'கல்கண்டு' இதழிலிருந்தும், நூலகத்தில் சீந்துவாரற்றுக் கிடந்த ஒரு சிற்றிதழிலிருந்தும், சுட்டெடுத்த சீரிய தகவுரைகளை இணைத்துப் பதிவாக்கியிருக்கிறேன். 'என்னுரை' ஏதும் இங்கு இடம்பெறவில்லை.
தடித்த உதடுகள், தட்டையான மூக்கு, வட்டமான கண்கள், குட்டையான உடம்பு என்று தோற்றமளித்தவர் அறிஞர் 'சாக்ரடீஸ்'.
ஒரு சமயம், சாமுத்திரிகா லட்சணங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவர், சாக்ரடீஸின் சீடர்கள் முன்னிலையில், ''சாக்ரடீஸின் அவலட்சணங்கள், அவர் துர்க்குணங்கள் கொண்டவர் என்பதைக் காட்டுகின்றன'' என்று சொன்னாராம்.
இதைக் கேட்ட சாக்ரடீஸின் சீடர்கள் அந்த மனிதரை அடிப்பதற்குப் பாய்ந்தார்கள்.
அவர்களைத் தடுத்த சாக்ரடீஸ், ''அவர் சொல்வது உண்மைதான். என்னிடம் துர்க்குணங்கள் இருந்தன. என்னுடைய மன உறுதியாலும் இடைவிடாத முயற்சியாலும் அவற்றை அடக்கி ஆண்டேன்'' என்றார்# -'கல்கண்டு', 06.06.2018.
* * *
அதிகபட்சம் ஒரு 5000 வருசம், மனுசன் அழிஞ்சுடுவான்.
பதிலளிநீக்குகடவுளைக் கொண்டாடுபவன் மனிதன் மட்டுமே. இந்த இனம் அழிந்துபோகக் கடவுள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்!
நீக்குநன்றி புதுமுகன்.
அருமை
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி.
நீக்குஅரிய தகவல்தான் நன்றி நண்பரே
பதிலளிநீக்குசிற்றிதழ்களில் சில நேரங்களில் இம்மாதிரி அரிய தகவல்கள் கிடைப்பதுண்டு.
நீக்குநன்றி நண்பரே.