எனது படம்
ஒருவன் கெட்டழிவதற்கான சூழ்நிலை உருவானால், “அவனுக்கு இப்போது கேடுகாலம்” என்பார்கள் நம் முன்னோர்கள். அது வெறும் அனுமானம்தான் என்றாலும், இப்போதைய அரசியல் சூழ்நிலை தமிழினத்துக்கான கேடுகாலம் நெருங்குகிறதோ என்று எண்ணத் தூண்டுகிறது!

ஞாயிறு, 31 மே, 2026

திருவள்ளுவருக்குக் காவி... ஆளுநரைக் கண்டித்த ‘வைகோ’வுக்கு நம் கண்டனங்கள்!

திருவள்ளுவருக்குச் சாதி, மதம், மொழி போன்ற எந்தவொரு குறுகிய அடையாளமும் கிடையாது. இது உலகறிந்த உண்மை.

ஆனால், இன்று கிண்டி[சென்னை]யில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘திருவள்ளுவர் திருநாள் விழா’ கொண்டாடப்படும் நிலையில், விழா மேடையில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் படம்[போட்டோ] இடம்பெற்றுள்ளது.

காவி உடை மட்டுமின்றி, அவரின் நெற்றி நிறையத் திருநீறு பூசப்பட்டு, கழுத்தில் ருத்ரசாட்ச மாலையும் அணிவிக்கப்பட்டுள்ளது[இதற்கு முன்பு ஆளுநனாக இருந்த ஆர்.என்.ரவி இது போன்ற அடாவடித்தனங்களைச் செய்தது நினிவுகூரத்தக்கது*[https://tamil.oneindia.com].

ஆளுநனின் இந்த அயோக்கியத்தனத்துக்கு ‘வைகோ’ கண்டனம் தெரிவித்துள்ளார்[கீழே காணொலிகள் இடம்பெற்றுள்ளன]. கண்டனம் தெரிவித்த ‘வைக்கோ’வுக்கு நாம் நம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். முக்கியக் காரணங்கள்:

*‘வைகோ’ தன் கண்டன அறிக்கையில் ஒரே ஒரு ‘படு’தான் சேர்த்துள்ளார். இன்னும் பல ‘படு’க்களை[குறைந்தபட்சம் மூன்று ‘படு’க்கள்]ச் சேர்க்க ஏனோ மறந்துவிட்டார்.

*ஆளுநனைக் கண்டித்திருப்பது மட்டும் போதாது; தூண்டுதலாக உள்ள, மட்டமான மேல்மட்டத்தவர்களையும் கண்டித்திருக்க வேண்டும்.

*தான் மட்டுமே தனியராய்க் கண்டனம் தெரிவிப்பதால் கடுகளவும் பயன் விளையாது என்பதைப் புரிந்துகொண்டு, உண்மையான தமிழினப் பற்றுள்ள தலைவர்களுடனும் தமிழர்களுடனும் இணைந்து, வள்ளுவரை அவமதித்தவர்கள் மன்னிப்புக் கேட்கும்வரை போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிப்புச் செய்திருத்தல் வேண்டும்.

*நம் முதல்வர் ‘ஜோசப்’பு ஆளுநனுக்குக் கண்டனம் தெரிவிக்காமலிருந்தால்[பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்புக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை; பதவியேற்பைக்கூட தவிர்த்திருக்கலாம்], அவரையும் தன் கண்ட அறிக்கையில் சேர்த்திருத்தல் அவசியம்.

***அடியேனின் இந்தக் கண்டனப் பதிவால் தமிழ் நெஞ்சத்தவரான ‘வைகோ’ மனம் புண்பட்டிருந்தால், அதற்காகப் பெரிதும் வருந்துகிறோம்.

நன்றி ‘வைகோ’ அவர்களே.


*https://tamil.oneindia.com/news/chennai/thiruvalluvar-depicted-in-saffron-attire-during-the-thiruvalluvar-day-celebrations-at-tamil-nadu-gov-804141.html#google_vignette 

வெள்ளி, 29 மே, 2026

தளபதியாம்! ‘ஜோசப்’பு எந்தப் படையின் தளபதி? எத்தனைத் தடவை போரிட்டார்?

 //CM Thalapathy Vijay with his best friend @ActorSriman//

'CM' ஆயிட்டாரு. அடுத்து 'PM'தான்.

எதற்குத் ‘தளபதி’ பட்டம்?

எந்தெந்தப் படைக்கெல்லாம் எப்பெப்போதெல்லாம் இவர் தலைமை தாங்கிப் போர்க்களத்தில் புகுந்து விளையாடி, எதிரிகளை வெட்டிச் சாய்ச்சார்? தலைகளைத் துண்டிச்சார்?

புகழணுமா எப்படியும் புகழ்ந்துக்கோ?

காலில் விழுந்து காரியம் சாதிக்கணுமா? விழுந்துக்கோ.

