திங்கள், 5 டிசம்பர், 2011

ஒரு நாத்திகன் அழைக்கிறான்.

                                           ஒரு நாத்திகன் அழைக்கிறான்

கடவுள் என்று ஒருவர் இருப்பதாக அனுமானித்து, அவரைப் போற்றி வழிபடுகிற அனைத்து மதங்களுமே, அவருக்குரிய முக்கிய குணங்களில் ஒன்றாகக் ‘கருணை’யைக் குறிப்பிடுகின்றன.

‘கருணை வடிவானவன் கடவுள்’

ஓரளவு சிந்திக்கத் தெரிந்த காலக் கட்டத்தில், பேரழிவுகளை உண்டுபண்ணிய வெள்ளப் பெருக்கு, பெரு நெருப்பு, சூறாவளி, கடல்கோள் [சுனாமி], போன்றவற்றைக் கொடிய தெய்வங்களாகக் கருதி அஞ்சி நடுங்கியது மனித குலம்.

சிந்திக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நிலையில், அறிவு வளர்ச்சியில் முன்னிலை பெற்றவர்கள், அனைத்துப் பேரழிவுச் சக்திகளுக்கும் மேலாக எல்லாம் வல்ல ஒரு பேராற்றல் இருப்பதாகச் சொல்லி, அதைக் ‘கடவுள்’ ஆக்கினார்கள்.


அந்தக் கடவுளை, ’வெறும் சக்தி’ எனச் சொல்ல மனமில்லாமல், அன்பு, அருள் [கருணை], பரிவு, இரக்கம், அண்டினோரைப் பாதுகாத்தல் என்று அனைத்து நற்குணங்களையும் அவரின் தனி உடைமை ஆக்கி மகிழ்ந்தார்கள்.

அவரை வழி பட்டால், வாழ்வில் துன்பம் விலகி இன்பம் மலரும் என்று நம்பினார்கள். அறிவு வளர்ச்சியில் பின் தங்கிய...சிந்திக்கும் ஆற்றல் குறைந்த மக்களை நம்ப வைத்தார்கள். அவர்களின் வழி வந்தவர்கள் அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார்கள்.

இது, மனித குல வரலாற்றில் கடவுள் நம்பிக்கை உருவானதன் ஆரம்ப நிலை மட்டுமே.

இதை எதிர்த்து, ‘கடவுள் பொய்; இயற்கையே மெய்’ என்று எதிர்வாதம் எழுந்தது; மதங்கள் உருவானது பற்றியெல்லாம் சொல்லப் புகுந்தால், அது நீளும்.

அதை விவரிப்பது நம் நோக்கமன்று.


‘கடவுள் கருணை வடிவானவர்’ என்று சொல்லப் பட்டதை...சொல்லப் படுவதை விவாதிப்பது மட்டுமே நம் விருப்பம்.

இது பற்றி விவாதிக்கத்தான் இன்றைய மதவாதிகளையும் ஆன்மிகவாதிகளையும் அன்போடு அறைகூவி அழைக்கிறோம்.

அனைத்து மத குருமார்களே, பரப்புரையாளர்களே, ஆன்மிகச் செம்மல்களே........

நீங்கள் நம்பும் கடவுள் கருணை வடிவானவர் என்பதற்கு, உங்கள் முன்னோடிகள் சொல்லிப் போன அதே காரணங்களைத்தான் நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.


‘இன்பங்கள் நிறைந்த உலகைப் படைத்து,அந்த இன்பங்களைத் துய்க்கும்
பேற்றை உயிர்களுக்கு வழங்கியவர் கருணை வடிவான கடவுள்’ என்று சொன்னார்கள். நீங்களும் சொல்கிறீர்கள்.

நீங்கள் படைத்த கடவுளைப் போலவே.....ஏன், அவரை விடவும் நீங்கள் கருணை நெஞ்சம் படைத்தவராக இருக்கலாம். நாம் மறுக்கவில்லை. ஆனாலும், நாம் எழுப்புகிற வினா ஒன்று உண்டு.


இந்த உலகில் பிறந்து வாழும் மனிதர்களை உள்ளடக்கிய உயிர்கள் அனுபவிப்பது இன்பம் மட்டும்தானா? துன்பமும்தானே?


