எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 29 டிசம்பர், 2022

அதிகரிக்கிறது ஆண்களை நம்பாத பெண்களின் எண்ணிக்கை!!!

டந்த பத்து ஆண்டுகளில் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலவரப்படி, தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை 7 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

 

இம்மாதிரிப் பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் 'ஸ்டேட்டஸ் சிங்கிள்' என்ற பெயரில் ஒரு குழு உள்ளது. இது 2020இல் உருவாக்கப்பட்டது. 



இந்தக் குழுவில்
2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

 

இக்குழுவில், திருமணமாகாதவர்கள், கைம்பெண்கள், விவாகரத்துப் பெற்றவர்கள், கணவரைப் பிரிந்து வாழ்பவர்கள், கணவர்களால் அல்லது, குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள் என்று ஆண்களைச் சார்ந்து வாழாத/வாழ விரும்பாத பலதரப்பட்டவர்கள் உள்ளனர்.

 

ஆக, தனியாக வாழும் பெண் சமுதாயத்திற்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்பு இதுவாகும்.

 

பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லுவது, பாதிக்கப்படுவோருக்காகக் குரல் கொடுப்பது என்று பல வகைகளிலும் உதவுவது இக்குழுவினரின் நோக்கமாக உள்ளது.

 

கடந்த பத்தாண்டுகளில் இவர்களிடம் உதவி பெற்றவர்கள் 7.8 கோடிக்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர்கள் தங்களுக்குள் மனவிட்டுப் பேசுவதன் மூலம், நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான வழிகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

 

இந்தவொரு அமைப்பு ஆண்களுடன் இணைந்து குடும்பமாக வாழும் பெண்களின் பாராட்டுதலைப் பெறுவது நாளும் அதிகரித்து வருவதாக, மேற்கண்ட விவரங்களைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் வெளியிட்ட ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

இம்மாதிரியான அமைப்புகள் புதிது புதிதாகத் தோன்றுவதற்கும், அவற்றின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வறிஞர்கள் குறிப்பிட்டிருப்பது ஆண்களின் அடிவயிற்றைக் கலக்குவதாக உள்ளது. 


ஆகவே, ஆண்மக்களுக்கு நாம் வழங்கும் அறிவுரையாவது, உங்களின் குடும்பத்துப் பெண்களை அடக்கி ஆளும் ஆதிக்க மனப்பான்மையை அறவே கைவிட்டு, அவர்களுக்கு அனுசரணையாக வாழப் பழகுங்கள் என்பதே.

 

பெண்டாட்டி தாசர்களாக ஆகிவிடக்கூடாது என்பது நாம் செய்யும் எச்சரிக்கையும்கூட!

 

ஹி… ஹி… ஹி!!!

========================================================================

***இப்பதிவு, //“ஆண் துணை வேண்டாம்”... தனிமையில் இனிமை காணும் பெண்கள்!!![https://kadavulinkadavul.blogspot.com/2022/12/blog-post_59.html]// என்னும் தலைப்பில் முன்பு நாம் வெளியிட்ட பதிவின் தொடர்ச்சி ஆகும்!


இடையறாத இந்தித் திணிப்பும் கண்டுகொள்ளாத ‘பாஜக’ தலைவர்களும்!!

‘இந்தித் திணிப்பு’ சம்பந்தமானது மதுரை விமான நிலையத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சி.

விமான ஏறச் சென்ற முதியோர்களிடம் இந்தியில் உரையாடியதோடு, “இது இந்தியா. இந்தி தெரிந்திருக்க வேண்டும்” என்று திமிராகப் பேசித் தங்களின் இந்தி வெறியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் முதியோரின் உடைமைகளைச் சோதித்த பாதுகாப்புப் படை வீரர்கள்[சிஆர்பிஎஃப்-Central Reserve Police Force].

மேற்கண்ட பெற்றோரின் பிள்ளையான நடிகர் சித்தார்த் தன் இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் இதைப் பதிவிட்டுள்ளார் என்பது செய்தி[தினகரன்,29.12.2022]....{சித்தார்த்தின் பதிவில் வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/hindi-at-airport-is-actosiddharths-allegation-true-what-happened-at-madurai-airport-867914 என்னும் தளத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது என்பது அறியத்தக்கது}

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர் யார் என்பது நமக்கு ஒரு பொருட்டல்ல. இம்மாதிரியான நடவடிக்கைகள்[“இது இந்தியா... இந்தியில் பேசு”] இடைவிடாது நிகழ்வது  ஏன் என்பதே நம் கேள்வி.

நாம் தேட விரும்பும் வேறு சில கேள்விகளுக்கு விடை கிடைத்தால் இந்தவொரு கேள்விக்கும் தேடாமலே பதில் கிடைத்துவிடும்.

கேள்விகள்:

*'CRPF' எனப்படும் மத்தியப் பாதுகாப்புப் படைப் பிரிவில் இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகிறார்களா? ஆங்கிலமோ இந்தியாவிலுள்ள பிற மாநில மொழிகளோ பேசுவோர் சேர்க்கப்படுவதில்லையா?

*சேர்க்கப்பட்டாலும் இந்தியில் மட்டுமே பேசும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்களா?

*அயல்நாடுகளுக்குத் தூதுக் குழுக்களை அனுப்பிட நேரும்போது, ஆங்கிலத்துடன் அந்தந்த நாட்டு மொழி தெரிந்தவர்களும் இடம்பெறுவது நடைமுறையில் உள்ள ஒன்று. அது போல்.....

தமிழ்நாட்டில் நடுவணரசின் நிர்வாகத்தில் உள்ள இடங்களுக்கு[விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவை]ப் பாதுகாப்புக்காக அனுப்பப்படுபவர்களில்  ஆங்கிலமும் தமிழும் தெரிந்த[தமிழ்நாட்டிலுள்ள இம்மாதிரி இடங்களில் பெரும்பான்மைப் பயணிகள் தமிழர்கள்]  வீரர்களே[CRPF] இடம்பெறுதல் வேண்டும் என்பது மிக மிக மிக அவசியம் அல்லவா?[இவர்கள் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் என்பதால் ஏற்பாடு செய்வது மிக எளிது].

அவசியமே என்பது இந்த இரு தலைவர்களுக்குமே தெரியும். தெரிந்தும் ஏதுமறியாத அப்பாவிகள் போல் நடிக்கிறார்களா?

இவர்கள்தான் இங்கு[தமிழ்நாடு] வரும்போதெல்லாம், நாக்கில் தேன் தடவிக்கொண்டு தமிழைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.

இதெல்லாம் தமிழனின் வாக்குகளை[தேர்தலில்] அள்ளுவதற்காக இவர்கள் நடத்தும் மேடை நாடகம். இதை அறிந்திருப்பதும், அறியாதவர்களை அறிந்திடச் செய்வதும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கடமையாகும்.