“தளபதி... தளபதி”ன்னு ஊர் உலகம் அறியத் தம்பட்டம் அடிச்சி, படம் பிடிச்சி வெளியிட்டு, ஏண்டா எரிச்சர் ஊட்டுறீங்க?

புதன், 27 மே, 2026

உயிர்வாழும் மனைவிக்கு ‘ஈமச்சடங்கு’ செய்த புத்திசாலிக் கணவன்!!!

'She Is Dead To Me': Husband Performs ‘Pind Daan’ For Living Wife Over Instagram Reels, Watch Videoதன் மனைவியின் ஆத்திரமூட்டும் சமூக ஊடகப் பதிவுகளால் பொறுமையிழந்த ஒரு கணவன், வழக்கறிஞரைக் கொண்டு விவாகரத்துக்கு வழி தேடுவது ஒருபுறம் இருக்க, இறந்தவர்களுக்காகப் பொதுவாகச் செய்யப்படும் ஒரு புனிதமான[கருதப்படுவது] இந்து மதச் சடங்கின் மூலம், தங்கள் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் ஒரு விசித்திரம் அண்மையில் நிகழ்ந்துள்ளது[செய்தி].

உயிரோடு இருக்கும் மனைவியின் படத்துக்கு மாலை அணிவித்துப் பிண்டதானத்திற்கான சடங்கைச் செய்து, அதைக் குளத்து நீரில் வீசி, தன் மனைவி செத்துவிட்டதாக அறிவிக்கிறான் அந்தக் கணவன். வீசுவதற்கு முன்னால் படத்தின் மீது காறித் துப்புகிறான்.  

இவனின் இந்தச் செயலுக்குச் சமூக ஊடகங்களில் கண்டனங்களே வெளியாகியுள்ளன.

கணவனும் மனைவியும் மனம் ஒத்து வாழவே முடியாத நிலை உருவானால், கழுத்தை நெறித்தோ, விஷம் வைத்தோ, அடியாட்களை ஏற்பாடு செய்தோ ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிட்டுச் சிறையில் வாழ்நாளைக் கழிக்க நேரலாம்[தூக்குத் தண்டனையும் வழங்கப்படலாம்] இது அவ்வப்போதான அவல நிகழ்வாக உள்ளது.

இதைக் காட்டிலும், ஒரு கணவன்[மனைவியாகவும் இருக்கலாம்] மேற்கண்டவாறு ‘பிண்டதானம்’ செய்துவிட்டு, இருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது[பிள்ளைகள் இருந்தால் அவர்களைப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை இருவரும் பகிர்தல் முக்கியம்].

                                                *   *   *   *   *

'She is dead to me': Husband performs ‘pind daan’ for living wife over Instagram Reels; watch video

செவ்வாய், 26 மே, 2026

‘பொறுக்கி’ எம்.எல்.ஏ.க்களுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை தேவை!

கீழ்க்காணும் 3 பேரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று[அதிமுக சார்பாக] உறுப்பினர்களாக[எம்.எல்.ஏ]ப் பதவியேற்றது 16.4.2026இல். பதவியை ராஜினாமா செய்தது 25.05.2026 அன்று.

ஒரு சில மாதங்கள்கூட நிறைவு பெறாத நிலையில் இவர்கள் பதவியை வெறுத்தது ஏன்?

கட்சித் தலைமையிடம் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்காத விரக்தியா?

தேர்தல் நடத்த அரசு பெருமளவில் செலவு செய்கிறது. அடுத்துவரும் தேர்தலில் போட்டியிட இவர்கள் அனுமதிக்கப்பட்டு, இப்போது சார்ந்துள்ள கட்சியின் சார்பாக வென்றால், அடுத்த கொஞ்சம் நாட்களிலேயே, ‘லாப நஷ்ட’க் கணக்குப் பார்த்து, அந்தக் கட்சியிலிருந்தும் இவர்கள் ராஜினாமா செய்யக்கூடும். அதற்கடுத்த தேர்தலில் இன்னொரு கட்சியில் போட்டியிடுவார்கள்.

இந்தக் கட்சிமாறிகளுக்காக அடிக்கடி இடைத்தேர்தல் நடத்தும்[வீண் செலவு] நிலை உருவாகும்.

தெருத்தெருவாகப் பொறுக்கித் திரியும் சொறி நாய்களுக்கும் இவர்களுக்கும் கொஞ்சமும் வேறுபாடு இல்லை.

காலநேரம் கருதாமல் கட்சி மாறும் இந்தக் கழிசடைகளின் அயோக்கியத்தனத்தை அரசு ஒருபோதும் அனுமதிக்கலாகாது. உடனடியாக உரிய சட்டத் திருத்தங்களைச் செய்து, இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பறிப்பது உடனடித் தேவை.

***தொடர்புடைய காணொலி[ஒரு மணி நேரம் முன்பு வெளியானது]:

திங்கள், 25 மே, 2026

ஊடகர்களே, சி.எம்.விஜய் அல்ல, முதல்வர் ‘ஜோசப்’ விஜய் என்பதை மறவாதீர்!

