இமயத்தில் நம் கொடி நட்டு, கடாரம் வென்று[இது சோழர் காலம். அவர்கள் சமஸ்கிருதத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது தனிக்கதை] பெரும் நிலப்பரப்பை ஆண்ட தமிழினம் குற்றேவல் புரியும் இனமாக மாறிப்போனது மறுக்க முடியாத, மறக்கவும் இயலாத வரலாறு ஆகும்.
அந்த வரலாற்றின் ஒரு சிறு பகுதி:
தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் ஆண்ட காலம் 147 ஆண்டுகள்[1801-1947].
330 ஆண்டுகள் இந்தியா முழுமையும் ஆண்ட டில்லி சுல்தானியர் தமிழகத்தை மட்டும் ஆண்ட காலம் சுமார் 50 ஆண்டுகள்.
விஜயநகர ஆந்திர நாயக்கர்கள் தமிழகத்தை ஏறத்தாழ 250 ஆண்டுகள் [1572-1736] ஆண்டிருக்கிறார்கள்.
{மதுரை நாயக்கர் வழி வந்த நாயக்கர்கள் தஞ்சையை 1532 முதல் 1765 வரை [233 ஆண்டுகள்] ஆண்டிருக்கிறார்கள்].
தஞ்சையை மராட்டியர் ஆண்ட து 179 ஆண்டுகள் [1676-1855].
ஆர்க்காட்டைத்[சென்னை] தலைநகராகக் கொண்டு வட தமிழ்நாட்டை இசுலாமிய நவாப்புகள் ஆண்டது 110 ஆண்டுகள் [1710-1820].
இந்தவொரு அவலத்துக்குக் காரணமான அடிமைப் புத்தி தமிழனை ஆட்கொண்டதற்கான காரணங்களுள் குறிப்பிடத்தக்கது.....
மதநம்பிக்கை.
தமிழன் பின்பற்றிய மதங்கள் அனைத்தும்[புத்தம், சமணம் விதிவிலக்கானவை] மூடநம்பிக்கையில் உருவாகி, மூடநம்பிக்கைகளை வளர்த்தவை.
‘மனிதப் பிறப்பின் இலக்கு, இறைவன் திருவடியைச் சேர்தலே’ என்று வலியுறுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டவை.
அவை, சிந்திக்கும் அறிவை மழுங்கடித்து, பரம பக்தியில் சுகம் காண வைத்தன; இனப்பற்றையும் தன்மான உணர்வையும் அடியோடு இழக்கச் செய்தன. பன்னெடுங்காலம் அன்னியருக்கு இவன் அடிமையாக வாழ்ந்ததற்கான முக்கியக் காரணம் இதுதான்.
இப்போதும் அந்த அடிமைக் குணத்திலிருந்து இவன் முற்றிலுமாய் விடுபடவில்லை.
காலம் மாறுகிறது. உலகம் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. பெரும்பான்மைத் தமிழன் தன்மானத் தமிழனாக எப்போது மாறுவான்?
இப்போதைக்கு விடை அறிய இயலாத கேள்வி இது!
* * * * *
***மறைந்த தமிழறிஞர் க.ப அறவாணன் அவர்களின் கட்டுரையின் ஒரு பகுதி சிறு சிறு மாற்றங்களுடன் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.