ஒரு மாத காலத்துக்கு முன்பே எழுத்தாளர் மனோகருக்கு விருது கொடுப்பது தொடர்பான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. விழா மேடையில் சரஸ்வதியின் படம் வைக்கப்படும் என மனோகரிடம் அப்போது கூறப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், இந்த விருதுக்கு மறுப்பு தெரிவித்து விதர்பா சாஹித்ய சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் எழுத்தாளர் யஸ்வந்த் மனோகர்.
அதன் விவரம்:
"பெண்கள் மற்றும் சூத்திரர்களுக்கு கல்வியும் அறிவும் மறுக்கப்பட்டு சுரண்டப்பட்டதன் அடையாளம் சரஸ்வதி. இலக்கிய நிகழ்ச்சிகளில் மதத்தை என்னால் அனுமதிக்க முடியாது. ஒரு எழுத்தாளரான என்னுடைய அது குறித்த பங்கும் என் சிந்தனைகளும் விதர்பா சாஹித்ய சங்கத்துக்குத் தெரியும். சரஸ்வதியின் உருவப்படம் விழா மேடையில் இருக்கும் என்று இப்போதுதான் என்னிடம் கூறப்பட்டது. இந்தப் படம் மேடையில் இருக்கும்வரை, என் மதிப்புகளை விட்டுக் கொடுத்துவிட்டு என்னால் இந்த விருதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பணிவோடு இந்த விருதை மறுக்கிறேன்.”
இதை ஊடகங்கள் பலவும் செய்தியாக வெளியிட்டன//
*மனோகரைப் போல, விருதுக்கென, கொண்ட கொள்கையைக் கைவிடாத 'மனோதிடம்' நம் எழுத்தாளர்களுக்கு இருந்ததா? இருக்கிறதா?!
=============
https://www.bbc.com/tamil/india-55700477 -18 ஜனவரி 2021