாக] மாறியுள்ளன. ஆயினும், இந்தக் கயிற்றின் முக்கியத்துவம் மத நம்பிக்கையையும் தாண்டியதாகும்[Why even touching the rope of Jagannath's rath is considered a blessing].

தேரில் கட்டிய கயிறு[மனிதர்களால் திரிக்கப்பட்டது] புனிதமானது, அதைத் தொடுவது புனிதமானது என்றால், அதைத் தொடுபவனும் புனிதமானவனே.

அதாவது, புனிதமானவன் ஆன அந்தத் தொட்டவனின் அனைத்து உடல் உறுப்புகளும் புனிதமானவையே. அவற்றில் எதேனும் ஒன்றை[எதை வேண்டுமானாலும். ஹி... ஹி... ஹி!!!]த் தொட்டவனும் புனிதமானவன் ஆவானா?

முழுமுதல் சக்தியாக நம்பப்படுகிறவரும் தேரில் பயணிப்பவருமான ‘பூரி’ ஜெகன்னாதரைப் பார்ப்பதாலேயே ஒருவர் புனிதமானவர் ஆகலாமே? அப்புறம் எதற்குக் கயிற்றைத் தொடுவது தொட்டவனைத் தொடுவது எல்லாம்? 

வெறும் கயிற்றைத் தொட்டு முட்டாள் ஆகிறவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில். லட்சங்கள் கோடி கோடி கோடிகளாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இதைத் தடுத்துநிறுத்தும்... குறைந்தபட்சம் கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதற்குக் கட்சித் தலைவர்களோ, ஆளும் வர்க்கத்தினரோ ஆன்மிக முன்னோடிகளோ முன்வராதது ஏன்?

முட்டாள்களின் எண்ணிக்கை நாளும் அதிகரிப்பதுதான் தங்களின் நலனுக்கு[நாட்டு நலனுக்கல்ல] நல்லது என்று இவர்களெல்லாம் நம்புகிறார்களா?

பூரி ஜெகன்னாதர் என்று ஒரு கடவுள் இருப்பது உண்மையானால், இந்தப் புண்ணியப் பாரதத்தை[இந்தியா] அவர் காப்பாற்றுவாரா?!