இவற்றில் எது அதிகம்?

நடுநிலை உணர்வுடன், ஒரு முறையேனும் சீர்தூக்கிப் பார்த்ததுண்டா?


கருணைக் கடலான உங்கள் கடவுள் நிகழ்த்திய அற்புதங்களை நெஞ்சுருகச் சொல்லிச் சொல்லி, ஆனந்தப் படுவதற்கும், அவன் பெருமைகளை வியந்து துதி பாடுவதற்கும், விழாக்கள் நடத்திக் குதூகளிப்பதற்குமே உங்களுக்கு நேரம் போதவில்லை. இதற்கெல்லாம் ஏது நேரம்?!

இப்போதாவது சிந்தியுங்கள்.

உயிர்கள்...மனிதர்கள் அதிகம் அனுபவிப்பது இன்பத்தையா, துன்பத்தையா?
[அவையவை...அவரவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணீயத்தைப் பொறுத்தது என்ற அனுமானம் வேண்டாம். எதார்த்தத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். கண்ணால் காணும் நடைமுறை வாழ்க்கையைக் கணக்கில் வையுங்கள்]

“இன்பமே’ என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும் என்பதை நாம் அறிவோம்.

இயற்கை அழகை அனுபவிப்பது இன்பம். அது எழுப்பும் இன்னோசைகளைக் கேட்பது இன்பம். உண்பது இன்பம். உறங்குவது இன்பம். நறுமணங்களை நுகர்வது இன்பம். ஆண் பெண் இணைவது மகத்தான இன்பம். மழலைச் செல்வங்களைத் தழுவுவது அலுக்காத இன்பம்........

இவை அனைத்திற்கும் மேலாக...........................


உள்ளம் உருக, உடம்பு சிலிர்க்க, நா தழு தழுக்க ‘அவன்’ கருணையை நாளெல்லாம் பாடிப் பாடிப் பரவசப்பட்டுப் பெறுகிற ‘பேரின்பம்!

இப்படி நீங்கள் இடும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிச் சிந்தித்ததுண்டா?


சிந்தியுங்கள்; நாமும் சிந்திப்போம்.


அடுத்த பதிவில் பட்டியலிடுவோம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




18 கருத்துகள்:

  1. //துன்பங்களை நாம் பட்டியலிடப் போகிறோம். செவி மடுப்பீர்கள்தானே?// மடுப்போம் :)

    பதிலளிநீக்கு
  2. //அசை போடுங்கள்...சிந்தியுங்கள்.//

    கடவுள் பின்னால் ஓடுபவர்கள் இந்த இரண்டையும் செய்வதில்லை..

    சிந்தனை செய்தால் தான் பகுத்தறிவு வளரும் என்கின்றேன் நான்.. ஆனால் சிந்தனை வேறு பகுத்தறிவு வேறு என்கிறார் ஒருவர்... நான் சொல்லியது சரியா தவறா என்று தெரியவில்லை... தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது குறித்து?

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜீவா.

    உயிர், உடம்பு, உலகம், கோள்கள், பிரபஞ்சம் என்னும் இவை போன்றவற்றின் தோற்றம், வளர்ச்சி,
    அழிவு பற்றியெல்லாம் அறிய முற்படுவது சிந்தனை.

    நாம் அறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு,உண்மை எது, பொய் எது, நல்லது எது, கெட்டது எது என்று ஆராய்ந்து அறிய முற்படுவது பகுத்தறிவு.

    இரண்டும் இணைந்தால்தான் நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

    இது மிகச் சுருக்கமான ஒரு ‘விளக்கம்’ மட்டுமே.

    ”சிந்தனை செய்தால்தான் பகுத்தறிவு வளரும்”என்று தாங்கள் சொன்னது 100% சரியே.

