எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 9 ஆகஸ்ட், 2023

“கோமியம் கொல்லுமா கிருமிகளை?”... “ஆம்” என்னும் ‘பாஜக’ கூமுட்டைகள்!


கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரபல நடிகர் மட்டுமல்ல, சீரிய சிந்தனையாளர்; மூடநம்பிக்கைகளை வாய்ப்பு அமையும்போதெல்லாம் கடுமையாகச் சாடிவருபவர்.

மூடநம்பிக்கைகளைப் பரப்புவோரையும், அவர்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், கொஞ்சமும் அஞ்சாமல் கண்டிப்பவர்; பிரதமரான ‘மோடி’யின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சனம் செய்பவர்.


கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், திரைப்படம்&சமுதாயம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார்.


கல்லூரியின், ‘பாஜக’ ஆதரவு மாணவர்கள் சிலரும், உள்ளூர் பாஜக’வினரும் பிரகாஷ் ராஜ் வரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அரங்குக்குள் நுழையவும் முயன்றிருக்கிறார்கள்.


காவல்துறையினர் அவர்களை நுழையவிடாமல் தடுத்துவிட்டதில் கலந்துரையாடல் அமைதியாக நடைபெற்றது.


பகுத்தறிவாளர் பிகாஷ் ராஜ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


அவர் சென்ற பின்னர், மக்களின் மூடநம்பிக்கைகளை நம்பியே கட்சி நடத்தும் ‘பாஜக’வினரும், அவர்களின் அடிப்பொடிகளான  சில மாணவர்களும் பிரகாஷ் ராஜ் நடமாடிய[கால்பட்ட] இடங்களையெல்லாம் கோமியம் தெளித்துச் சுத்தம் செய்தார்கள் என்பது https://cineulagam.com/ செய்தி[4 மணி நேரம் முன்பு]


விலங்குகளில் ஒன்றான பசுமாட்டைத் தெய்வமாக்கிக் கொண்டாடுவதோடு[ஆடுகள் எருமை மாடுகள் போன்றவை கொண்டாடப்படுவதில்லை] கழிவுகளை வெளிக்கொணரும் அதன் சிறுநீரைப்[கோமியம்] புனிதமானது என்று நம்பும் இவர்களைப் போன்ற கூரு கெட்ட கூமுட்டைகள் உலகெங்கும் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்[தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கோவை கு.ராமகிருஷ்ணன், ``வேப்பிலை போன்ற பல்வேறு மருத்துவக் குணமுள்ள தாவரங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட மருந்துகள், உலகம் முழுக்கப் பயன்பாட்டில் இருக்கின்றன. அதையெல்லாம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், பசு மாட்டின் சிறுநீரில் மருத்துவக் குணம் இருந்திருந்தால் விட்டுவைத்திருப்பார்களா! இதை மிகப்பெரிய மருத்துவ மூலதனமாக மாற்றியிருப்பார்களே! ஆகவே, அடிப்படையில் இது உண்மையில்லை. இங்கு, பசு ஒரு தெய்வமாக மதிக்கப்படுவதால், அதிலிருந்து கிடைக்கக்கூடியவையும் புனிதம் என்று உருவாக்கி வைத்துள்ளார்கள்" என்கிறார்].


ஒருவர்[பிரகாஷ் ராஜ்] பகுத்தறிவாளராக[அல்லது நாத்திகர்] இருந்தால், அவர் உடலெங்கும் நாத்திகம் பரப்பும் நச்சுக் கிருமிகள் ஊடுருவியிருந்து, அவர் நடந்துசெல்லும்போதெல்லாம் உடம்பிலிருந்து வெளியேறிப் பாதச் சுவடு பட்ட இடங்களிலெல்லாம் பரவுமா?


“பரவும்” என்று சொல்லுகிற இந்தப் ‘பாஜக’ கும்பலை எத்தனை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினாலும் மனம் ஆறுதல் பெறாது!


* * * * *


இளவேனில் பருவமும் இளசுகளின் நீராடலும்!... ஒரு ‘குளு குளு’ வர்ணனை!!