பெரும்பாலான ஊடகங்கள், நம் முதல்வர் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, ‘சி.எம்.விஜய்[cm.vijay] என்றே குறிப்பிடுகின்றன.

இது நம் முதல்வர் ‘ஜோசப்’ விஜய் அவர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும்.

ஏனென்றால், நடிகராக இருக்கும்போது, வெறும் ‘விஜய்’ ஆக இருந்த இவர் முதல்வரானதும், மிக விரும்பித் தன் மத அடையாளமான ‘ஜோசப்’ஐ இணைத்துக்கொண்டார்[‘ஜோசப்’ விஜய்] என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மீண்டும் நினைவுபடுத்துகிறோம், நம் முதல்வரின் பெயர் வெறும் ‘விஜய்’ அல்ல, ‘ஜோசப் விஜய்’  ஆகும்.

வாழ்க நம் முதல்வர் ‘ஜோசப் விஜய்’!

ஞாயிறு, 24 மே, 2026

இது புது முதல்வர் கண்டறிந்த நாகரிகமா, கண்டனங்களைக் குறைக்கும் தந்திரமா?


தேர்தலின்போது, மிகக் கடுமையாகவும் அநாகரிகமாகவும் தங்களுக்குள்[பரஸ்பரம்] சாடிக்கொண்ட எதிரணி அரசியவாதிகளைத் தேடிச் சென்று, புதிய முதல்வர் விஜய் வாழ்த்துப் பெறுவதும் வாழ்த்துச் சொல்வதுமான புதிய[?] நாகரிகத்தை இங்கு[அயல்நாடுகளில் இயல்பானதாக இருக்கலாம்] அறிமுகப்படுத்தியுள்ளார். 

ஆனால், தவறிழைக்கையில் எதிரணியினர் தெரிவிக்கும் கண்டனத்தின் கடுமையை  மட்டுப்படுத்துவதற்காக இவர்[முதல்வர் விஜய்] கையாளும் தந்திரமோ இது என்று சந்தேகப்படத் தோன்றுகிறது.

காரணம், பரப்புரையின்போது இவர்[மற்றவர்களும்தான்] குறைந்தபட்ச நாகரிகத்தைக்கூடக் கடைபிடிக்காததுதான்.

போதுமான அளவுக்கு அதைக் கற்றுக்கொள்ளும்வரை, ஆளும் அணியினரும் எதிரணியினரும் உண்மையான எதிரிகளாகவே செயல்படுவது மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும்.

முதல்வர் அவர்களே,

“சினிமாவில் நடித்தது போல, தமிழ்நாடு அரசியல் துறையிலும்  நடிக்க வேண்டாம்: மிகை நடிப்பு வேண்டவே வேண்டாம்.”

சனி, 23 மே, 2026

ஆ.ராசாவின் ‘ஒருபுடை ஒப்புமை’ புரியாத மரமண்டையர்களும் ஸ்டாலினும்!!!

தவெக’வின் அமைச்சரவையில் ஐயூஎம்எல், விசிக இடம்பெறுவது குறித்து ஆ.ராசாவின் கண்டன ட்வீட்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. நேற்றிரவு 11.16 மணிக்கு ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார்[செய்தி].

அதில் அவர்,

முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

மூட சாதியை நொறுக்க வேண்டிய

‘சிறுத்தையும்’

வெறும் ‘விசில்' சத்தத்திற்கு

முட்டுக் கொடுக்குமென்றால்;

பூ முடித்தவனை புறந்தள்ளி -

புணர்ச்சிக்கு வேறிடம்

தேடுவதில் தவறில்லை!*

‘திமுக’வுக்கும் ‘விசிக’, ‘ஐயூஎம்எல்’ கட்சிகளுக்குமான உறவு மிக மிக வலிமையானது என்பதற்கு ஆ.ராசா தந்துள்ள ஒப்புமை[உவமை> உதாரணம்] மிகப் பொருத்தமானது; அற்புதமானதும்கூட.

‘கணவனுக்கும்[பூ முடித்தவன்] மனைவிக்குமான உறவைப் போன்றது அது; பிரிதல் கூடாது; பிரிந்தால் அந்தக் கணவனோ மனைவியோ குடும்ப உறவுக்குப் பிற ஆடவனையோ பெண்ணையோ நாடுவதைப் போன்றது’(விசிக'வும் இஸ்லாமியர் கட்சியும் வேறு கூட்டணியில் இணைந்ததைக் குறிப்பிடுகிறார் ஆ. ராசா)அது’ என்கிறார் ஆ.ராசா.

