சமீபத்திய அரசாங்கத் தரவுகளின்படி, ஜப்பானின் 100 வயது, அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்களின் எண்ணிக்கை 2025 செப்டம்பரில் 99,763[இதில் 88% பெண்கள்] ஆக உயர்ந்துள்ளது.
இது 55 ஆண்டுக்கால வரலாற்றுச் சாதனை ஆகும்.
இதற்கான முக்கியக் காரணங்கள்:*இவர்கள் பரம்பரைக் கலாச்சாரத்தைப் போற்றி வாழ்கிறார்கள்.
*ஊட்டச்சத்துள்ள உணவுகளை மெதுவாகச் சுவைத்து உண்பது மட்டுமல்லாமல், இவையே நோய்களுக்கான மருந்தும்கூட என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
*இயற்கையுடன் ஒன்றி உறவாடி வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*செயல்பாடு எதுவாயினும் அதை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் செய்துமுடிப்பது இவர்களின் வழக்கம்.
*நாள்தோறும் கட்டாய நடைப்பயிற்சி[+‘ஜிம்’ பயிற்சி மட்டுமல்லாமல், சைக்கிள் ஓட்டுதல் தோட்டத்தில் வேலை செய்தல் போன்றவை] மேற்கொள்கிறார்கள். தரையில் அமர்ந்து உண்பதை இவர்கள் விரும்பிச் செய்கிறார்கள்.
*இவர்கள் உண்ணும் பருவகாலக் காய்கறிகள், சோயா, மீன், மிசோ, நாட்டோ போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் உலகப் புகழ் பெற்றவை. இவை அனைத்தும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை.
*தினை, பருப்பு வகைகள், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மஞ்சள், இஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
*கஞ்சி, வீட்டில் தயாரிக்கப்பட்ட தோசை போன்றவையும் இவர்களின் உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
*'ஹரா ஹச்சி பு': எனப்படும் வயிறு முட்ட உண்ணாமல், 80% அளவுக்கு மட்டுமே உணவுகளால் அதை நிரப்புவதை இவர்கள் மறப்பதே இல்லை.
*கொண்டாட்ட நாட்களில் கண்டதைத் தின்று நோய்வாய்ப்பட்டுத் திண்டாடுவதில்லை இவர்கள்.
*இயன்றவரை உற்றார் உறவினர்களுடன் உறவாடி மகிழ்ந்து வாழ்வதும் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
*** மேற்கண்ட வாழ்க்கை முறைகள், மே 2025இல் HT Lifestyle உடனான ஒரு நேர்காணலில் மருத்துவ உணவு நிபுணரான ‘பிராச்சி’யால் வலியுறுத்தப்பட்டவை.
* * * * *
//ஜப்பானில் 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100,000 என்ற சாதனை அளவை எட்டியுள்ளதாக அதன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாத நிலவரப்படி, ஜப்பானில் நூறு வயதுடையவர்களின் எண்ணிக்கை 99,763 ஆகவும் தொடர்ந்து 55ஆவது ஆண்டாகப் புதிய சாதனை படைத்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மொத்தத்தில், பெண்களின் பங்கு 88% ஆகும்//[https://www.bbc.com/news/articles/cd07nljlyv0o].
இதில் இந்தியாவுக்கு 4-ஆவது இடம். ஆம், இந்தியாவில் 37,988 பேர் 100 வயதை கடந்த நிலையில் வாழ்வதாக UN 2025 Projections தரவு கூறுகிறது. #postviralシ
* * * * *
இந்தியா - ஜப்பான்> பரப்பளவு[AI பதில்]:
இந்தியாவின் மொத்த பரப்பளவு சுமார் 3.28 மில்லியன் ச.கிமீ 32,87,263 ஆகும், இது உலக நிலப்பரப்பில் ஏழாவது பெரிய நாடாகும். ஜப்பான் தோராயமாக 377,975 ச.கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
