//திருத்தந்தை லியோ[கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான 'போப்'(Pope)]வின், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வலது நுரையீரலின் கீழ்ப் பகுதி, அறுவைச் சிகிச்சை[வீடியோ-உதவி நுட்பத்தைப் பயன்படுத்தி] மூலம் அகற்றப்பட்டது. அவர் நலமுடன் உள்ளார்> https://www.vaticannews.va/en/pope/news/2026-10/pope-leo-surgery-gemelli-hospital-successful.html//
திறமை வாய்ந்த மருத்துவர்களின் மதிநுட்பத்தை மேம்படுத்தி, கர்த்தரின் புகழ் பரப்புவதற்கென்றே தம் வாழ்க்கையை அர்ப்பணித்த ‘போப்’ அவர்களின் நுரையீரல் நோயைக்[நோயைக் கொடுத்தது சாத்தான். கர்த்தர் அதை[சாத்தான்] அழித்துவிடாமல் தடுத்தது அவரின் கருணை] தாமதிக்காமல் உரிய தருணத்தில் குணப்படுத்தி, அவரை மரணிக்காமல் காப்பாற்றிய கர்த்தரின் கருணை நினைவுகூர்ந்து மகிழத்தக்கதாகும்.
கருப்பண்ணனுக்குத் தீராத வயிற்றுவலி.
அவர் செல்லாத ஊர் இல்லை; சந்திக்காத மருத்துவர் இல்லை. ஆனாலும், அவரின் வயிற்றுவலி மட்டும் குணமாகவே இல்லை. காமாட்சி அம்மனால் மட்டுமே அந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று அவர் முழு மனதுடன் நம்பினார்.
நாள் தவறாமல் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டார்.
இடைவிடாமல் மழை பெய்தாலும் வழிபடத் தவறியதே இல்லை.
ஒரு நாள் மாலைப் பொழுதில், படு பயங்கர இடிமின்னலுடன் மழை கொட்டோகொட்டென்று கொட்டிக்கொண்டே இருந்தபோது, குடைகூட எடுத்துக்கொள்ளாமல் நடந்து கோயிலுக்குப் போனார் கருப்பண்ணன்; கடகட முழக்கத்துடன் ‘டமார்’ என்று அவர் தலையில் இடி இறங்க, சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பிணமானார் அவர்.
இது ஒரு சோக நிகழ்வாயினும், தீராத வயிற்று வலியிலிருந்து நிரந்தரமாக அவரை விடுவித்துத் தன்னிடம் அழைத்துக்கொள்வதற்கு, அம்மன் நிகழ்த்திய அதிசயம் அது என்று கருப்பண்ணனின் உறவினர்கள் நம்பினார்கள்; அம்மனுக்கு விழா எடுத்துக் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வையும், போப் அவர்கள் புற்றுநோயிலிருந்து கர்த்தரின் அருளால் குணமடைந்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது.....
கர்த்தரும் காமாட்சி அம்மனும் வேறு வேறு மதத்தவரால் வழிபடப்படும் கடவுள்கள் ஆயினும், அவர்கள் தங்களின் பக்தர்களுக்குத் தவறாமலும் தாமதிக்காமலும் அருள்பாலிக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
எல்லாக் கடவுள்களும் நம் கடவுள்களே என்றும் சொல்லத் தோன்றுகிறது, “எல்லா மதமும் நம் மதமே” என்று நம் முதல்வர் ஜோசப் சொல்வது போல!
.jpg)