செவ்வாய், 27 ஜனவரி, 2026

‘புரட்சி’ போதும்; ‘தமிழர்’ வேண்டாம் எடப்பாடியாரே!


 
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் வருங்கால முதல்வருமான[?] எடப்பாடியாருக்கு வணக்கம்.

உம்முடைய ஆயுட்காலம்வரை, நீர் நிரந்தர முதல்வராக நீடிக்கவும் நம் வாழ்த்துகள்.

நீர் விரும்பினால், மோடியை வீழ்த்திவிட்டு இந்திய நாட்டின் பிரதமராகவும் ஆகலாம்.

இந்த நாட்டின் சர்வாதிகாரியாக ஆவது உம் விருப்பம் எனின், அவ்வாறு ஆகவும் நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இந்நிலையில், எடப்பாடியார் என்று அழைக்கப்படும் உம்முடைய தாள் பணிந்து நாம் வைக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. அது.....

மேற்கண்ட படங்களில் உள்ளது போல்,  ‘புரட்சித் தமிழர்’ என்று நீரே அடைமொழி சூட்டிக்கொள்வதை நிறுத்துவீர் எடப்பாடியாரே.

‘புரட்சி’ சேர்த்து, ‘புரட்சித் தலைவன்’[எம்ஜியார் புரட்சித் தலைவர்] என்று சொல்லிக்கொள்ளும்; ‘தமிழர்’ வேண்டாம்.

தமிழன் யார் என்பதே உமக்குத் தெரியாது. தரணியாண்ட தமிழர்களின் வரலாற்றையும் நீர் அறிந்திருக்கவில்லை.

கம்ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்லி, உலகறிய அவமானப்பட்ட உமக்கு, ‘தமிழன்’ என்று சொல்லிக்கொள்வதற்கான தகுதி கொஞ்சமும் இல்லை.

முன்னாள் முதல்வரான ஒரு பெண்மணிக்குப் பணிப்பெண்ணாக இருந்த ஒருவரின் காலை, தரையில் தவழ்ந்துபோய்த் தொட்டுக் கும்பிட்டீரே, அப்போதே தமிழன் என்று பெருமிதப்படுவதற்கான அருகதையை முற்றிலுமாய் இழந்துவிட்டீர்.

இது பலரறிய நீர் செய்த இழி செயல். திரை மறைவில், ஆதிக்க வெறி பிடித்த இன்னும் எவனெவன் காலிலெல்லாமோ விழுந்திருப்பீர் என்று மக்கள் உம்மைச் சந்தேகப்படுகிறார்கள்.

எனவே.....

‘தமிழன்’ என்று சொல்லிக்கொள்வதற்கான 00001% தகுதிகூட உமக்கு இல்லை என்பதால், இனியும் உம்முடைய பெயருக்கு முன்னால் ‘புரட்சித் தமிழர்’ என்று அடைமொழி சேர்த்துத் தமிழினத்தை இழிவுபடுத்தாதீர்.

படுத்தினால்.....

அதற்கான தண்டனையை 2026 தேர்தலில் தமிழர்கள் வழங்குவார்கள்!