சனி, 31 டிசம்பர், 2022

உடலுறவில் ‘உச்சம்’ தொடுதல்!... ஒரு பச்சைப் பொய்!!!

உடலுறவுக்கான ‘கால அளவு’ என்பது, அதில் ஈடுபடுபவரின் மனநிலை,  கற்றறிந்த சேர்க்கை முறைகள், பயன்படுத்தும் மாத்திரைகள்&லேகியங்கள் முதலான சாதனங்களின் நம்பகத்தன்மை போன்றவற்றைப் பொருத்து மாறுபடக்கூடும்.

கால அளவு எதுவாயினும், ஆடவனின் விந்து வெளியானவுடன் இன்பம் அனுபவிக்கும் நிகழ்வு முடிந்துபோகிறது.

ஐந்து நிமிடங்களோ, அறுபது நிமிடங்களோ, விடிய விடியவோ ’அது’ வெளியேறும் அந்தக் கணங்களில் அந்த அந்தரங்கக் கதை முற்றுப்பெறுகிறது.   

ஆக, உடலுறவு ‘முற்றுப்பெறுதல்’ என்பது விந்து வெளியாகும் அந்தக் கணங்களைப் பொருத்தது.

மற்றபடி, உடலுறவில் ‘உச்சம் தொடுதல்’ என்று எதுவும் இல்லை.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மனதில் இச்சை பிறக்கும்போது இணைகிறார்கள். பிரியும்வரை இன்பம் அனுபவிக்கிறார்கள். அவ்வளவுதானே? 

இதில் ‘உச்சம்’ என்ன, தொடுதல் என்ன? 



‘உச்சம்’ என்று எதைச் சொல்கிறார்கள்?

இதற்கு மேலும் இப்போது இன்புறுவதற்கு ஏதுமில்லை என்றவொரு நிலையையா?

அப்படியொரு நிலையைத் தொட்டு, “இப்போது இதற்கு மேலும் எனக்கு இந்த உடலுறவுச் சுகம் தேவை இல்லை” என்று எவரேனும் எண்ணியது உண்டா?

இல்லையே.

அப்புறம் எங்கிருந்து வந்தது ‘உச்சமும் தொடுதலும்’?

“உச்சம் தொடுவது எப்படி?” என்று ஆலோசனை வழங்குகிறவர்களில்[இணையத்தில்] எத்தனை பேர் உச்சம் தொட்டவர்கள்?

இளவட்டங்களின் மனங்களில் இப்படியொரு தணியாத தாபம் விதைக்கப்பட்டு நாயாய்ப் பேயாய் அவர்கள் அலைவதற்குக் காரணமானவர்கள் இந்த அண்டப் புளுகர்கள்தான்.

இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ணும் பெண்ணும் இணைதலின் முக்கிய நோக்கங்களில் ஒன்று உடலுறவுச் சுகம்.

இருவரும் மனம் திறந்து பேசி, அந்தரங்க உறவு முறைகளை உரிய வகைகளில் கற்றுத் தேர்ந்து, ‘அது’க்கான நேரம், கால அளவு போன்றவற்றைத் தேர்வு செய்து, ‘இது போதும்’ என்பதற்கான மனப் பக்குவத்தைப் பெற்று இணைந்து இன்பம் துய்த்து வாழ்வதே சிறந்த இல்லற நெறியாகும்.

தங்களின் வருகைக்கு நன்றி!

===========================================================================