இங்கே ‘புணர்ச்சி’ என்னும் சொல் கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்படுவதைக் குறிக்கிறது. கட்சிகள் இணைவதற்கும் உடலுறவுக்கும் சம்பந்தமே இல்லை[கூட்டணிக் கட்சிக்காரர்கள் பலரும் தங்களுக்குள் உடலுறவுகொண்டு இன்பம் துய்ப்பார்களோ ஓரினச் சேர்க்கை உட்பட?! ஹி...ஹி...ஹி!!!]

இது ஒருபுடை ஒப்புமை[உவமை உவமிக்கப்படும் பொருளுக்கு ஒரு பகுதி மட்டுமே ஒத்திருப்பது].

தமிழ் இலக்கணத்தில் 'புணர்ச்சி விதி' என்று ஒன்று உண்டு. இதில் இரண்டு சொற்கள் இணைவது 'புணர்ச்சி' எனப்படும்.

கழுதை+குட்டி... இந்த இரண்டும் இணையும்போது(புணரும்போது) 'க்' தோன்றும்(மிகும்) என்பது இலக்கண விதி...' கழுதை'க்'குட்டி.

ஆக, புணர்ச்சி என்பதற்கு நேரான பொருள் 'இணைதல்' என்பதுதான். 

.ராசாவைக் கண்டிக்கிற மரமண்டையர்களுக்குத்தான் இது குறித்த அறிவு இல்லையென்றால், தமிழறிஞரான கலைஞரின் மகன் ஸ்டாலினுக்கும் இல்லாமல்போனது மிகவும் வருந்துதற்குரியது!

* * * * *

*https://www.hindutamil.in/news/tamilnadu/arajas-tweet-creates-furore

வெள்ளி, 22 மே, 2026

எஸ்.பி.வேலுமணி இன்று[22.05.2026]சொன்னதும் சொல்லாமல் மறைத்ததும்!

“நாங்கள் பதவிக்காக ‘தவெக’ அரசை ஆதரிக்கவில்லை”[https://tamil.getlokalapp.com/tamilnadu-news/t’haweka-s-place-in-the-cabinet-s-p-velumani-explains-16809466].

முன்னாள் ‘அதிமுக’ அமைச்சர் வேலுமணி ஒரு பேட்டியில்[22.05.2026] மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்லாமல் மறைத்தது.....

“எனக்கு அளிக்கும் ஆதரவுக்குச் சன்மானமாக அமைச்சர் பதவி வேண்டுமா, அல்லது பதவியில் இருந்தால் 5 ஆண்டுகளில் சம்பாதிக்கும் லஞ்சப் பணத்தை[தோராயமாக] இப்போதே மொத்தமாகப் பெற்றுக்கொள்கிறீர்களா என்று மாண்புமிகு முதலமைச்சர் விஜய் கேட்டார். நாங்கள் இரண்டாவதைத் தேர்வு செய்ததால், அவர் எங்களுக்கு அமைச்சர் பதவி தரவில்லை.”

“தமிழர்கள் படு முட்டாள்கள் ! இது சத்தியம்!! [பகிர்வு]

‘நடந்துமுடிந்த தேர்தலில் வாக்களித்தவர்கள், 70-80களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிடவும் சிந்திக்கும் திறன் குறைந்தவர்கள் என்பதைச் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது, ‘விஜய்’யின் ‘தவெக’வைத் தமிழ் மக்கள் பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றிபெறச் செய்தது.

பிரச்சாரம் செய்வதில் போதிய அக்கறை காட்டாமல், வீட்டில் படுத்துகொண்டிருந்தவர் இந்த விஜய்; ஆறு மணிக்கு மேல் வெளியே தலை காட்டாதவர்; தேர்தல் பரப்புரையில், 20 தொகுதிகளுக்கு மேல் மக்களைச் தேடிப்போய்ச் சந்தித்து வாக்குக் கேட்காதவர்.


முதலமைச்சர் ஆவதற்கான எந்தவொரு தகுதியும் இல்லாத இவரால் அரசை[தமிழ்நாடு] நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.


சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்னதான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.


கடந்த 106 ஆண்டுகளில் தமிழகம் காணாத அளவுக்கு மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தியவர்களைத் தூக்கி எறிந்திருக்கும் இந்த மக்களை என்ன சொல்லிக் கண்டிப்பது?  


சுத்தமாக அரசியல் என்றால் என்ன என்பதையோ, அரசு இயந்திரம் பற்றியோ கொஞ்சமும் அறியாத தற்குறிகளை இன்று பதவிகளில் நியமித்திருப்பவர் இந்த விஜய்.


தமிழ்நாட்டின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறி!


* * * * *

நன்றி: https://namathu.blogspot.com/2026/05/fast-track.html[பதிவின் ஒரு பகுதியை மட்டும் சிறிதே மாற்றி வடிவமைத்துப் பதிவு செய்துள்ளேன்].

வியாழன், 21 மே, 2026

மீண்டும் தமிழ் அவமதிப்பு! மௌனம் சுமக்கும் தமிழினத் தலைவர்கள்!!!