    மீண்டும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  4. //அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களை நாம் பட்டியலிடப் போகிறோம். செவி மடுப்பீர்கள்தானே?//

    :)

    வற்றாமல் கொட்டும் அருவியின் குளியல் இன்பம் துய்த்தவர் சொல்வர், 'நான் இதில் குளிப்பதால் புத்தணர்வை அடைகிறேன்'

    அதே அருவியில் உறவினர் யாரையோ பறிகொடுத்தவர் சொல்வர்
    'இந்த அருவி ஆபத்தானது, இதனால் நான் துயரம் அடைந்துள்ளேன், அவை பிறருக்கும் ஏற்படாலம், அருவிக்குச் செல்லாதீர்கள்'

    ஆனால் அருவி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்வது போல் தெரியவில்லை.

    ******

    உள்ளுணர்வுகள் என்பதில் உங்களுக்கு நம்பிகை இல்லை என்றால் இறைக்கோட்பாடுகள் உங்களுக்கு கற்பனையாகவே தெரியும்.

    நான் இங்கு கடவுள் இருக்கா இல்லையா என்ற விவாதம் செய்யவரவில்லை, ஏற்பு மறுப்பு இரு கருத்துகளையும் ஒரே அளவில் தான் பார்க்கிறேன்.

    தேடலற்ற பின்பற்றுதல் என்ற அளவில் ஒரு நாத்திகன், ஒரு ஆத்திகன் இருவரும் ஒன்று தான்.

    உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது என்ற ஒன்று இல்லை என்று எந்த நாத்திகனும் எதையும் மெய்பிக்கவில்லை.அதே போன்று நான் தேடித்தெளிந்த உண்மையே கடவுள் என்று எந்த ஆத்திகனும் சொல்வதும் இல்லை, எல்லாம் அவரவருக்கான நம்பிக்கை அடிப்படையில் தான் பேசுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  5. நடு நிலை உணர்வுடன் கருத்துகளை முன் வைத்த கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.

    அருவியில் குளித்து இன்பம் கண்டவன்,அது ‘இனியது’ என்கிறான்.உயிரைப் பலி கொடுத்தவன், ‘அது தீயது’ என்கிறான்.

    நல்ல எடுத்துக்காட்டு.

    கடவுள் இருப்பதாக நம்பி, வாழ்க்கையில் மிகுதியும் இன்பம் கண்டவன்,அவரைக் ‘கருணையின் வடிவம்’ என்கிறான்.பெரிதும் துன்பங்களை அனுபவித்தவன்,’அவரா கருணையின் வடிவம்?’ என்று கேள்வி எழுப்புகிறான்.

    நானும் [’நாம்’ என்று சொல்வதை விட்டுவிட்டேன்]அதைத்தான் கேட்கிறேன்; இப்பதிவில் இன்னும் கேட்கப் போகிறேன்.

    ’அருவி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதில்லை’ என்கிறீர்கள். அருவியும் கடவுளும் ஒன்றா? கருணையின் வடிவான கடவுள் வேறு என்ன செய்கிறார்?

    ’உள்ளுணர்தலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால்...’ என்கிறீர்கள்.

    நிகழ்வுகளை...கருத்துகளை...அன்பு, பரிவு, பாசம் போன்ற உணர்ச்சிகளைப்
    புலன்களால் உணர்வதாக நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிடுகிற ‘உள்ளுணர்வு’ எனக்குப் புரியவில்லை கண்ணன்.உள்ளுணர்வே
    என் போன்றவர்களுக்கு இல்லை என்பது உண்மையாகவும் இருக்கலாம் நண்பரே.அதனால்தான், ‘கடவுள் கோட்பாடு’ எங்களுக்குக் கற்பனையாகத் தெரிகிறது. இதுவும் உண்மையாக இருக்கலாம்.

    இந்த உள்ளுணர்வு உள்ள எவரும் கடவுளை நம்பட்டும். அதில் எங்களுக்கு வருத்தம் இல்லை.

    எங்கள் வருத்தமெல்லாம்.......

    கடவுள் நம்பிக்கையால் மனித குலத்துக்கு நேரும் தீமைகள் பற்றித்தான்.

    ‘தேடலற்ற பின்பற்றுதல்’ என்கிறீர்கள்.

    என்னைப் பொருத்தவரை, உண்மையைத் தேடுவது மட்டுமே என் நோக்கம். எவரையும் கண்மூடிப் பின்பற்றுவது இல்ல.

