*மாம்பழம் ஒரு வெப்பமண்டலப் பழமாகும். இது சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததும் ஆகும்.
*மாம்பழம் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றம் ஆகியவற்றின் மூலமாகும். இது ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மேம்படுத்தும்.
*மாம்பழத்தில் செரிமான நொதிகள் உள்ளன. அவை புரதங்களை உடைத்துச் செரிமானத்திற்கு உதவுகின்றன.
*மாம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதைத் தடுக்கும்.
*மாம்பழத்தில் அதிக அளவு ‘பெக்டின்’[இது முக்கியமாக, சிட்ரஸ் பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. உணவிலும், குறிப்பாக, ஜாமிலும் ஜெல்லியிலும் பயன்படுத்தப்படுகிறது]. உள்ளது, இது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
*மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C உள்ளன. இப்பழம் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
*மாம்பழத்தில் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இவை கண்பார்வையை மேம்படுத்த உதவுகின்றன.
***சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா?
மருத்துவ நிபுணர்களின் பதில்:
“மாம்பழங்களை உட்கொள்வதால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும் மாம்பழங்களை உட்கொள்வதில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.”
https://www.livemint.com/web-stories/benefits-of-mango-11680929256535.html