செவ்வாய், 21 ஜனவரி, 2025

ஒரு கள் குடியனா ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவன்!?!?!

னைமரத்தில், பாளை சீவி அதன் வடிநீரை, சுண்ணாம்பு தடவிய மட்பாண்டத்தில் சேமித்தால் அது பதநீர்;  இனிப்புச் சுவை கொண்டது; இது போதை தராது; மருத்துவக் குணம் உள்ளது.

வெறுமனே மண்பாண்டத்தில் புளிக்கவைத்தால்[சுண்ணாம்பு கலக்காமல்] அது கள். அதிக அளவில் போதை தராமல் ஓரளவுக்குப் போதை தரும்[அதிகம் குடித்தால் போதை அதிகமாகும்] என்பதால் இதுவும் போதைப் பொருள்தான் என்பதில் சிறிதளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

அதிக அளவோ குறைந்த அளவோ ஆரம்ப காலப் போதைப் பழக்கம் குடிப்பவனைப் பின்னர் போதைக்கு அடிமையாக்க, அதிக அளவில் போதை தரும் மது போன்றவற்றிற்குக் அவன் ஆயுட்கால அடிமை ஆவான்[கணிசமான அளவில் நன்மை பயக்கக்கூடும்] என்பதால்தான் தமிழ்நாடு அரசு கள்ளுக்குத் தடை விதித்துள்ளது.

தடை நீடிக்கும் நிலையில்.....

தன்னைத் தமிழினத்தின் தலைவன் என்னும் பிம்பத்தைக் கட்டமைத்திட, அடாத செயல்களில் ஈடுபடும் சீமான்[’நாம் தமிழர்’] கள் குடிப்பதைக் காட்சிப்படுத்தும் ஒரு காணொலி ‘யூடியூப்’இல் வெளியாகியுள்ளது.

கள் அருந்தத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ள நிலையில், இப்படியொரு காணொலியை இவன் வெளியிட்டிருப்பது இவனின் ஆணவப் போக்கின்...  அடங்காத திமிர்த்தனத்தின் அடையாளம் ஆகும்.

இதன் மூலம் இவன் தன் கட்சித் தொண்டர்களையும் குடிக்கத் தூண்டுகிறான் என்பது அறியத்தக்கது.

எனவே, சற்றும் தயங்காமல் இவன் மீது உரிய நடவடிக்கை எடுப்பது மிக அவசியம் என்பதை தமிழ்நாடு அரசுக்கு நினைவூட்டுகிறோம்.

***இவன் பிறவிக் குடிகாரன் என்பதை உறுதிப்படுத்தும் பதிவு:

#கள் குடித்துவிட்டுத்தான் கல்லூரிக்கே போவேன் - சீமான்

https://x.com/tamiltalkies/status/1881649533266063494?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet#


கள் குடியன் சீமான்[காணொலி]: