புதன், 22 ஜனவரி, 2025

08.81 கோடி முட்டாள்களைக் குளிப்பாட்டிக் குதூகளிக்கச் செய்த கும்பமேளா!!!

சுமார் 8.81 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 54.96 கோடிப் பக்தர்கள் புனித நீராடினர்..... [செய்தி]

கங்கையில் ஓடும் அசுத்த நீரைப் புனித நீர் என்றும், நீராடினால் பாவங்கள் நீங்கிப் பரமன் பதம் சேரலாம் என்றும் நம்ப வைத்தவர்கள் அயோக்கியர்கள். 

அயராமல் அதைப் பரப்புரை செய்தவர்கள்/செய்பவர்கள் குற்றவாளிகள்; இவர்கள் எல்லாம் கடும் தண்டனைக்கு உரியவர்கள்.

பக்தியின் பெயரால் இம்மாதிரிக் குற்றங்களைச் செய்யும்[மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்] ஆன்மிகப் பித்தர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

வழங்குபவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்; மூடத்தனங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் கோடி கோடி கோடியாகச் செலவு செய்கிறார்கள்.

மக்களால்தான் இவர்களைத் திருத்த முடியும்.

முன்னதாக இவர்கள் திருந்த வேண்டும். 

திருந்துவார்களா?