ன்றைய[21.05.2026] ‘தவெக’ அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டு,  அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இது முதலில் பாடப்பட்டிருந்தாலும் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதிபடத் தெரிந்திருந்தும்[முன்பு எப்போதும் எடுத்ததில்லை] தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தராமல் கேவலப்படுத்தியவர் நடிகரும் முதல்வருமான விஜய்தான்[தொடர்புள்ள பதிவு: https://kadavulinkadavul.blogspot.com/2026/05/blog-post_194.html.

இந்த அவமதிப்பைச் சுமந்துகொண்டு திருமாவளவனும் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களும் நிகழ்விலிருந்து ‘வெளிநடப்பு’ச் செய்யாதது தமிழினத்தவரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

விஜய் இப்போது தமிழை அவமதித்தைவிடவும் பெருங்கேடு எதையும் இனி எப்போதும் தமிழுக்குச் செய்துவிட இயலாது.

தமிழர் கட்சியினர்[‘அதிமுக’விலிருந்து பிரிந்தவர்கள் உட்பட] ‘தவெக’ விஜய்க்கு அளித்துள்ள ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெறுதல் அவசியம்.

‘பாஜக’ சங்கிகளின் தலையீட்டை[ஆளுநர் ஆட்சி> திணிப்புகள் செய்தால் கடுமையாக எதிர்த்துப் போராடலாம்]க் காரணம் காட்டி, ‘தவெக’வுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றிடத் தயங்கினால்/தவறினால் தமிழையும் தமிழினத்தையும் காக்கத் தவறிய பெரும் துரோகத்தைச் செய்தவர்கள் ஆவார்கள் அவர்கள்!

'பொலிரோ’ ஓட்டி வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய முதல்வர் விஜய் வாழ்க!!!

//சென்னை, தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக வழங்கப்பட்ட புதிய பொலிரோ(Bolero) வாகனங்களின் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்,  பாதுகாப்பு அதிகாரிகளும் காவலர்களும் பின்னால் அடித்துப்பிடித்துக் ஓடிவர, தலைமைச் செயலக வளாகத்திற்குள் அவர் அந்தக் காரை ஓட்டிப்பார்த்தார்// 

மேற்கண்டது ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான, வெளியாகிக்கொண்டிருக்கும் அரிய நிகழ்வாகும்.

தமிழ்நாட்டின் முதல்வர்களாக ராஜாஜி[சென்னை மாகாணம்], காமராசர், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், தெய்வத்தாய் ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் என்று பலர் பணியாற்றியுள்ள நிலையில், இவர்களில் எவரொருவரும், அரசுக்கு வாங்கப்பட்டதொரு வாகனத்தை ஓட்டிபார்த்ததாக[ஆசைக்காகவும், வாகனத்தின் தரத்தை ஆராய்வதற்காகவும்?] அறியப்படவில்லை.

இது ஒரு வரலாற்றுச் சாதனை.

இது போன்ற இன்னும் பல சாதனைகள் நிகழ்த்த நம் முதல்வர் விஜய் வழிபடும் கர்த்தர், அல்லா, அம்மன்[+ஏராள இந்துக் கடவுள்கள்], சீரடி சாய்பாபா என்று மனித இனத்தால் அறியப்பட்ட... படாத அத்தனைக் கடவுள்களிடமும் கோரிக்கை வைத்துப் பிரார்த்திக்கிறோம்.

வாழ்க நம் முதல்வர்! தொடர்க அவர் நிகழ்த்தும் இதைப் போன்ற சாதனைகள்!!

புதன், 20 மே, 2026

சுத்து தலைவா[மோடி] சுத்து! சாதனை நிகழ்த்தலாம் சுத்து!!

ந்திரா காந்தி,  தனது இரண்டு பதவிக் காலங்களிலும்(1966-1977, 1980-1984) மொத்தம் 52 முறை வெளிநாடு சென்று, 69 நாடுகளைப் பார்வையிட்டார். நம்முடைய மேதகு பிரதமர் மோடிஜி அவர்கள் 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 100-க்கும் அதிகமான தடவைகள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று இந்திரா அவர்களின் சாதனை[?]யை முறியடித்துள்ளார்.

இது இந்திய அளவில் நிகழ்த்திய சாதனையே தவிர, இது விசயத்தில் உலக அளவில் இவரை இரண்டு பேர் மிஞ்சியிருக்கிறார்கள்.

ஒருவர், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் இரண்டாம் ஜான் பால். இவர் 129 நாடுகளுக்கு மேல் பயணம் செய்திருக்கிறார்.

இன்னொருவர், ராணி இரண்டாம் எலிசபெத். இவர் தன் வாழ்நாளில் 116 நாடுகளுக்கு மேல் அதிகாரப்பூர்வமாகப் பயணம் செய்துள்ளார். 

