மேற்கண்டது நாளிதழில் வெளியான செய்தி[நகல் பதிவு].
இதைவிடவும் வேறெவ்வகையிலும் ஆணினத்தை இழிவுபடுத்துதல் சாத்தியமே இல்ல.
மேற்கண்டது நாளிதழில் வெளியான செய்தி[நகல் பதிவு].
இதைவிடவும் வேறெவ்வகையிலும் ஆணினத்தை இழிவுபடுத்துதல் சாத்தியமே இல்ல.
//கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி இரவு தன் கணவன் ரமேஷூக்கு அதிகளவு தூக்க மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார் சவுமியா. இதனால் அயர்ந்து தூங்கிய ரமேஷை, சவுமியா தனது கள்ளக்காதலன் திலீப்பையும் ரவுடி கும்பலையும் வரவழைத்து, கணவனின் கழுத்தைத் துணியால் சுற்றி மூச்சைத் திணறடித்துக் கொலை செய்தாள்.
மேற்கண்டது ஊடகத்தில் வெளியான செய்தியின் ஒரு பகுதி.
இதன் பிறகு, வெளிநாட்டில் இருக்கும் ரமேஷின் தம்பி கோதாரிக்கு [அண்ணனின் இறுதிச் சடங்குக்கு வரமுடியாத நிலையில்] அவர் கேட்டுக்கொண்டதால் செல்போனில் இறுதிச் சடங்குப் புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. சடலத்தின் கழுத்தில் தென்பட்ட காயத்தைப் பார்த்துச் சந்தேகப்பட்டு, இங்கே இருக்கும் தன் மனைவிக்குக் கோதாரி தகவல் சொல்ல, அவர் காவல்துறையினரிடம் புகார் அளிக்க, அவர்கள் புலனாய்வு செய்ததில், நடந்த உண்மை வெளிப்பட்டு சவுமியா கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டாள்[புகைப்படங்களை அனுப்பாமல் இருந்திருந்தால் தப்பித்திருப்பாள்].
இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நம் நாட்டில் இடம்பெறுவதால் இதை விவரிப்பது தேவையற்றது.
ஆனாலும்,
கள்ளப் புணர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கணவனைப் போட்டுத்தள்ளும் கொடூர மனைவிமார்களில், எத்தனைப்பேர் பிடிபட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள் என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
அது மிக அரிதாக இருக்கவே வாய்ப்புள்ளது என்பதால், தண்டனையிலிருந்து தப்பித்து, காதலனுடன்(காமுகர்களுடன்) ஜாலிலோ ஜிம்கானா பாடிக்கொண்டு குஷியாக வாழும் காமுகிகள் கணக்குவழக்கில்லாமல் பெருகிவிட்டார்களோ என்று கேட்கத் தோன்றுகிறது.
“ஆம்” என்றால்.....
‘அது’விசயத்தில் பலவீனமான ஆண்களாக இருந்து, 'அப்பாவி'களாகவும் வாழ்பவர்களைப் பார்த்து, “ஐயோ பாவம் அவர்கள்” என்று அனுதாபப்படத் தோன்றுகிறது.
அனுதாபம் தீர்வுக்கு வழிவகுக்குமா என்ன?
முழுத் தகவலுக்கு:
https://www.dinakaran.com/news/wife-kills-husband-for-opposing-illicit-affair/
====================
பின்குறிப்பு:
பெண்களிலும் அப்பாவிகள் நிறையவே உள்ளனர்.