அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 30 டிசம்பர், 2022

‘விந்து’ ஒவ்வாமை[அலர்ஜி-semen allergy]... புரிதலும் விழிப்புணர்வும்!

உடலுறவுக்குப் பின்னர் அரிதாகச் சில பெண்களின் பிறப்புறுப்பு, நாக்கு, உதடுகள், தொண்டை ஆகியவற்றில் வீக்கம் காணப்படுவதோடு, அவை சிவந்துவிடுவதும் உண்டு; எரிச்சலும் இருக்கும்.

உறுப்பில் வலி, படை போன்றவையும் தோன்றக்கூடும். வாந்தி, குமட்டல் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

உறவுக்குப் பின்னர் 20 அல்லது 30 நிமிட இடைவெளியில் இந்த அறிகுறிகள் தோன்றும்.

 

இது, ‘விந்து ஒவ்வாமை’[அலர்ஜி-semen allergy) எனப்படும். இதை ’ஹியூமன் ஹைப்பர் சென்சிட்டிவிட்டி(ஹெச்.எஸ்.பி) என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்[இதற்கான விளக்கத்தை BBC நிருபருக்கு அளித்தவர் விசாகப்பட்டினத்தில் உள்ள ‘கிங் ஜார்ஜ் மருத்துவமனை’யின் இம்யூனாலஜி பிரிவின் முன்னாள் தலைவரும் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் மைக்ரோ பயாலஜிப் பிரிவின் பேராசிரியருமான ‘மருத்துவர் அப்பாராவ்’ ஆவார்].

 

பிறப்புறுப்பு மட்டுமல்லாமல், விந்தணு சிந்துகிற எந்த உடல் பாகத்திலும், அதாவது கை, வாய், சிறுநீர்ப் பாதை, மார்பகம் போன்றவற்றிலும் ஒவ்வாமை ஏற்படலாம் என்கிறார்கள். 



சிலர் இருமல் தும்மலுடனான சளித் தொல்லைக்கு ஆளாவதும் உண்டு.

லேசான தலைவலி, இதயத் துடிப்பு சற்றே அதிகரித்தல் ஆகியவையும் இடம்பெறக்கூடும்.

 

ஆண்களின் விந்தணுவில் உள்ள புரதங்களால் உண்டாகும் ‘எதிர்வினை’யின் தாக்கமே இந்த ஒவ்வாமைக்குக் காரணமாம்.

 

இப்பிரச்னை மோசமானால் அனஃபிலாக்சிஸ் என்ற பாதிப்பு ஏற்படும். இதனால் மூச்சுவிடுதலில் சிரமமும், தொண்டை வீக்கம், பலவீனமாக அல்லது வேகமாக நாடி துடித்தல், மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.


தங்களுக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்புகளுக்கு ‘விந்து ஒவ்வாமை’தான் காரணம் என்பதைப் பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை.

 

அறிந்துகொள்வதோடு, ஒவ்வாமையைப் போக்க உரிய சிகிச்சையை மேற்கொள்ளுதல் வேண்டும்.

 

அதற்கு மாறாக,  இந்த அறிகுறிகளுக்குக் காரணம், சிறுநீர்ப் பாதைத் தொற்று என்றெண்ணி, அதற்குச் சிகிச்சை பெற்றிட முயலுவது தேவையற்றதாகும்.

========================================================================

 https://www.bbc.com/tamil/science-63320854