எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 5 ஜூலை, 2018

சாக்ரடீஸின் சாமுத்திரிகா லட்சணமும் மனிதகுலத்தின் அவலட்சணமும்!!

'கல்கண்டு' இதழிலிருந்தும், நூலகத்தில் சீந்துவாரற்றுக் கிடந்த ஒரு சிற்றிதழிலிருந்தும், சுட்டெடுத்த சீரிய தகவுரைகளை இணைத்துப் பதிவாக்கியிருக்கிறேன். 'என்னுரை' ஏதும் இங்கு இடம்பெறவில்லை.

தடித்த உதடுகள், தட்டையான மூக்கு, வட்டமான கண்கள், குட்டையான உடம்பு என்று தோற்றமளித்தவர் அறிஞர் 'சாக்ரடீஸ்'.
ஒரு சமயம், சாமுத்திரிகா லட்சணங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவர், சாக்ரடீஸின் சீடர்கள் முன்னிலையில், ''சாக்ரடீஸின் அவலட்சணங்கள், அவர் துர்க்குணங்கள் கொண்டவர் என்பதைக் காட்டுகின்றன'' என்று சொன்னாராம்.

இதைக் கேட்ட சாக்ரடீஸின் சீடர்கள் அந்த மனிதரை அடிப்பதற்குப் பாய்ந்தார்கள்.

அவர்களைத் தடுத்த சாக்ரடீஸ், ''அவர் சொல்வது உண்மைதான். என்னிடம் துர்க்குணங்கள் இருந்தன. என்னுடைய மன உறுதியாலும் இடைவிடாத முயற்சியாலும் அவற்றை அடக்கி ஆண்டேன்'' என்றார்# -'கல்கண்டு', 06.06.2018.
                                      *                                *                                 *

'உயர்ஞான தீபம்' என்னும் பக்திச் சிற்றிதழிலிருந்து.....
இரு இதழ்களுக்கும் என் நன்றி.