அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 29 டிசம்பர், 2022

அதிகரிக்கிறது ஆண்களை நம்பாத பெண்களின் எண்ணிக்கை!!!

டந்த பத்து ஆண்டுகளில் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலவரப்படி, தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை 7 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

 

இம்மாதிரிப் பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் 'ஸ்டேட்டஸ் சிங்கிள்' என்ற பெயரில் ஒரு குழு உள்ளது. இது 2020இல் உருவாக்கப்பட்டது. 



இந்தக் குழுவில்
2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

 

இக்குழுவில், திருமணமாகாதவர்கள், கைம்பெண்கள், விவாகரத்துப் பெற்றவர்கள், கணவரைப் பிரிந்து வாழ்பவர்கள், கணவர்களால் அல்லது, குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள் என்று ஆண்களைச் சார்ந்து வாழாத/வாழ விரும்பாத பலதரப்பட்டவர்கள் உள்ளனர்.

 

ஆக, தனியாக வாழும் பெண் சமுதாயத்திற்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்பு இதுவாகும்.

 

பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லுவது, பாதிக்கப்படுவோருக்காகக் குரல் கொடுப்பது என்று பல வகைகளிலும் உதவுவது இக்குழுவினரின் நோக்கமாக உள்ளது.

 

கடந்த பத்தாண்டுகளில் இவர்களிடம் உதவி பெற்றவர்கள் 7.8 கோடிக்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர்கள் தங்களுக்குள் மனவிட்டுப் பேசுவதன் மூலம், நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான வழிகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

 

இந்தவொரு அமைப்பு ஆண்களுடன் இணைந்து குடும்பமாக வாழும் பெண்களின் பாராட்டுதலைப் பெறுவது நாளும் அதிகரித்து வருவதாக, மேற்கண்ட விவரங்களைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் வெளியிட்ட ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

இம்மாதிரியான அமைப்புகள் புதிது புதிதாகத் தோன்றுவதற்கும், அவற்றின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வறிஞர்கள் குறிப்பிட்டிருப்பது ஆண்களின் அடிவயிற்றைக் கலக்குவதாக உள்ளது. 


ஆகவே, ஆண்மக்களுக்கு நாம் வழங்கும் அறிவுரையாவது, உங்களின் குடும்பத்துப் பெண்களை அடக்கி ஆளும் ஆதிக்க மனப்பான்மையை அறவே கைவிட்டு, அவர்களுக்கு அனுசரணையாக வாழப் பழகுங்கள் என்பதே.

 

பெண்டாட்டி தாசர்களாக ஆகிவிடக்கூடாது என்பது நாம் செய்யும் எச்சரிக்கையும்கூட!

 

ஹி… ஹி… ஹி!!!

========================================================================

***இப்பதிவு, //“ஆண் துணை வேண்டாம்”... தனிமையில் இனிமை காணும் பெண்கள்!!![https://kadavulinkadavul.blogspot.com/2022/12/blog-post_59.html]// என்னும் தலைப்பில் முன்பு நாம் வெளியிட்ட பதிவின் தொடர்ச்சி ஆகும்!