எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 22 ஜனவரி, 2025

10.00 கோடி முட்டாள்களைக் குளிப்பாட்டிக் குதூகளிக்கச் செய்த கும்பமேளா!!!

சுமார் 10.00 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாக 54.96 கோடிப் பக்தர்கள் புனித நீராடினர்..... [செய்தி]

கங்கையில் ஓடும் அசுத்த நீரைப் புனித நீர் என்றும், நீராடினால் பாவங்கள் நீங்கிப் பரமன் பதம் சேரலாம் என்றும் நம்ப வைத்தவர்கள் அயோக்கியர்கள். 

அயராமல் அதைப் பரப்புரை செய்தவர்கள்/செய்பவர்கள் குற்றவாளிகள்; இவர்கள் எல்லாம் கடும் தண்டனைக்கு உரியவர்கள்.

பக்தியின் பெயரால் இம்மாதிரிக் குற்றங்களைச் செய்யும்[மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்] ஆன்மிகப் பித்தர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

வழங்குபவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்; மூடத்தனங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் கோடி கோடி கோடியாகச் செலவு செய்கிறார்கள்.

மக்களால்தான் இவர்களைத் திருத்த முடியும்.

முன்னதாக இவர்கள் திருந்த வேண்டும். 

திருந்துவார்களா?