    ’உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது என்ற ஒன்று இல்லை என்று எந்த நாத்திகனும் மெய்ப்பிக்கவில்லை’ என்கிறீர்கள்

    மற்ற நாத்திகர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னைப் பொருத்தவரை, அப்படியொரு முயற்சியில் நான் ஈடுபட்டதில்லை. அது பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான் என் பதில். நடப்பு வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவும், அவ்வாழ்வுக்குக் கேடு சூழ்வன பற்றிக் கேள்விகள் கேட்கவும் மட்டுமே தெரியும்.

    //நான் தேடித் தெளிந்த உண்மையே கடவுள் என்று எந்த ஆத்திகணும் சொல்வதில்லை//

    மன்னியுங்கள் கண்ணன்.....

    அழுத்தமான கருத்துகளை முன் வைத்த தாங்கள், இறுதியில் சற்றே
    நிலை தடுமாறிவிட்டீர்களே, ஏன்?

    உலகில் எத்தனை மதங்கள்! எத்தனை மதப் பிரச்சாரகர்கள்! கடவுளை நம்பும்படி, அதற்கான வழிவகைகளைப் பின்பற்றும்படி நிகழ்த்தப்படும் பிரச்சாரங்கள் தாங்கள் அறியாதது அல்லவே கண்ணன்?

    ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டிய தங்களுக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. // பரமசிவம் கூறியது...
    நடு நிலை உணர்வுடன் கருத்துகளை முன் வைத்த கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.//

    மிக்க நன்றி, நான் எந்த நம்பிக்கையாளர் குழுமத்திலும் சேருவதில்லை, எந்த ஒரு நம்பிக்கைக் குழுமம் விடாபிடியான அடாவடியான கருத்து கொண்டிருக்கும் அவை தவறே என்றாலும் திருத்திக் கொள்ளாது என்பதால் நான் என் நிலையில் தெளிவாகவே உள்ளேன். அவற்றை எடுத்து நான் சொல்லும் போது நீங்கள் புரிந்து கொண்டது போல் மற்றவர்கள் புரிந்து கொள்வதை. அதற்கு மீண்டும் நன்றி.


    //’அருவி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதில்லை’ என்கிறீர்கள். அருவியும் கடவுளும் ஒன்றா? கருணையின் வடிவான கடவுள் வேறு என்ன செய்கிறார்?//

    நீதிபதி தனிப்பட்ட முறையில் எவ்வளவு அமைதியானவர் அன்பானவர் என்றாலும் நீதி சொல்லும் போது அதில் அவரது தனிப்பட்ட குண நலன் இருக்கக் கூடாது என்பது தான் நீதித்துறையின் அல்லது நீதியின் அடிப்படை சித்தாந்தம். செய்த குற்றங்களுக்கு தண்டனைத் தரமால் அவர் தவறும் போது அவர் கருணையற்றவர் என்று ஒரு நல்ல நீதிபதிக்கு நாம் இலக்கணம் கற்பிக்க முடியாது. அருவி ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது ஒருவர் கையினால் அள்ளிக் குடிக்கிறார் மற்றவர் கால் கழுவுகிறார், அருவியைப் பொருத்த அளவு அது மனிதர்களுக்கு எதோ ஒரு வகையில் பலன் பாராது பயன் அளிக்கிறது, நீச்சல் தெரியாமல் ஆறு அடித்துச் சென்றவர்களை வைத்து மட்டுமே ஆற்றின் குணம் பற்றி சொல்லிவிட முடியாது, ஆற்றின் பயன் நீர் தான். கத்தியின் கருணை ( இங்கு பயன்) கூர்மை, அது கையை வெட்டுவதால் கத்தி கொடுமையானது என்று சொல்லமுடியாது, கடவுள் என்பது மெய்பொருள் அல்லது புலன்களுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்துச் சொல்லப்படுவதால் புலன் சார்ந்த உதாரணங்கள் என்னாலும் கொடுக்க இயலவில்லை மன்னிக்கவும், அதனால் தான் அருவி, ஆறு என்றெல்லாம் புலன் புரிவதற்கேற்ற உவமைகள் சொல்ல வேண்டியுள்ளது. வேற மாதிரி சொல்ல வேண்டுமென்றால் தொடர்ந்து வரும் வானொலி அலையை சரியாக ட்யூன் செய்யப்படும் வானொலிப் பெட்டி நன்றாக எடுத்துப் பாடும், சரியாகப் பாடவில்லை என்றால் ஒன்று பெட்டிக் கெட்டுப் போய் இருக்கும் இல்லை என்றால் சரியாகத் ட்யூன் செய்யப்பட்டு இருக்காது. ஒலியைக் கடத்த முடியும் என்ற நம்பிக்கையின், அவற்றின் முயற்சியின் பலனாகத்தான் வானொலி கண்டுபிடிக்கப்பட்டது. கடவுள் நம்பிக்கை அல்லது உணர்வு தனிமனித துய்ப்பு (அனுபவம்) சார்ந்தது, அவற்றை புலன் மற்றும் மொழிகளினால் விளக்கிவிட முடியாது என்றும் தான் உணர்ந்துள்ளேன் என்று ஒருவர் சொல்லும் போது நீங்கள் எந்த அடிப்படையில் மறுப்பீர்கள் ? நீங்கள் போகாத இடத்திற்கு சென்று வந்த ஒருவரின் தனிப்பட்ட அனுபவம் ஒன்றை 'அப்படி ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை' என்று கூறுவது அறிவுக்கு ஏற்றதா ?

