எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 3 மே, 2023

அம்மம்மா!... மாம்பழத்தில்தான் எத்தனை எத்தனை நன்மைகள்!!

*மாம்பழம் ஒரு வெப்பமண்டலப் பழமாகும். இது சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததும் ஆகும்.

*மாம்பழம் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றம் ஆகியவற்றின் மூலமாகும். இது ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மேம்படுத்தும்.

*மாம்பழத்தில் செரிமான நொதிகள் உள்ளன. அவை புரதங்களை உடைத்துச் செரிமானத்திற்கு உதவுகின்றன.

*மாம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதைத் தடுக்கும்.

*மாம்பழத்தில் அதிக அளவு ‘பெக்டின்’[இது முக்கியமாக, சிட்ரஸ் பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. உணவிலும், குறிப்பாக, ஜாமிலும் ஜெல்லியிலும் பயன்படுத்தப்படுகிறது]. உள்ளது, இது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

*மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C உள்ளன. இப்பழம் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

*மாம்பழத்தில் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இவை கண்பார்வையை மேம்படுத்த உதவுகின்றன.

***சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா?

மருத்துவ நிபுணர்களின் பதில்:

“மாம்பழங்களை உட்கொள்வதால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும் மாம்பழங்களை உட்கொள்வதில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.” 


https://www.livemint.com/web-stories/benefits-of-mango-11680929256535.html

என் பழம் பெருமையும் ‘குமுதம்’ இதழ் வெளியிட்ட என் பழைய கதையும்!!

நம்புங்கள், ‘முனைவர்’[Ph.D] பட்டம் பெற்ற அந்த முன்னாள் அறிஞர்[படம்] நான்தான்!

‘குமுதம்’[12. 8.2009] இதழில் வெளியான ஒ.ப.கதை:

***நீங்கள் வாசிக்காத ‘குமுதம்’ கதைகள் இன்னும் உள்ளன.
பதிவு எழுதக் கைவசம்  ‘சரக்கு’ இல்லாதபோதெல்லாம் அவை வெளியிடப்படும்!

ஹி...ஹி...ஹி!!!