உலகம் சுற்றுவதில் மேற்கண்ட இருவரையும் மிஞ்சி, உலகின் ‘நம்பர் 1 ஊர் சுற்றி’[உலகம் சுற்றியவர்] என்று பெயர் பெற்று, உலக அளவிலான சாதனையாளராக[இதனால் நம் நாட்டிற்கு நல்ல பல நன்மைகள் விளைகின்றனவோ அல்லவோ] நம் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள் திகழ்ந்திட வேண்டும் என்பது நம் பெருவிருப்பம்.

இந்த நம் விருப்பம் மிக விரைவில் நிறைவேற, நம் பிரதமரை இந்த மண்ணுலகுக்கு[மக்களுக்குத் தொண்டாற்ற] அனுப்பி வைத்த முழுமுதல் கடவுளைப் பிரார்த்திக்கிறோம்!

வாழ்க மோடி! தொடர்க அவரின் உலகச் சாதனைகள்!!

* * * * *

*****//பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 வரை[2026]யில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்// -ஊடகச் செய்தி

செவ்வாய், 19 மே, 2026

ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் இத்தனை அயோக்கியர்களா?!

ப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அவர்களை வீட்டொடு முடக்கிவிட்ட தாலிபான் தறுதலைகள், தற்போது திருமணம் தொடர்பாக ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்[செய்தி].

அமெரிக்கா 2021இல் அங்கிருந்து வெளியேறியபோது, பெண்களுக்கு எதிரான ஆட்சியாகத் தங்கள் ஆட்சி இருக்காது எனத் தாலிபான்கள் விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் இயற்றிய சட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே அமைந்தன.

தனியாக வெளியே செல்லக்கூடாது, ஒட்டுமொத்த உடம்பையும் மறைக்கும் வகையில் ஆடை[பர்தா] உடுத்தல் வேண்டும், உடன் பணிபுரியும் ஆண்களுடன் நெருங்கிப் பழகக் கூடாது என்று மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறுவோருக்குக் குலை நடுங்க வைக்கும் தண்டனைகளையும் வழங்கினார்கள்; வழங்குகிறார்கள்.

இப்போது, ‘திருமணம் செய்யவிருக்கும் ஒரு கன்னிப் பெண், அவளின் விருப்பம் அறியப்படும்போது, அவள் அமைதியாக[மௌனம்] இருந்தால், அது அவளின் திருமணத்திற்கான சம்மதமாகவே எடுத்துக்கொள்ளப்படும்’ என்னுமொரு கொடூரச் சட்டத்தை அமலாக்கியிருக்கிறார்கள் அந்தக் கொடுங்கோலர்கள். மௌனம்[அமைதி காப்பது] என்பது பெரும் உணர்ச்சிப் போராட்டங்களின்போது அவற்றிலிருந்து சற்றேனும் விடுபடுவதற்குக் கையாளப்படும் எளிய வழிமுறை என்பதை அறியாத நீதிமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்/சிறுமியர்களுக்குத் திருமணம் செய்விப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு அதிகாரமும் அந்தப் பிள்ளைகளின் தந்தை & தாத்தாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண்களால் 10 மாதம் சுமந்து பெற்றெடுக்கப்பட்ட இந்தத் தலிபான் தடியர்களுக்குப் பெண்கள் மீது இத்தனை வன்மமா?

ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தத் தறுதலைகளைக் கண்டித்துத் தண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது உலகம் கண்டிராத பேரதிசயமாகும்.

அணு ஆயுதத் தயாரிப்பைக் காரணம் காட்டி, ஈரான் மீது போர் நடத்திக்கொண்டிருக்கும் ‘பெரிய அண்ணன்’ என்று மரியாதையுடன் அழக்கப்படும் ’டிரம்ப்’கூட, இது விசயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை!

கடவுளால் அனுப்பப்பட்ட நம் பிரதமர் மோடிப் பெருமகனார்கூட, தன்னை அனுப்பிவைத்த கடவுளிடம் கோரிக்கை வைத்து, தலிபான்களை அழித்து, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு[குறிப்பாகப் பெண்கள்]ச் சுய ஆட்சி நடத்தும் உரிமையைப் பெற்றுத் தராதது ஏன் என்பதும் புரியவே இல்லை!!

https://www.indiatoday.in/world/story/taliban-family-law-afghanistan-girls-silence-marriage-consent-2913069-2026-05-17

திங்கள், 18 மே, 2026

“நிமிர்ந்து நிற்கப் பழகுங்கள் திரு.செங்கோட்டையன்”

மாண்புமிகு நிதியமைச்சர் கோபி செங்கோட்டையன் அவர்களுக்கு வணக்கம்.

