இப்பதிவில், நான் படித்தறிந்த பிள்ளையாரின் ‘தோற்றம்’ குறித்த கதைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன்; விமர்சனம் செய்வதைத் தவிர்த்துள்ளேன். காரணம்?
வேறென்ன, வரம்பு மீறிடுவேனோன்னு பயம்...பயம்தான்!

ஒன்று:
திருக்கயிலாயத்தில் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண்-பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் யானை வடிவெடுத்து அம்மையைப் புணரவேண்டும் என்னும் காம விருப்பம் அய்யனுக்கு உண்டாயிற்று. அக்குறிப்பினைத் தெரிந்துகொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அம்மையைப் புணர்ந்தார். அப்புணர்ச்சியால் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தார். இது கந்தபுராணக் கதை.
இரண்டு:
ஒரு சமயம், உமையம்மையார் குளிக்கப் போனார். போகுமுன் தன் உடம்பிலுள்ள அழுக்கையெல்லாம் திரட்டி எடுத்து உருட்டிப் பிடித்து தமது குளிப்பறையின் முன் வாயிலில் வைத்து, “சிவபிரான் வந்தனராயின் தடை செய்க” என்று கட்டளையிட்டுச் சென்றார். அப்போது, அந்த அழுக்கு உருண்டை உயிருள்ள பிள்ளையாராகி அக்குளியலறையின் வாயிலில் காவல் காத்தது.. அவ்வேளையில், சிவபெருமான் அம்மையைத் தேடி அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவ்வழுக்குப் பிள்ளையார் அவரை “உள்ளே போகக்கூடாது” என்று தடை செய்ய இருவர்க்கும் போர் மூண்டது. நெடுநேரப் போருக்குப் பின்னர் சிவபெருமான் பிள்ளையாரின் தலையை வெட்டினார். அப்போது.....
குளியலறையிலிருந்து வெளிவந்த உமையம்மையார், “அய்யோ! என் பிள்ளையை வெட்டி விட்டீரே” என்று உளமுருகி ஆற்றாமல் அழுதார். சிவபெருமான் தாமும் ஆற்றாதவராகி, “நம் பிள்ளை என்பது அறியாமல் வெட்டிவிட்டேன். வருந்தாதே. இப்போதே இதனை உயிர் பெற்றெழச் செய்வேன்” என ஆறுதல் மொழிந்து, வடக்கு நோக்கிப் படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்து அதனை அப்பிள்ளையாரின் உடம்பில் பொருத்தி உயிர்பெற்றெழச் செய்தார்[சிவபுராணம்].

மூன்று:
பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை ராட்சஷி மாலினியைக் குடிக்க வைத்தார். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்து ஒரு யானைத் தலையுடனான குழந்தையைப் பெற்றாள். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்றார்.

நான்கு:
கணபதி, தான் பிறந்த நேரத்தில் ‘சனிப்பார்வை’ தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தார்.
ஐந்து:
கணபதி, உமையம்மையின் வயிற்றில் இருந்தபோது சிந்துரா என்னும் ராட்சஷி வயிற்றுள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்றுவிட்டாள். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தையானது யானைத் தலைகொண்ட கஜாசுரன் என்ற ராட்சஷன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது. “தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தைக்கு, தனக்குத் தலை இல்லை என்று எவ்வாறு தெரிந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது?”[சத்தியமா இந்தக் கேள்விகளை நான் கேட்கலைங்க] என்னும் கேள்விகளுக்குக் கந்த புராணம் விடை சொல்லவில்லை.ஆறு:
ஒரு காலத்தில் உமாதேவி அம்மையாருக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர்கள் எல்லாரும் அங்கு வந்தார்கள். வந்தவர்களுள் ‘சனி’யனெனும் தேவனும் ஒருவன். இச்சனியன், தான் அப்பிள்ளையைப் பார்த்தால் அதற்குத் தீது உண்டாகுமென்று நினைத்து, தலை குனிந்து அதனைப் பாராதிருந்தான். அவனின் கருத்தறியாத அம்மை அவன் தன் மகனை அவமதித்ததாக எண்ணிச் சினம் கொண்டார். அதை உணர்ந்த ‘சனியன்’.....
தலை உயர்த்திக் குழந்தையைப் பார்த்தான். அவன் பார்த்த உடனே குழந்தையின் தலை எரிந்து சாம்பலாயிற்று.
அம்மை கடும் சினம் கொண்டார். அது கண்ட நான்முகன் முதலான தேவர்கள் அம்மையிடம் அவனை மன்னிக்கும்படி வேண்டினர். சிவபிரானும் அம்மையின் சினத்தைத் தணிவித்ததோடு, வடக்கு நோக்கிப் படுத்திருக்கும் ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணரும்படித் தேவர்களுக்குக் கட்டளையிட, அவர்களும் அவ்வாறே சென்று ஒரு யானையின் தலையைக் கொண்டு வர, அத்தலையை அப்பிள்ளையின் முண்டத்தில் பொருத்தி அதனை உயிர் பெற்றெழச் செய்தார். அன்று முதல் அக்குழந்தைக்கு ‘யானை முகன்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.
போற்றி போற்றி! யானைமுகன் போற்றி!! விநாயகப் பெருமான் போற்றி!!!
=================================================================================