‘இந்தித் திணிப்பு’ சம்பந்தமானது மதுரை விமான நிலையத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சி.
விமான ஏறச் சென்ற முதியோர்களிடம் இந்தியில் உரையாடியதோடு, “இது இந்தியா. இந்தி தெரிந்திருக்க வேண்டும்” என்று திமிராகப் பேசித் தங்களின் இந்தி வெறியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் முதியோரின் உடைமைகளைச் சோதித்த பாதுகாப்புப் படை வீரர்கள்[சிஆர்பிஎஃப்-Central Reserve Police Force].
மேற்கண்ட பெற்றோரின் பிள்ளையான நடிகர் சித்தார்த் தன் இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் இதைப் பதிவிட்டுள்ளார் என்பது செய்தி[தினகரன்,29.12.2022]....{சித்தார்த்தின் பதிவில் வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/hindi-at-airport-is-actosiddharths-allegation-true-what-happened-at-madurai-airport-867914 என்னும் தளத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது என்பது அறியத்தக்கது}
இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர் யார் என்பது நமக்கு ஒரு பொருட்டல்ல. இம்மாதிரியான நடவடிக்கைகள்[“இது இந்தியா... இந்தியில் பேசு”] இடைவிடாது நிகழ்வது ஏன் என்பதே நம் கேள்வி.
நாம் தேட விரும்பும் வேறு சில கேள்விகளுக்கு விடை கிடைத்தால் இந்தவொரு கேள்விக்கும் தேடாமலே பதில் கிடைத்துவிடும்.
கேள்விகள்:
*'CRPF' எனப்படும் மத்தியப் பாதுகாப்புப் படைப் பிரிவில் இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகிறார்களா? ஆங்கிலமோ இந்தியாவிலுள்ள பிற மாநில மொழிகளோ பேசுவோர் சேர்க்கப்படுவதில்லையா?
*சேர்க்கப்பட்டாலும் இந்தியில் மட்டுமே பேசும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்களா?
*அயல்நாடுகளுக்குத் தூதுக் குழுக்களை அனுப்பிட நேரும்போது, ஆங்கிலத்துடன் அந்தந்த நாட்டு மொழி தெரிந்தவர்களும் இடம்பெறுவது நடைமுறையில் உள்ள ஒன்று. அது போல்.....
தமிழ்நாட்டில் நடுவணரசின் நிர்வாகத்தில் உள்ள இடங்களுக்கு[விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவை]ப் பாதுகாப்புக்காக அனுப்பப்படுபவர்களில் ஆங்கிலமும் தமிழும் தெரிந்த[தமிழ்நாட்டிலுள்ள இம்மாதிரி இடங்களில் பெரும்பான்மைப் பயணிகள் தமிழர்கள்] வீரர்களே[CRPF] இடம்பெறுதல் வேண்டும் என்பது மிக மிக மிக அவசியம் அல்லவா?[இவர்கள் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் என்பதால் ஏற்பாடு செய்வது மிக எளிது].
அவசியமே என்பது இந்த இரு தலைவர்களுக்குமே தெரியும். தெரிந்தும் ஏதுமறியாத அப்பாவிகள் போல் நடிக்கிறார்களா?
இவர்கள்தான் இங்கு[தமிழ்நாடு] வரும்போதெல்லாம், நாக்கில் தேன் தடவிக்கொண்டு தமிழைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
இதெல்லாம் தமிழனின் வாக்குகளை[தேர்தலில்] அள்ளுவதற்காக இவர்கள் நடத்தும் மேடை நாடகம். இதை அறிந்திருப்பதும், அறியாதவர்களை அறிந்திடச் செய்வதும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கடமையாகும்.