500 ‘ட்ரில்லியன்’[டிரில்லியன் என்பது ஓராயிரம் பில்லியனைக்(1000 X 1000 X 1000 X 1000)குறிக்கும்] ஆண்டுகளில் பூமியைச் சூரியன் விழுங்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்[ஒரு வெடிக்கும் நட்சத்திரம் கோளை விழுங்குவது போல்.. கீழே காணொலி]. AFPஇன் அறிக்கையின்படி, விஞ்ஞானிகள் முதன்முறையாக ஒரு கிரகத்தை விழுங்கும் இறக்கும் நட்சத்திரத்தை அவதானித்துள்ளனர்’ -https://www.msn.com/].
* * * * *
மனித இனம் என்பது தனி மனிதத் தொகுப்பு.
மனிதர்களில் சிலரோ பலரோ இருக்கும்வரை இனமும் இருந்துகொண்டிருக்கும்.
மனித இனம் தோன்றிப் பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. இனியும் பல லட்சங்கள், கோடிகள் என்று இனத்தின் ஆயுட்காலம் நீண்டுகொண்டே போகலாம். அழிவுக்கு உள்ளாகாமல்கூட அது இருந்துகொண்டே இருக்கலாம்.
ஆனால், தனி மனிதனின் ஆயுட்காலம் அவ்வாறானதல்ல. அவனின் ஆயுள் வரையறுக்கப்பட்டது.
இப்போது நூறு என்றால் எதிர்காலத்தில் அது பல நூறு, பல ஆயிரம் என்றெல்லாம் அதிகரிக்கலாம்.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக, அவனின் ஆயுள் அதிகரித்தாலும், வாழ்ந்து முடித்து மரணத்தைத் தழுவுவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக, மனித இனம் அழிவே இல்லாமல் இருப்பதுபோல்[டிரில்லியன் கணக்கான ஆண்டுகள்] தனி மனிதனால் அழிவைச் சந்திக்காமல் இருக்க முடியாது.
தனிமனிதனின் சாதனைதான் மனித இனத்தின் சாதனை ஆக்கப்படுகிறது.
சாதனைகளின் பலன்களை, அல்லது வேதனைகளை அனுப்பவர்கள், அவ்வப்போது உலகில் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் மட்டுமே. இறந்துபோனவர்கள் அல்ல.
இந்நிலையில், ‘உலகம் அழியப்போகிறது’ என்னும் அதிர்ச்சியூட்டும் செய்தி அவ்வப்போது வெளியாகிறது.
செய்தி வெளியாகும் காலக்கட்டத்தில் வாழ்பவர்கள்கூட, தாம் வாழும்போதே உலகம்[பூமி] அழியும் என்றால்தான் கவலைப்படுவார்கள். பின் எப்போதோ அது அழியும் என்று விஞ்ஞானிகள் சொன்னால் அதை நினைந்து அவர்கள் அழுது புலம்பமாட்டார்கள்.
சொல்லப்போனால, 500 டிரில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் உலகம் அழியும் என்றால், அழிவு நேர இருக்கிற துல்லியமான அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் மட்டுமே அஞ்சுவார்கள்; கலங்கித் துடிப்பார்கள். அவர்களும்கூட.....
சூரியன் என்னும் அதி பிரமாண்ட நட்சத்திரத்தால் பூமி விழுங்கப்படுகையில், ’டம் டம் டமார்’ என்பது போன்ற பேரோசையுடன் வெடிப்பு நிகழ்ந்தால், அந்தச் சில கணங்களிலேயே உயிர் பிரிந்துவிடும். கதறித் துடித்து அழுவதற்கு வாய்ப்பிருக்காது.
ஆக.....
‘உலகம் அழியப்போகிறது’ என்பதாக மருட்டும் செய்திகள் வெளியாகும்போதெல்லாம் மனிதர்கள் எவரும் மனம் கலங்கித் தவிப்பதற்கான வாய்ப்பே இல்லை.
***இரண்டு முறை பிறந்திருப்பதாக[முற்பிறவி]ச் சொல்கிறார் ஜக்கி வாசுதேவ். உலகம் அழிய 500 டிரில்லியன் ஆண்டுகள் உள்ளன. இன்னும் எத்தனை முறை மறுபிறவி எடுப்பார்? மாறாக, கடவுளின் அவதாரமான அவர் முழுமுதல் கடவுளுடன் இரண்டறக் கலந்துவிடுவாரோ?!
* * * * *