சாதித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

தமிழ்நாடு அரசியலில் உங்களின் பங்கு இடையே சற்றுத் தொய்வுக்குள்ளானாலும், அரசாட்சியில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகப் பணியாற்றி மக்களின் பாராட்டுதலைப் பெற்றவர் நீங்கள். உங்களுக்கு அறிவுரை வழங்குவதற்கான தகுதி வெகு சாமானியனான எனக்கு இல்லை என்றாலும், தவிர்க்க இயலாத நிலையில் இந்தப் பரிந்துரைப் பதிவைத் தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

தமிழ்நாட்டு அரசியலில் இன்றையக் கத்துக்குட்டிகளுக்கு முன்னோடியாகத் திகழும் நீங்கள், 'விஜய்'யுடன் ஆளுநரைச் சந்தித்தபோதும், நீங்கள் பதவி ஏற்றபோதும், 'விஜய்’யை முதல்வர் இருக்கையில் அமரச் செய்தபோதும் வெளிப்பட்ட உங்களின் மெய்ப்பாடுகள் மக்களை முகம் சுளிக்க வைப்பனவாகவும், உங்களின் மதிப்பைக் குறைப்பனவாகவும் உள்ளன.

கீழ்க்காணும் காணொலிகளை இப்போது கூர்ந்து நோக்குங்கள். 

ஆளுநரைச் சந்தித்தபோது, உடன்வந்தவர்கள் இயல்பாக நின்றுகொண்டிருக்க, நீங்கள் மட்டும் முன்புறமாகக் கைகோர்த்து மிகு பணிவு காட்டியிருக்கிறீர்கள்; மற்றவர்களைப் பார்த்த பின்னரே பக்கவாட்டில் கைகளைத் தொங்கவிட்டீர்கள்.

 

பதவி ஏற்றவுடன் முதல்வரை எதிர்கொண்டபோது அவர் எழுந்து நின்று கைகுலுக்கினார். நீங்களும் நின்ற நிலையில் கைகுலுக்கி நன்றி சொல்லி நகர்ந்திருக்கலாம். கூனிக்குறுகித் தலைதாழ்த்தி நன்றி பாராட்டியிருக்கிறீர்கள்.

முதல்வர் இருக்கையைச் சுட்டிக்காட்டி அவரை அமரச் சொல்லும்போதும், ஏதோ தகவல் சொல்லும்போதும், முதுகு வளைத்துப் பவ்வியமாகக் கைநீட்டி, அனுமதி வேண்டுவதுபோல் பாவனை செய்து பணிவு காட்டியிருக்கிறீர்கள்.

நம்மினும் மேம்பட்ட பதவியில் உள்ளவர்களுக்கு, உரிய நேரங்களில் உரிய வகையில் மரியாதை செலுத்தினாலே போதும். அடிமை போல் குழைந்தும் நெளிந்தும் பணிவு காட்டுவது தேவையில்லை.

இது மன்னராட்சிக் காலம் அல்ல என்பதை மறக்க வேண்டாம் மாண்புமிகு அமைச்சர் அவர்களே!

ஞாயிறு, 17 மே, 2026

‘தவெக’ ஆட்சி தப்பிப் பிழைக்குமா?[காணொலி> நம்பகத்தன்மை 100%]

பொய்யும் புளுகும் புனைந்துரையும் தவிர்க்கப்பட்டு, நம்பத்தக்க தகவல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், கீழ்க்காணும் காணொலியைப் பகிர்கிறேன்; நீங்களும்[விரும்பினால்] பிற பதிவர்களுடன் பகிரலாம்.

வாருங்கள் ரஜினி! வெற்றி 100% உறுதி!!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ரஜினி. அப்போது அவர்….. 

“நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வென்றிருப்பேன். மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்த சமயத்தில் விஜய் வந்துள்ளார்....[https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-not-trying-for-dmk-and-admk-alliance].

தலைவரே, மாபெரும் தப்புப் பண்ணிட்டீங்க. நீங்கள் முன்கூட்டியே அரசியலுக்கு வருகைபுரிந்து, முதல்வராகியிருந்தால் தமிழ்நாடு ‘சுபிட்சம்’ பெற்றிருக்கும்.


இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இன்றே பெரும்பான்மை இந்துக்களின் சார்பாக, 100% இந்துவான நீங்கள் ஒரு கட்சி தொடங்குங்கள்.


தொடங்கினால், சிறுபான்மைக் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியான விஜய் கட்சி[தவெக]யின் 100% தொண்டர்கள் உங்கள் கட்சியில் இணைவது 100% உறுதி.


விரைவில் ‘தவெக’ ஆட்சி கவிழ்க்கப்படுவது 100% உறுதி[25 ‘அதிமுக’வினர் பதவி நீக்கம் & ‘விசிக’, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு திரும்பப்பெறல் காரணம்] என்னும் நிலையில், ஆறு மாதங்களுக்குள் மறு தேர்தல் வரும். போட்டியிட்டு 100% தொகுதிகளைக் கைப்பற்றி, நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது 100% உறுதி.


ஒருவேளை, விஜய் ஆட்சி கவிழ்க்கப்படாவிட்டால்.....


