பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- சாதி, மதம், கட்சி என்று எந்தவொன்றின் சார்பும் அடியேனுக்கு இல்லை[விதிவிலக்கு: ‘மொழி & இனம்’ பற்றுகள்]. பிரபலமானவராயினும், அதிக அளவில் அவர் தவறுகள் செய்தால், அவ்வப்போது அவரைக் கண்டித்து எழுதுவது தவிர்க்க இயலாதது. இது ஒரு நடுநிலை வலைப்பதிவனின் கடமையும்கூட.
புதன், 1 ஜூலை, 2026
மதத்தை மறைத்த முதல்வரும் ‘முக்குலத்தோர் புலிப்படை’ கருணாஸ் கொந்தளிப்பும்!
மாஜி முதல்வரைக் கைது செய்யுங்கள் மாண்புமிகு முதல்வர் ஜோசப் அவர்களே!
//‘தவெக’ ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 2 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்//[https://www.dinamalar.com* செய்தி].
த.நா.முதல்வர் ஜோசப் அவர்களே,உங்கள் ஆட்சியைக் கவிழ்க்கச் சூழ்ச்சி[வெறும் முயற்சி அல்ல] செய்ததாக நீங்கள் நம்பும்[உங்களின் இந்த நம்பிக்கையைத்தான் அமைச்சரொருவர் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்] இந்த 6 பேரும் ஏவப்பட்ட[கூர் மழுங்கிய?] அம்புகள் என்பது உங்களுக்குத் தெரியும்.
அம்புகளை எய்தவர் மாஜி முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதையும் அத்துபடியாய் நீங்கள் அறிவீர்கள்.
இந்த எடுபிடிகளைக் கைது செய்வதால், உங்கள் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியைக் கைவிடமாட்டார் அவர்; தொடர்வார்.
உங்களைக் குப்புறக் கவிழ்க்கும்வரை[ஆட்சிக் கவிழ்ப்பு] அயராமலும் மனம் தளராமலும் அவர் தன் சூழ்ச்சியைத் தொடர்வார் என்பதால்.....
தயங்காமலும் காலம் தாழ்த்தாமலும் அவரைக் கைது செய்து சிறையில் அடையுங்கள்.
உரிய பிரிவுகளில் அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உங்களின் ஆட்சிக்காலம் முடியும்வரை அவர் வெளியே வராத வகையில் தண்டனை பெற்றுத்தாருங்கள்.
வாழ்க நீங்கள்! உங்களின் நல்லாட்சி தொடர முழு முதல் கடவுளான கர்த்தரை வேண்டுகிறோம்!!
==================