அதோ...வசந்தன் வருகிறான். வற்றாத இளமையின் புகலிடம் அவன். மலர் அம்புகளுடன் கரும்பு வில்லேந்தி அவன் வந்துகொண்டிருக்கிறான். அவனின் வருகை கண்டு.....


மரம், செடி, கொடிகளில் பூக்கள் மலர்ந்தன. ஓடைகளில் தாமரை மலர்கள் குலுங்கின. காற்றில் மனம் கவரும் மணம் கமகமத்தது. பகற்பொழுதுப் பெண்ணை இளவேனில் காதலன் புணர்ந்து இன்புற்றான். மனிதகுலப் பருவக் குமரிகளின் மனங்களில் காமம் முகிழ்த்தது. 


வாவி குடைந்து[குளத்தில் நீராடுதல்] குதூகலிக்கும் மென்கோங்க[கோங்கம்>மலர்] கொங்கைப் பெண்களின் கூந்தலுக்கு நெய்தல் பூக்கள் கிரீடம் சூட்டி மகிழ்ந்தன. குளித்து முடித்து வெளியேறிய அவர்களின் கன்னங்கரிய கூந்தலுக்கு அசோக மலரும் மல்லிகைப் பூவும் அழகு கூட்டின. நெகிழ்ந்த ஆடைகள் அவர்களின் பூரித்த தனங்களை மறைக்கத் தவறின. 

கன்னியரின் உடம்பெங்கும் காமம் பரவியதால் வெப்பம் கூடியது. அதைத் தணிக்க, அவர்கள் தங்களின் மேலாடைகளை அகற்றிவிட்டு மேனியெங்கும் குளிர்ந்த சந்தனத்தை அப்பினார்கள். அவர்கள் அணிந்திருந்த முத்து மாலைகள் சந்தனக் குழம்புடன் ஒட்டிக்கொண்டு திரண்ட கொங்கைகளை இறுகக் கவ்வின. இடையை வருத்திக்கொண்டிருந்த ஒட்டியாணங்கள் தமக்குரிய வண்ணத்தை இழந்தன.

ஆடை உடுத்த அணங்குகள், தாமாக விரும்பி அவிழ்த்தாலொழியப் பிறரால் அவிழ்க்க முடியாத மார்புக் கச்சுகளின் முடிச்சுகள் நெகிழ்ந்து அவிழ்ந்து நழுவ, அவர்கள் வெளிப்படுத்திய பெருமூச்சால்  முந்தானைகள் இடம்பெயர்ந்து தென்றலுடன் கைகோர்த்து நர்த்தனமாடின.

குமரிகளின் ஒவ்வோர் உறுப்பையும் வசந்தன் தன்  இதழ்களால் வருடி அவர்களை விரகதாபத்துக்கு உள்ளாக்கினான். ஆற்றாமையுடன், கம்மிய குரலில் துயரம் தோய்ந்த சொற்களை உதிர்த்தார்கள் அந்த வாலைக்குமரிகள்.

மெல்லிடை சோர்ந்ததால் கனமான ஆடைகளைக் களைந்து மிக மெல்லிய ஆடைகளை உடுத்தார்கள்.

மாவின் இளம் தளிரைத் தின்று மதம் ஏறிய ஆண் குயில்கள், கட்டுக்கடங்காத காம இச்சையுடன் பெண் குயில்களை முத்தமிட்டுப் புணர்ந்தன. இக்காட்சி, தலைவனைப் பிரிந்திருந்த மலர் நிகர் கோதையரைத் தீராத துயரத்தில் ஆழ்த்தியது..........

                                  *   *   *   *   *

***மேற்கண்டது, இளவேனில் பருவத்தின்[வசந்தம்] வருகை குறித்த வடமொழிக் கவிஞன் காளிதாசனின் வருணனை ஆகும். இதன் தமிழாக்கம், 'இது வசந்தம்' என்னும் தலைப்பில், 'கலா மோகினி'[கலைஞன் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2003] என்னும் பழைய இதழ்த் தொகுப்பில் வெளியானது. சுருக்கியும் விரித்தும், நடையைக் கொஞ்சம் மாற்றியும் தொகுத்து வெளியிடப்பட்டது இப்பதிவு.