//“வெங்கட நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல்ல. ஆந்திர மாநிலத்தவர். முதல்வருக்கும் அரசுக்கும் மிகவும் நம்பகமான & தகுதியான நபர் என்பதால் இந்த வாய்ப்பு[டெல்லிக்கான தமிழ்நாடு அரசுப் பிரதிநிதி> அமைச்சர் பதவிக்கு இணையானது] இவருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்// என்பது ஊடகச் செய்தி.
பதவி பெற்றவர் தமிழரல்ல என்று ஜோசப் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கண்டனக் குரல் எழுப்புகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியதை மறந்துவிட்ட கிணற்றுத் தவளைகள் அவர்கள்.
தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகிப்பவர் ஜோசப். ஐந்தாண்டுக் காலம் ஆளப்போகிறவரும் அவரே. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரோபாயங்களை அவருக்குக் கற்றுக்கொடுத்தவர் வெங்கட நாராயணா. நன்றிக் கடனாக இவரை டெல்லிக்கான அரசுப் பிரதிநிதி ஆக்கியிருக்கிறார் நம் முதல்வர்.
இவரை உதவி முதலமைச்சர் ஆக்கியிருத்தல் வேண்டும்; மாபெரும் தவறு செய்துவிட்டார் அவர்.
அரசியல் ரீதியாக என்றில்லை; திரைப்படத்துறையில் கதாநாயகனாகிப் பெரும் புகழ் ஈட்ட உதவியவர்களும் நம் முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர்களே.
திரைப்படங்களில் நாயகன் ஜோசப் அவர்களைக் கட்டியணைத்து உருண்டு புரண்டு உற்சாகப்படுத்திய கவர்ச்சி நடிகைகளும்கூட{அவர்கள் அதைச் செய்திராவிட்டால் பிரபல நடிகராகி, இன்றைய முதல்வராகவும் உயர்ந்திருக்க வாய்ப்பில்லை] அவரின் நம்பிக்கைக்கும் நன்றிக்கும் பாத்தியப்பட்டவர்கள்தான்.
நன்றிக்குரிய அவர்களில்[ஆந்திரத்து அழகிகளோ, கன்னடத்துக் கிளிகளோ, கேரளத்துக் குட்டிகளோ] ஒருவருக்கோ சிலருக்கோ அமைச்சர் பதவி அளித்து, அவர்களைப் பெருமைப்படுத்துவார் நம் முதல்வர் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு.
பதவி பெறும் அந்த நடிகை யார், அல்லது நடிகைகள் யாவர் என்பதை அறிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம்!