    பதிலளிநீக்கு
  7. //’உள்ளுணர்தலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால்...’ என்கிறீர்கள்.

    நிகழ்வுகளை...கருத்துகளை...அன்பு, பரிவு, பாசம் போன்ற உணர்ச்சிகளைப்
    புலன்களால் உணர்வதாக நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிடுகிற ‘உள்ளுணர்வு’ எனக்குப் புரியவில்லை கண்ணன்.உள்ளுணர்வே
    என் போன்றவர்களுக்கு இல்லை என்பது உண்மையாகவும் இருக்கலாம் நண்பரே.அதனால்தான், ‘கடவுள் கோட்பாடு’ எங்களுக்குக் கற்பனையாகத் தெரிகிறது. இதுவும் உண்மையாக இருக்கலாம்.//

    உணர்வுகளுக்கும் புலன்களுக்கும் தூண்டல் என்ற அளவில் மட்டுமே தொடர்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன், ஆனால் அதன் தொடர்ச்சி ? வெறும் அனுபவம் அல்லது நினைவு வழியாகக் கிட்டுவது தானே. கனவின்பமும் கற்பனை இன்பமும் எந்த புலனில் தொடர்ப்பு உள்ளது என்று தெரியவில்லை, மூளை புலன் இல்லை அனுபவ அறிவின் சேமிப்பு மட்டுமே என்று நினைக்கிறேன். தண்ணுணர்வு என்பது என்னைப்பொருத்த அளவில் அது விபத்துக்கான முன்னெச்சரிக்கையோ அல்ல. நாம் விரும்பிய அல்லது விரும்பாத சாத்தியம் உள்ள எதிர்ப்பார்த்த நிகழ்வு தடையில்லாமல் நடப்பது தான், நீங்கள் நினைத்த மணி மற்றும் நிமிடம் பார்க்கும் போது கெடிகாரத்தில் ஓடிக் கொண்டு இருக்கலாம், அதனால் பலன் என்று ஒன்றும் கிடையாது தமக்கு முன்பே தெரிந்துவிட்டதே என்ற ஒரு சிலிர்ர்பு ஏற்படும். இதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள். கடவுள் நம்பிக்கையும் உணர்வு சார்ந்த ஒன்றே என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. //கடவுள் நம்பிக்கையால் மனித குலத்துக்கு நேரும் தீமைகள் பற்றித்தான்.//

