புதன், 28 டிசம்பர், 2022

‘நட்டு’ கழன்ற ‘பாஜக’ தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா!!!

நேற்று[27.12.2022] கோவை மாவட்டம் காரமடையில், ‘பாஜக’ நடத்திய கூட்டமொன்றில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மோடியின் தலைமை, கொரோனாவின் தாக்கம், தமிழர், தமிழ், கடவுளின் ஆசி என்றிப்படி ஏதேதோ பேசியிருக்கிறார்.

பின்னர், அன்னூர் நல்லி செட்டிபாளையம் அருந்ததியர் காலனியில் உள்ள, ‘பாஜக கிளைத் தலைவர்  மூர்த்தி வீட்டிற்குச் சென்றார்.

எதுக்கு?

கிளைத் தலைவர் மூர்த்தியைக் கவுரவிக்க என்றுதானே நினைக்கிறீங்க?

ஆமாங்க. ஆனால்.....

நட்டா சந்திக்கப்போகிற குடும்பத் தலைவர், அதாவது மூர்த்தி அவர்கள், வீட்டு வாயிலில் நின்று வருகைபுரிகிற அவரை வரவேற்பதுதானே மரபு? அவருக்கு[மூர்த்தி] வழங்கப்படுகிற மரியாதை?

அந்த மரியாதை/கவுரவம் மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

குடும்பத் தலைவரான மூர்த்தியோ, அவர் மனைவியோ, குடும்ப உறுப்பினர்ளோதானே விருந்தினருக்கு உணவளிக்கும் உரிமையுடையவர்?

அந்த உரிமைகூடக் கிளைத் தலைவரான மூர்த்தி அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

மாறாக, நட்டா உட்பட, வருகைபுரிந்த தலைவர்களுக்கு உணவு வகைகளைப் பரிமாறியவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராதாகிருஷ்ணன்[தினகரன்[28.12.2022, கோவைப் பதிப்பு; பக்கம்: 2].

இந்த முற்றிலும் முரண்பட்டதும் கண்டிக்கத்தக்கதுமான செயல்பாட்டுக்கு யார் காரணம்”

நட்டாவேதான். உடந்தையாகச் செயல்பட்டவர் முன்னாள் நடுவணமைச்சர் பொன்[அல்ல பித்தளை] ராதாகிருஷ்ணன்.

மூர்த்தி அவர்கள் அவமதிக்கப்பட்டதற்குக் காரணம்?

அவர் அருந்ததியர். அவர் தொட்டுக்கொடுக்கும் உணவைத் தீண்டினால் கைகளில் ‘தீட்டு’ ஒட்டிக்கொள்ளும் என்பதுதானே?

மூர்த்தியும் அவரின் குடும்பத்தாரும் உறவினர்களும் புழங்கும் வீட்டிற்குள் நடமாடியாதால் இவர்களில் கால்களில் ‘தீட்டு’ ஒட்டிக்கொண்டிருக்குமே, அதை எப்படித் துடைத்தெறிவார்களாம்?!

இவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது.....

நம் மக்கள் எல்லா நேரங்களிலும் முட்டாள்களாக இருப்பதில்லை” என்பதுதான்!
===========================================================================