எனது படம்
எந்தவொரு கட்சி சார்பாகவும் தேர்தலில் போட்டியிடுகிறவனின் தனிப்பட்ட குறை நிறைகளைப் பொருட்படுத்தாமல், இந்நாளில் அவன் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்காவே வாக்குரிமை பெற்ற நம் மக்கள் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆதாயம் கருதிப் பிறிதொரு கட்சிக்கு[குறிப்பாக ஆளுங்கட்சி] ஆதரவாகச் செயல்பட்டால், தன் கட்சிக்கு மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவன் ஆகிறான் அவன். அந்த அயோக்கியன் தாலி கட்டிய தன் பெண்டாட்டிக்குக்கூடத் துரோகம் செய்யத் தயங்கமாட்டான்!

சனி, 4 ஏப்ரல், 2026

இந்தப் பச்சோந்தி[விஜய்] கட்சிக்குப் பாடை கட்டுவோம்!!!

 மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிய ஆயுள் முழுதும் போராடிய பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கு மரியாதை செலுத்துவதாகச் சொல்லும் இவன்[மரியாதை தேவையில்லை], தன்னைப் பெரியார் தொண்டனாகக் காட்டிக்கொள்ளும் காரியவாதி என்பதற்குக் கீழ்க்காணும் செய்தியே ஆதாரம்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, சென்னை விமான நிலையத்திலிருந்து பரப்புரை வாகனத்தில் ரோடு ஷோவாக வந்த விஜய், 11.20 மணியளவில், பாலக்கரை மாநகராட்சி அலுவலகம் சென்ற நிலையில், உடனடியாக உள்ளே சென்று வேட்புமனு தாக்கல் செய்யாமல் கேரவனில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, 12 மணிக்கு நல்ல நேரம் என்பதால், அதுவரை கேரவனில் இருந்துவிட்டு அதன்பிறகு வேட்பு மனு தாக்கல் செய்தார்[https://tamil.oneindia.com/news/chennai/vijay-files-nomination-in-trichy-east-51-restrictions-imposed-for-campaign-786415.html].

‘நல்ல நேரம்’ பார்த்து மனுவைத் தாக்கல் செய்த இந்தப் படுமூடன், வேடிக்கை பார்க்க வரும் கூமுட்டை ரசிகர் கும்பலின் ஆதரவில், தான் தன்னிகரற்ற ஒரு தலைவன் என்பதான பிம்பத்தை உருவாக்கித் தமிழ்நாட்டை ஆள நினைக்கிறான். இவனையும் இவனின் கட்சி வேட்பாளர்களையும் படுதோல்வி அடையச்செய்வது, தமிழர் நலனில் அக்கறைகொண்ட அத்தனைப் பேர் கடமையும் ஆகும்.