அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

‘மாரடைப்பு’... மறக்கவே கூடாத ‘அவசர’ முதலுதவிச் சிகிச்சை!

‘இதயத்துடிப்பு நின்ற ஒருவருக்கு உடனடியாக, சி.பி.ஆர்[விளக்கம் கீழே] முதலுதவி செய்யப்படவில்லை என்றால் அடுத்த ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது` என அலபாமா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வித்துறை இணைப் பேராசிரியரான மைக்கேல் குர்ஸ் தெரிவித்துள்ளார்.


பிழைப்பதற்கான வாய்ப்பு நிமிடத்திற்கு 10% குறையும் என்றால், பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லாத நிலை[100%] உருவாவது 10 நிமிடங்களில் என்று அறியலாம்.


ஆக, மாரடைப்புக்கு ஆளானவரின் இதயத் துடிப்பு நின்றுபோன 10 நிமிடங்களுக்குள் நெஞ்சுப் பகுதியை விட்டுவிட்டு அமுக்குதல்[மீளுயிர்ப்புச் சுவாசச் சிகிச்சை -CPR-] என்னும் முதலுதவிச் சிகிச்சையைச் செய்தால், மீண்டும் இதயம் இயங்க ஆரம்பித்து[நாடித் துடிப்பின் மூலம் அறியலாம்] அவர் உயிர் பிழைத்தெழ வாய்ப்புள்ளது[அடுத்து, மருத்துவமனைச் சிகிச்சையை மேற்கொள்ளலாம்] என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.


10 நிமிடங்கள் இந்தச் சிகிச்சையை[CPR நெஞ்சை விட்டுவிட்டு அமுக்கிவிடுதல்]ச் செய்தாலே பாதிக்கப்பட்டவர் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது என்னும் நிலையில், 29.12.2022ஆம் நாள் பெங்களூருவில், மாரடைப்புக்கு ஆளாகி, நாடித்துடிப்பை இழந்து கிடந்த ஒருவருக்கு, சற்றுத் தொலைவில் கடைவீதிக்கு வந்திருந்த ஒரு மருத்துவர்[டாக்டர்] தகவலறிந்து அவரை அணுகி, 10 நிமிடங்கள் மேற்கண்ட சிகிச்சையைச் செய்து உயிர் பிழைக்க வைத்துள்ளார் என்பது செய்தி[காணொலி கீழே உள்ளது].


இதே போல, அமெரிக்காவைச் சேர்ந்த[வடக்கு கரோலினா] 36 வயது இலைஞருக்கு, மாரடைப்பு ஏற்பட்டு, நாடித் துடிப்பு நின்றுபோன நிலையில், தகவல் அறிந்து வந்த இரு காவலர்கள் 40 நிமிடங்கள் சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார்கள் என்பதும் அறியத்தக்க நிகழ்ச்சியாகும்[https://www.bbc.com/tamil/global-40641750].

தன்னை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகளுடன் ஜான் ஆக்பர்ன்


பெங்களூரு நிகழ்வுக்கான காணொலியின் முகவரி:

https://twitter.com/i/status/1608511249440202752  -29 டிச., 2022


***மருத்துவர் சிகிச்சை[CPR] அளிக்கும் முறையை ஊன்றிக் கவனித்து மனதில் பதிவு செய்துகொள்ளுதல் மிகவும் பயனளிப்பதாகும்.


***CPR … மீளுயிர்ப்புச் சுவாசம் அல்லது இதய நுரையீரல் செயல் தூண்டல் என்பது சுயநினைவு அற்ற சுவாசம் இல்லாத ஒருவருக்கு வைத்தியசாலையிலோ, முதலுதவி வண்டியிலோ அல்லது முதலுதவியாளரால் சுயநினைவு வரும்வரை வழங்கப்படும் சுவாசம் ஆகும்]

===========================================================================