    இதில் மாறுபட்ட கருத்து உண்டு, கடவுள் நம்பிக்கையால் யாரும் கெட்டுப் போய்விடவில்லை, இன்னும் காட்டுவாசிகளாக உள்ளவர்களிடம் அழுத்தமான அத்தகைய நம்பிக்கைகள் உண்டு. அவர்கள் தங்களது கடவுள் நம்பிக்கையை வைத்து தமக்குள் அடித்துக் கொள்வதில்லை. ஆனால் தீமைகளின் ஊற்றாக இருப்பவை மதங்களும், மதங்கள் கட்டமைத்துள்ள கடவுள் நம்பிக்கைகளும் தான், எங்க மதக் கடவுளுக்கு இது தான் பிடித்தமானவை இது வேண்டாதவை போன்ற சித்தாந்தங்களினால் தான் ஆபத்துகள் தொடர்கின்றன, பூசை அறை நம்பிக்கைகளால் யாரும் கெட்டுப் போவதில்லை, அதை சமூகத்துடன் தொடர்ப்பு படுத்தும் போது தான் தவறு செய்கிறார்கள். பூசை அறை நம்பிக்கை என்றால் வீட்டுக்குள் நரபலிக் கொடுப்பது தவறில்லையா என்று கேட்கக் கூடாது, நான் அபப்டிச் சொல்லவரவில்லை, பிறருக்கு எந்த இன்னலும் வைக்காத தனிப்பட்ட நம்பிக்கைகள் நம்புகிறவர்களின் தன்னம்பிக்கையை பெருக்கினால் அது தவறு இல்லை.

    //அழுத்தமான கருத்துகளை முன் வைத்த தாங்கள், இறுதியில் சற்றே
    நிலை தடுமாறிவிட்டீர்களே, ஏன்?

    உலகில் எத்தனை மதங்கள்! எத்தனை மதப் பிரச்சாரகர்கள்! கடவுளை நம்பும்படி, அதற்கான வழிவகைகளைப் பின்பற்றும்படி நிகழ்த்தப்படும் பிரச்சாரங்கள் தாங்கள் அறியாதது அல்லவே கண்ணன்?
    //

    நான் எழுதும் முன் சரியாகச் சொன்னதாகத்தான் நினைக்கிறேன், எந்த ஒரு (ஆத்திக) நம்பிக்கையாளரும் அவற்றைப் பின்பற்றும் முன் அவற்றின் காரண காரியங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை, குறிப்பாக கடவுள் நம்பிக்கை பெற்றோர்களின் சொத்துகள் போன்று தான் தொடர்கின்றன, ஆன்மிகத்தில் மிகுந்த ஆராய்ச்சி செய்தால் சாமியார் ஆகிவிடுமோ என்ற பயம் மற்றும் அவை எல்லாம் 60 வயதிற்குமேல் போக்கிக் கொள்ளவேண்டிய ஐயங்கள் என்றே கருதி ஆட்டு மந்தை போல் பின்பற்றுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. உண்மையிலேயே தாங்கள் ‘உணர்ந்து சொல்லும் கருத்துகள் என்னை மகிழ்விக்கின்றன கண்ணன்.’

    கடவுள் இருப்பதை...அவர் கருணை வடிவானவர் என்பதை ’நான் உணர்கிறேன்’என்று சொல்பவரை நாம் எப்படி மறுக்க முடியும்?

    அப்படிச் சொல்வது அவர் விருப்பம்...உரிமை.

    பிறரைப் பார்த்து, “நீங்கள் உணருங்கள்...நம்புங்கள்” என்று சொல்வதும் தவறல்ல.

    “என்னால் உணர இயலவில்லை...நம்ப முடியவில்லை” என்று சொல்பவரை இழித்துரைப்பதும், நம்பும்படி வற்புறுத்துவதும், வன்முறை மூலம் அச்சுறுத்துவதும்தான் தவறு...குற்றம் என்கிறேன்.[எத்தனை கொடூரத் தண்டனைகள் கடந்த காலங்களின் வழங்கப்பட்டன...உயிர்கள் பலியாயின! வரலாறு சொல்கிறதே!]

    ”நீ நம்புவதோடு நிறுத்திக் கொள்.பிறரை வற்புறுத்தாதே. நீ சொல்வதை மக்கள் நம்பினால், நன்மையைக் காட்டிலும் அதிகம் தீமை விளைய வாய்ப்பிருக்கிறது” என்று ஒருவன் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

    அப்படிச் சொல்ல அவனுக்கு உரிமை இல்லையா?

