"வருங்காலத்தில் இந்தியா முஸ்லிம் தேசமாக மாறும். 100 ஆண்டுகளில் இந்தியாவை முஸ்லிம்கள் கைப்பற்றினால், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இடித்துவிட்டு, அதற்குப் பதிலாக மசூதி கட்டப்படும்.
பாபர் மசூதி அழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்துக் கோவில் எழுப்பப்பட்டதும், அதற்கு இந்தத் தேசத்தின் பிரதமர், அரசியலமைப்புச் சட்டத்தை மீறி அடிக்கல் நாட்டியதும் இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படும்”
என்றிப்படி ஓர் அதிரடியான கணிப்பை வெளியிட்டிருப்பவர் ஒரு ஜோதிடர் என்றால் அது குறித்துக் கருத்துச் சொல்லவோ கவலைப்படவோ ஒன்றுமில்லை.
கணித்தவர், அகில இந்திய இமாம் சங்கத்தின் தலைவர் மௌலானா சஜித் ரஷித் என்பது, இந்து மதவாதிகளை மட்டுமல்ல, அரசியல்வாதிகளை மட்டுமல்ல, இஸ்லாம் மக்களை உள்ளடக்கிய இந்தியக் குடிமக்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஊடக[டைம்ஸ் நவ்]ச் செய்தியாகும்.
‘டைம்ஸ் நவ்’ ஊடகத்தை மேற்கோள் காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள msn.com இதற்கு.....
‘முஸ்லிம் மதகுரு மௌலானா சாஜித் ரஷிதி விஷத்தைக் கக்குகிறார்’ என்று தலைப்பிட்டுள்ளது.
இந்தியாவில் அமைதியாக வாழ்ந்திட விரும்பும் இஸ்லாம் மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ளாமல், மேற்கண்டவாறு பேசிய மௌலானா உண்மையில் விஷத்தைத்தான் கக்கியிருக்கிறாரா?
"ஆம்” என்றால் அதற்கான காரணம் என்ன?
மீண்டும் இடுகையின் தலைப்பை வாசியுங்கள்.
மேற்கண்ட கேள்விக்கான நம் பதில்.....
மௌலானா மனநலம் குன்றியவர் என்பதே.