எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 1 ஆகஸ்ட், 2018

'இதயமாற்று அறுவை'க்குப் பின்னரான 'ஆயுள்' காலம்!

'இதயமாற்று அறுவைச் சிகிச்சை பற்றி அறிந்திருப்பினும், பொருத்தப்பட்ட மாற்று இதயத்துடன் ஒருவர் எவ்வளவு காலம் வாழ முடியும்?' என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது எழுவது உண்டு.

'The Week'[June 24, 2018] ஆங்கில இதழில் வெளியான ஒரு கட்டுரையை வாசித்தபோது அதற்கு விடை கிடைத்தது.

'தில்லி'யில் உள்ள 'BLK' மருத்துவமனையின், இதய அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் 'டாக்டர் அஜய் கவுல்' என்பார் அளித்த ஒரு பேட்டியில்.....

இதயமாற்று அறுவை செய்துகொள்ளும் நோயாளிகளில், ஓராண்டைக் கடந்தவர்களில் ஏறத்தாழ,  72% பேர் 5 ஆண்டுகளும்,  20% நபர்கள் 20 ஆண்டுகளும் வாழ்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

'உலக அளவில், ஆண்டுதோறும் 4500 அறுவைகள் செய்யப்படுவதாகவும்[அமெரிக்காவில் மட்டும் 50%. இந்தியாவில் மிகக் குறைவு], மாற்று உறுப்பை நோயாளியின் உடம்பு ஏற்காத காரணத்தால் 20% அறுவைகள் தோல்வியில் முடிகின்றன என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

கூடுதல் தகவல்களை இணைப்புகளில் வாசித்தறியலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------