    ‘நானும் சொல்கிறேன். நீயும் சொல். மக்கள் சிந்தித்துத் தங்களுக்குச் சரி எனப்படுவதை ஏற்கட்டும்’ என்ற நிலைப்பாடுதான் எவருக்கும் தீங்கு பயக்காத ஒன்றாக இருக்க முடியும்.

    இந்தப் பதிவில் நான் நம்புவதைச் சொல்ல இருக்கிறேன்.

    வேறென்ன?

    இதனால் யாருக்கு என்ன தீங்கு விளைந்துவிடப் போகிறது?

    தீங்கு விளையும் என்று, யாரேனும் நம்பும் வகையில் எடுத்துரைத்தால்
    நான் பதிவிடுவதை நிறுத்திவிடுவேன்.

    இது 100% உண்மை,

    பதிலளிநீக்கு
  10. கடவுள் நம்பிக்கையால் கெட்டுப் போனவர்கள் இல்லாமல் இருக்கலாம்.
    கடவுளைத் துணையாகக் கொண்டு[வேண்டிக் கொண்டு]பிறரைக் கெடுத்தவர்கள் இருக்கிறார்களே?

    கடவுளை நம்பும் காட்டு வாசிகள், கடவுளிடம் ‘வாக்கு’ கேட்டு,பிற உயிர்களுக்கு...பிற இனத்தவருக்குத் தீங்கு செய்யவில்லையா?

    எண்ணிப் பாருங்கள் கண்னன்.

    பதிலளிநீக்கு
  11. கடவுளுக்கு ‘உயிர்ப்பலி’ இடுதல்.....
    தன் உறுப்புகளையே அர்ப்பணித்தல்...
    இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே கோவி?

    பதிலளிநீக்கு
  12. //பரமசிவம் கூறியது...
    கடவுளுக்கு ‘உயிர்ப்பலி’ இடுதல்.....
    தன் உறுப்புகளையே அர்ப்பணித்தல்...
    இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே கோவி?//

    விலங்குகளைப் பலி இடுவது தவறு என்று சொல்லவதற்கில்லை, அவர்கள் உண்ணும் உணவைத் தானே கொன்று அவர்கள் படைக்கிறார்கள். பிற உயிருக்கு தீங்கு என்ற அளவில் பார்க்கும் போது அவை தவறாகத் தெரியும், தாவரங்களைப் போல் சில வகை விலங்குகள் (ஆடு,மாடு, பன்றி, கோழிகள், மீன்கள்) அவை உண்ணப்படுவதற்காக இயற்கை அதன் இனவிருத்தி பெருக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. இவை பெரும்பாலும் வீட்டில் வைத்து வளர்க்கப்படுபவை, காலம் காலமாக அடித்து தின்றாலும் அவற்றின் எண்ணிக்கை மறைந்து போகவில்லை, இது தவிர பிற விலங்குகளை வேட்டையாடும் போது அவை அளிக்கப்படுகின்றன, அவற்றின் மறு உற்பத்தியையும் மனிதர்கள் சிந்திப்பது இல்லை.

    காட்டுவாசி ஆக இருந்து நாகரீகம் பெற்றதால் உயிர்பலி கொடுப்பது தற்போதைய மனிதர்களிடமும் தொடருகிறது என்றே நினைக்கிறேன்.

    கடவுள் பற்றிய சிந்தனைகள் வழிபாடு என்பதிலிருந்து துவங்கி தத்துவம் என்பதாக வளர்ந்துள்ளது, இரண்டிற்கும் இடைப்பட்டவர்களும் உள்ளார்கள். தத்துவம் என்பவை வாழ்க்கை நெறிகள், வழிகள் தானே. உண்மையில் தத்துவங்களுக்கும் கடவுள் - (என்ற ஒன்று இருந்தால் அதற்கும்) தொடர்பு இருப்பது போல் எனக்கு தெரியவில்லை. உருவ வழிபாட்டின் உருவங்களை அந்த தத்துவங்களில் பொருத்திப்பார்த்து வணங்குகின்றனர்.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள கண்ணன்,
    ஆழமான, பயனுள்ள, சிந்திக்கத் தூண்டும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்காகத் தங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

    நம் கருத்துப் பரிமாற்றங்களைப் பிறரும் படித்துப் பயனடைந்தால் நான் மிகவும் மகிழ்வேன்.

