“பயங்கரவாதத்தில் ஈடுபடும் இந்திய முஸ்லிம்கள் மனநோயாளிகள்” என்று இந்தியாவுக்கு வருகைபுரிந்துள்ள எகிப்து நாட்டைச் சேர்ந்த மதகுரு[ஷவ்கி இப்ராஹிம் அப்தெல்-கரீம் அல்லம்] கூறினார் என்பது அண்மைச் செய்தி.
“இந்திய முஸ்லிம்கள் பயங்கரச் செயல்களில் ஈடுபடுகிறார்களா, அல்லவா? ஈடுபடுவது உண்மையாயின் அதற்கான காரணம் என்ன?” என்றெல்லாம் ஆராய்வது நம் நோக்கமல்ல.
இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுவதை மதகுரு நம்பினார் என்றால், “இந்திய முஸ்லிம்கள் பயங்கரச் செயல்களில் ஈடுபடுதல் கூடாது[அது நிரந்தரத் தீர்வைத் தராது என்பதால்]” என்று அறிவுரை பகர்வதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம்.
மாறாக, குரானையும் கடவுளையும் இங்கே முன்னிலைப் படுத்தியுள்ளார்[வம்புக்கிழுக்கிறார்?].
“ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நேசிப்பதற்காகத்தான் வெவ்வேறு இனங்களாகப் படைத்தேன்” என்றும், “ஒருவரையொருவர் வெறுக்கவும், தாக்கிக் கொல்வதற்கும் மனிதர்களை நான் படைக்கவில்லை” என்றும், கடவுள் கூறியிருப்பதாக[குரானின் ஓர் அத்தியாயத்தில்]ப் பேசியிருக்கிறார் மதகுரு.
தான்[கடவுள்] அவ்வாறு[ஒருவரையொருவர் கொல்வது] படைக்கவில்லை என்றால், மனிதர்கள் கொடூரப் புத்தியர்களாக ஆவதைத் தடுப்பதோ, அப்புத்தியை அவர்களுக்குப் புகட்டியவர்களை அழிப்பதோ கடவுளுக்கு இயலாமல்போனது பற்றி மதகுரு ஏதும் குறிப்பிடவில்லை.
இஸ்லாம் மதகுருவான இவர் மட்டுமல்ல, இந்து, கிறித்தவம் போன்ற கடவுளைப் போற்றும் முன்னணி மதவாதிகள் எவருமே கடவுளின் இந்த ‘இயலாமை’ குறித்து வாய் திறந்ததில்லை; திறப்பதும் இல்லை.
கடவுளை நற்குணங்களின் இருப்பிடமாக மட்டுமே சித்திரிக்கும் மதவாதிகள், மனிதர்களிடமுள்ள தீக்குணங்களை அவருடன் தொடர்புபடுத்துவதில்லை என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது!
மக்களும் இது குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், மதக் குருக்களையும், கற்பிக்கப்பட்ட கடவுள், அல்லது கடவுள்களையும் கொண்டாடுவதற்குத் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணடிக்கிறார்கள் என்பது நம்மைப் பெரும் கவலைக்கு உள்ளாக்குகிறது!!
https://www.msn.com/en-in/news/other/muslims-involved-in-terror-are-sick-minds-says-egypt-s-top-cleric-on-india-visit/ar-AA1aDkkQ?ocid=msedgdhp&pc=U531&cvid=5a529dbd263543ffad9db0c52780b917&ei=60