சனி, 25 ஜூலை, 2026

ஜோசப்[முதலமைச்சர்] எவ்வழி அவ்வழி நம் வழி!

தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜோசப் அவர்கள், தவிர்க்கவே இயலாத அன்றாடக் கடமைகளையெல்லாம் புறக்கணித்துத் திரையரங்கிற்குச்[அவர் வீட்டில் உள்ள பெரிய திரையிலேயே பார்க்கும் வாய்ப்பைத் தவிர்த்து] சென்று ’ஜனநாயகன்’ படம் பார்த்தாரென்றால், அதற்கான காரணம்.....

”தமிழ்நாட்டின் குடிமக்களாகிய நீங்களும்  திரையரங்குக்குச் சென்று அப்படத்தைப் பார்த்துப் பரவசப்பட்டு, அளப்பரிய பெரும் பேறுகளைப் பெறுதல் வேண்டும்” என்று சொல்லாமல் சொல்லி நம்மைத் தூண்டுவதற்காகத்தான்.

படம் திரையிடப்படுவதற்கு முதல் நாள் நள்ளிரவிலேயே, எங்கள் உரிலுள்ள ’நாலு’ தியேட்டருக்குச் சென்று வரிசையில் நின்று, நம் முதல்வர் நடித்த ’ஜனநாயகன்’[நம் ஜனங்களுக்கெல்லாம் இவரே நிரந்தர நாயகன் என்பதை உய்த்துணரச் செய்யும் படம்]ஐக் கண்டு களித்துக் கழிபேருவகை எய்தினேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

தலை அறுபடுவதைத் தடுக்கும் தலையாய கடமைகள் இருப்பினும், அவை அனைத்தையும் ஒதுக்கிவைத்து, இன்றே உங்களூர் திரையரங்குக்குச் சென்று, ஜனநாயகன் பார்த்து, முதல்வருக்கு முதல் மரியாதை செலுத்திடுவீர் என்று அறிவுறுத்துகிறேன்.

முதல்வர் எவ்வழி அவ்வழி நம் வழி!

வாழ்க நம் முதல்வர்! வெல்க[வசூலில்] ’ஜனநாயகன்’ திரைப்படம்!!