எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 10 பிப்ரவரி, 2024

'அது’க்கான லேகியம் விற்பார்களா ஆர்.பி.உதயகுமாரும் அண்ணாமலையும்!?

'அவர்கள்’, ‘இந்தி’ வெறியன்களுக்குச் சேவகம் செய்த[4 ஆண்டுகள்] பழைய கொத்தடிமைகள். ‘இவர்’ கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட வெறியன்களின் பாதம் வருடிப் பணிவிடை செய்த/செய்யும் புதிய கொத்தடிமை.

ஆக, இரு தர்ப்பாருமே கொத்தடிமைகள்தான் என்பதில் கிஞ்சித்தும் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை.

இங்கே ‘அவர்கள்’ என்பது எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் சுயநலக் கும்பல்[ஆர்.பி. உதயகுமார் உட்பட].

‘இவர்’ என்பது ஓயாமல் ஒழியாமல் மோடி புகழ் பாடுவதற்கென்றே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அண்ணாமலை.

ப.அடிமைகளுக்கும் பு.அடிமைக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்வது யாவரும் அறிந்ததே.

ஓரிரு நாட்களுக்கு முன்பும் அது நிகழ்ந்திருக்கிறது.

அண்ணாமலையை ‘லேகியம்’ விற்பவர் என்று ஆர்.பி.உதயகுமார் உளறிவைக்க, “ஆமாம், நான் லேகியம் விற்பவன்தான். இங்குள்ள பீடைகளை[ஆர்.பி.உ. கூட்டம்] ஒழிப்பதற்காக இதைச் செய்கிறேன்” என்று பதிலடி கொடுத்துக் கொந்தளித்திருக்கிறார் அண்ணாமலை.

இவர்கள் இருவருமே பிரபல அரசியல்வாதிகள்.

மக்களின் நலனுக்காகச் சிந்திப்பதையும், நல்ல பல ஆலோசனைகளை ஆட்சியாளர்களுக்கு வழங்குவதையும் கடமையாகக் கொண்டவர்கள்.

தங்களுக்கான கடமைகளை அறவே மறந்து, லேகியம் விற்பது குறித்துப் பேசுவதில் நேரத்தை விரயமாக்கும் இவர்கள் அரசியல்வாதிகள்தானா என்னும் கேள்வி எழுகிறது.

கேள்விக்கான பதில்.....

“இல்லை” என்பதே.

அரசியலிலிருந்து உடனடியாக இவர்கள் விலகுதல் வரவேற்கத்தக்கது; தமிழ்நாட்டுக்கு நல்லது.

விலகிய பின்.....

இருவருமே ‘அது’[அது எது என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்!]க்கான ‘லேகியம்’ விற்கலாம்.  

இதைச் செய்தால், பொழுது போகும்[தேவைக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்பதால் வேறு தொழில் தேவையில்லை]; நல்ல வருமானமும் கிடைக்கும்