தொண்டர்களுக்கு நீங்கள் ஆணையிட்டுத் தமிழ்நாட்டைப் போராட்டக் களமாக்கி, ‘விஜய்’யை ராஜினாமா செய்ய வைத்து, நடக்கும் தேர்தலில் வென்று ஆட்சிபீடம் ஏறலாம்.


இன்றே ஒரு கட்சி தொடங்குங்கள் தலைவரே.


100% வெற்றி உறுதி! வாழ்த்துகள்!!

சனி, 16 மே, 2026

வெற்று விஜய் தேர்தல் வெற்றிக்குப் பின் ‘ஜோசப்’ விஜய் ஆனதன் ரகசியம்!!!

 apostletinugeorge's profile picture

apostletinugeorge

 

In what appears to be a first in the history of the Tamil Nadu Legislative Assembly, the newly elected Speaker - John Christian Devaram Prabhakar(JCD Prabhakar) opened proceedings by quoting directly from the Christian Bible from the constitutional Chair itself.


The Speaker: Bible Verses From the Chair


John Christian Devavaram Prabhakar, whose full name is itself a declaration of faith, was unanimously elected as Speaker of the Tamil Nadu Legislative Assembly on 12 May 2026, with Chief Minister Joseph Vijay himself proposing his name. He is a devout Christian and an active lay evangelist who has spent over two decades running a personal Bible distribution ministry across Tamil Nadu, beginning in 2004 with 50 Bibles distributed on Chennai buses and beaches, a mission that grew to 5,000 Bibles a month – this is per his own admission.


On taking the Chair, Speaker Prabhakar addressed the House and quoted three passages directly from the Bible.

//தமிழக சட்டமன்றச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் தனது ஏற்புரையில், பைபிளிலிருந்து(புனித வேதாகமம்) மட்டுமே மூன்று வசனங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்; கீதையிலிருந்தோ திருக்குர்ஆனிலிருந்தோ மேற்கோள்கள் எதையும் காட்டவில்லை[AI செய்தி]//
மேற்கண்ட தகவல்களிலிருந்து.....
முகத்தைப் பார்த்தால் அப்பாவியாகத் தோன்றும் முதல்வர் விஜய், அழுத்தமானதொரு கிறிஸ்தவ மதப் பற்றாளன் என்பது புரிகிறது. கண்ட கண்ட மதக் கோயில்களுக்கெல்லாம் சென்று, மக்களின் வாக்குகளை அள்ளும் உத்தி அறிந்த மகா தந்திரசாலி என்பதையும் அறிய இயலுகிறது!
விசிலடிச்சான் குஞ்சுகள் பெரும் எண்ணிக்கையில் உள்ளவரை  ஒரிஜினல் கிறிஸ்தவன் ஜோசப் காட்டில் மழைதான்!

‘சார்பதிவாளர்கள் மக்களை நிற்கவைத்துப் பேசக்கூடாது’ -அரசு! லஞ்சம் வாங்கும்போது?

//சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்கவைத்துப் பேசக்கூடாது. பொதுமக்களுக்கு நாற்காலி வழங்கி அமரவைத்து மட்டுமே பேச வேண்டும் என்று பதிவுத்துறைத் தலைவர்(IG) கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்//[ஊடகச் செய்தி].  

பொதுமகன்[பொதுமக்கள்] நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருக்க, அதிகாரி சற்றே குனிந்து தலை தாழ்த்தி, இரு கரம் நீட்டித்தான் லஞ்சம் வாங்குதல் வேண்டும்’[ஒளிவுமறைவு கூடாது] என்றும் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டால், புதிய அரசுக்கு அமோகமான பாராட்டுகள் கிடைக்கும்.

எந்தவொரு கொம்பன் முதல்வராக வந்தாலும், ஏதாவதொரு திருட்டு[+குறுக்கு] வழியில் இவர்கள் கையூட்டு[லஞ்சம்] வாங்குவது தொடரும் என்பது உறுதி. அதனால்தான் இதையும் சட்டபூர்வமாக்கி, வாங்குபவர் கொடுப்பவருக்கு மரியாதை செலுத்துதல் வேண்டும் என்கிறோம்.

***கிண்டல், நக்கல் எல்லாம் இல்லாமல், அப்பட்டமாகப் புதிய முதலமைச்சர் விஜய் அவர்களிடம் நாம் வலியுறுத்த விரும்புவது.....

பொதுமக்களுக்கு மரியாதை மதிப்பு எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்; அவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் இவர்கள்[சார்பதிவாளர்கள்] கொள்ளையடிப்பதைத் தடுக்க முதலில் வழி தேடுங்கள்.

லஞ்சம் வாங்காத சார்பதிவாளர்களே இல்லை என்னும் நிலையில்[பதிவு செய்வதிலும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன], இந்த அட்டூழியத்தைத் தடுத்து நிறுத்துவது அத்தனை எளிதல்ல என்பதையும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் முதலமைச்சரும் புரிந்துகொள்வது மிக முக்கியம்.