செவ்வாய், 2 ஜூன், 2026

எங்கெங்கு காணினும் அசிங்க/ஆபாசப் ‘புதைகுழிகள்’! தப்பிப் பிழைக்குமா மனித இனம்?

சுமார் 25 முதல் 40 மில்லியன்[மில்லியன்> 10 லட்சம்] ஆபாச இணையதளங்கள் இருப்பதாக வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்[In previous landmark studies, experts estimated there to be around 25 to 40 million pornographic websites.....].

*இணையத்தில்  37 சதவீதம் தளங்கள் ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன.

*மொத்த இணையப் பயனர்களில் 34 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணையவழி ஆபாச உள்ளடக்கங்களுக்கு அடிமைகளாக உள்ளனர்.

*ஆபாசக் கதைகளை வெளியிடும் தளங்கள் கணக்கிலடங்காதவை.

*சமூக வலைப்பக்கங்களில் ஆபாச/அசிங்க உரையாடல்கள் மூலம் சுகம் அனுபவிப்போரில் இளம் பெண்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு. போலி முகவரிகளில் பதுங்கியிருந்து பாதுகாப்பாக உரையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*அசிங்கங்களை ரசிக்க, கணினியைக் காட்டிலும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்

*நுகர்வோரில் ஏறக்குறையப் பாதிப் பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள்.

*ஆபாசப் தளங்களைப் பார்ப்பவர்களில் 78% ஆண்கள் ஆவார்கள்; 44% பெண்கள்; பதின்ம வயதினரில் முதன்முறையாகப் பார்ப்பவர்களின் சராசரி வயது 7லிருந்து 13வரை. 

*இணையத்தில் பில்லியன்[மில்லியன் அல்ல] கணக்கான படங்கள் இருப்பதால், ஆபாசப் படங்களின் சரியான மொத்த எண்ணிக்கையை அளவிடுவது சாத்தியமற்றது. 

ஆக, ஆண் பெண் என்னும் வேறுபாடு இல்லாமல் இணையங்கள் விரித்துள்ள ஆபாச வலைகளில் சிக்கிப் பலரும் சீரழியும் நிலையில்.....

பதின் பருவப் பையன்களும் பெண்களும் இதில் அகப்பட்டுக்கொள்வதால்[இதில் ஊறிக்கிடக்கும் நடுத்தரங்களையும் கிழடுகளையும் திருத்த இயலாது] அவர்களின் எதிர்காலம் பாழாகிறது என்பது நம்மைப் பேரதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்குகிறது.

எனவே, கணினி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்தும்[இன்றையச் சூழலில் தவிர்க்க இயலாதது] பிள்ளைகளின் பெற்றோர்கள் நாளெல்லாம் அவர்களின் நடத்தையைக் கண்காணிப்பது மிக முக்கியம்.

பெற்றோர்களே ஆபாச/அசிங்கப் புதைகுழிகளில் சிக்குண்டு மீள இயலாதவர்களாக இருப்பார்களே ஆயின், அவர்களின் பிள்ளைகளைக் கடவுள்தான்[இருந்தால்] காப்பாற்ற வேண்டும்.
                                           ========================
***ஆய்வு நிறுவனங்களில் வெளியான தகவல்களின்[தேர்ந்தெடுக்கப்பட்டவை] தொகுப்பே இப்பதிவு.