‘தவெக’வின் அமைச்சரவையில் ஐயூஎம்எல், விசிக இடம்பெறுவது குறித்து ஆ.ராசாவின் கண்டன ட்வீட்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. நேற்றிரவு 11.16 மணிக்கு ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார்[செய்தி].
அதில் அவர்,
முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’
மூட சாதியை நொறுக்க வேண்டிய
‘சிறுத்தையும்’
வெறும் ‘விசில்' சத்தத்திற்கு
முட்டுக் கொடுக்குமென்றால்;
பூ முடித்தவனை புறந்தள்ளி -
புணர்ச்சிக்கு வேறிடம்
தேடுவதில் தவறில்லை!*
‘திமுக’வுக்கும் ‘விசிக’, ‘ஐயூஎம்எல்’ கட்சிகளுக்குமான உறவு மிக மிக வலிமையானது என்பதற்கு ஆ.ராசா தந்துள்ள ஒப்புமை[உவமை> உதாரணம்] மிகப் பொருத்தமானது; அற்புதமானதும்கூட.
‘கணவனுக்கும்[பூ முடித்தவன்] மனைவிக்குமான உறவைப் போன்றது அது; பிரிதல் கூடாது; பிரிந்தால் அந்தக் கணவனோ மனைவியோ குடும்ப உறவுக்குப் பிற ஆடவனையோ பெண்ணையோ நாடுவதைப் போன்றது’(விசிக'வும் இஸ்லாமியர் கட்சியும் வேறு கூட்டணியில் இணைந்ததைக் குறிப்பிடுகிறார் ஆ. ராசா)அது’ என்கிறார் ஆ.ராசா.
இங்கே ‘புணர்ச்சி’ என்னும் சொல் கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்படுவதைக் குறிக்கிறது. கட்சிகள் இணைவதற்கும் உடலுறவுக்கும் சம்பந்தமே இல்லை[கூட்டணிக் கட்சிக்காரர்கள் பலரும் தங்களுக்குள் உடலுறவுகொண்டு இன்பம் துய்ப்பார்களோ ஓரினச் சேர்க்கை உட்பட?! ஹி...ஹி...ஹி!!!]
இது ஒருபுடை ஒப்புமை[உவமை உவமிக்கப்படும் பொருளுக்கு ஒரு பகுதி மட்டுமே ஒத்திருப்பது].
தமிழ் இலக்கணத்தில் 'புணர்ச்சி விதி' என்று ஒன்று உண்டு. இதில் இரண்டு சொற்கள் இணைவது 'புணர்ச்சி' எனப்படும்.
கழுதை+குட்டி... இந்த இரண்டும் இணையும்போது(புணரும்போது) 'க்' தோன்றும்(மிகும்) என்பது இலக்கண விதி...' கழுதை'க்'குட்டி.
ஆக, புணர்ச்சி என்பதற்கு நேரான பொருள் 'இணைதல்' என்பதுதான்.
ஆ.ராசாவைக் கண்டிக்கிற மரமண்டையர்களுக்குத்தான் இது குறித்த அறிவு இல்லையென்றால், தமிழறிஞரான கலைஞரின் மகன் ஸ்டாலினுக்கும் இல்லாமல்போனது மிகவும் வருந்துதற்குரியது!
* * * * *
*https://www.hindutamil.in/news/tamilnadu/arajas-tweet-creates-furore