    நன்றி கோவி.

    பதிலளிநீக்கு
  14. \\இது பற்றி விவாதிக்கத்தான் இன்றைய மதவாதிகளையும் ஆன்மிகவாதிகளையும் அன்போடு அறைகூவி அழைக்கிறோம்.
    \\ வந்திட்டேன்யா..........வந்திட்டேன்..........அறைகூவல்........... ஹெ..ஹெ........ ரொம்ப கூவாதேய்யா.........

    பதிலளிநீக்கு
  15. \\‘இன்பங்கள் நிறைந்த உலகைப் படைத்து,அந்த இன்பங்களைத் துய்க்கும்
    பேற்றை உயிர்களுக்கு வழங்கியவர் கருணை வடிவான கடவுள்’ என்று சொன்னார்கள். நீங்களும் சொல்கிறீர்கள்.\\ நாங்க சொல்றோம்னு, அதையும் நீங்களே சொல்லிட்டா எப்படி ஐயா? இந்த மாதிரி எவன் சொல்றானோ எங்களுக்குத் தெரியாது, ஆனால் இப்படியெல்லாம் நாங்கள் படித்த நூகளில் சொல்லப் படவில்லை. இந்த உலகம் ஒரு தண்டனைக்குரிய இடம், இங்கே ஒவ்வொரு அடி வைக்கும் போதும் ஆபத்தில் மாட்டிக் கொள்ளல்லாம் என்று சொல்லுமளவுக்கு டேஞ்சரான இடம், நீ இருக்க வேண்டிய இடமும் இதுவல்ல, என்றே எங்கள் நூல்கள் சொல்கின்றன. அப்போ வேறெங்கு தான் இருக்க வேண்டும்? இறைவனுடன். இறைவனுக்கென்று ஒரு உலகம் உள்ளது, அங்கே வந்து விடுங்கள் இந்த துன்பங்கள் எதுவும் இருக்காது. அங்கே போவது தான் மனிதனாகப் பிறந்ததன் நோக்கம். [இதுக்கு மேல போன மதப் பிரச்சாரம் மாதிரி இருக்கும், நிறுத்திக்கிறேன்].

    பதிலளிநீக்கு
  16. \\அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிச் சிந்தித்ததுண்டா?\\ அது சரி, கடவுள் இல்லைன்னு சொல்லிட்ட அதுக்கப்புறம் உயிர்கள் துன்பமே அனுபவிக்காமல் வெறும் இன்பக் கடலில் நீந்திகிட்டே இருக்குமா? வெறும் பிரச்சனைகளை மட்டுமே சொல்லி புலம்பி எதற்கைய்யா புரயோசனம்? அதற்க்கு உமது தீர்வு என்ன? நாத்தீகர்கள் எல்லோரும் எல்லையில்லா இன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறீர்களா? நீயும் தானே துன்பப் படுகிறாய்? உன்னாலும் புயல், சுனாமி, நில நடுக்கம், நோய்வாய்ப் படுதல் போன்றவற்றை நிறுத்த முடியவில்லைதானே? அப்புறம் ஆத்தீகனாய் இருந்தால் என்ன நாத்தம் புடிச்ச நாத்தீகனாய் இருந்தால் தான் என்ன?

    பதிலளிநீக்கு
  17. \\நம் கருத்துப் பரிமாற்றங்களைப் பிறரும் படித்துப் பயனடைந்தால் நான் மிகவும் மகிழ்வேன்.\\ அடேங்கப்பா கண்ணன் ஒருத்தரு........ இன்னொருத்தரு அர்ஜுனன் [பழைய பரமசிவம்] இவங்க ரெண்டு பெரும் நடத்திய உரையாடல் பகவத் கீதையா இங்கே வியாசர் எழுதி வச்சிட்டாரு, பின்னாடி வர்றவங்க படிச்சி முக்தி யடையப் போறாங்க. ரெண்டு அறிவுகெட்ட குருட்டுப் பயலுங்க உளறி வச்சிருக்கீங்க. இத இன்னொருத்தன் படிக்கனுமா? போங்க....... [வாயில நல்லா வருது.]

    பதிலளிநீக்கு