செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

பூக்குழி மிதிக்கும் பக்தகோடிகளுக்கான பரிந்துரைகள்!!


#சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாலி அம்மன் கோவில்.  மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடிமாதத் திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று முக்கிய நிகழ்ச்சியான 'தீ மிதி' விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, சுமார் 1000–க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு திரண்டனர். பின்பு, பக்தர்கள் 15 பேர் கொண்ட குழுவாக அக்கினிக் குண்டத்தில் இறங்கித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள்.

அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 33) மற்றும் வில்லிவாக்கம் யுனைடெட் காலனி அன்னை தெரசா தெருவைச் சேர்ந்த மனோகரன் (52) ஆகியோர் 15–க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் சேர்ந்து அக்கினிக் குண்டத்தில் இறங்கித் தீ மிதித்தனர்.

அப்போது, மனோகரனும் கதிர்வேலும் எதிர்பாராதவிதமாக அக்கினிக் குண்டத்தில் தவறி விழுந்தனர். அங்கு திரண்டு நின்றுகொண்டிருந்த பக்தர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு ஏற்கனவே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு நெருப்புக் கனலில் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்[அம்மன் வேடிக்கை பார்த்தார்!!!!!]. அக்கினியின் பிடியில் சிக்கியதால் கதிர்வேலும், மனோகரனும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுப் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக, தீயணைப்புத் துறையினர் 2 பேரையும் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பக்தர்கள் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ மிதி விழாவின்போது பக்தர்கள் இருவர் அக்கினிக் குண்டத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்து இருப்பது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்# -இது 'தினத்தந்தி' யின் இன்றைய[21.08.2018] செய்தி.

அப்பாவி பக்தர்களே,

நீங்கள் உண்மையான பக்தர்; நீங்கள் கும்பிடுகிற சாமியும் சக்தி வாய்ந்தது என்றால்.....

குளுகுளு தண்ணீரில் குளிச்சிட்டு, ஈரமான ஆடைகளுடன் நெருப்புக்குழியை ஓட்டமாய் ஓடிக் கடவாதீர். பதிலாக.....

வழக்கம்போல, உலர்ந்த ஆடைகளை உடுத்து, அடிமேல் அடிவைத்து மெல்ல மிக மெல்ல நடந்துகாட்டுவீர்.

அல்லது,

பூக்குழியில் வெற்றுடம்புடன் பத்து நிமிடமாவது படுத்துப் புரளுங்கள்.

அல்லது,

அக்கினிப் பிரவேசம் செய்யுங்கள்[சீதாப்பிராட்டி செய்தது போல].

அல்லது,

கும்பங்களில் நெருப்புத் துண்டங்களை நிரப்பி, தலையில் சுமந்து, பிற பக்தகோடிகள் கண்டுகளிக்கும் வகையில் 'கரகாட்டம்' நிகழ்த்துங்கள்.

அல்லது,

உலகின் எங்காவது ஒரு மூலையில் எரிமலை வெடித்தால், கூட்டமாகச் சென்று அக்கினிக் குழம்பில் நீச்சலடித்துவிட்டு வாருங்கள். 

இவற்றில் ஏதாவது ஒன்றையோ அனைத்தையுமோ சாதித்துக் காட்டினால் மட்டுமே.....

நீங்கள் உண்மையான பக்தர். நீங்கள் கும்பிடுவது உண்மையான சாமி.

பைத்தியக்காரர்களா,

இன்னும் எத்தனை காலத்துக்கு  மனம் பதைபதைக்க, உடம்பு நடுநடுங்க நெருப்புக் குண்டத்தை  ஓடிக் கடந்து உங்களை நீங்களே முட்டாளாக்கிப் பிறரையும் முட்டாள்களாக்கிப் பெருமிதப்படுவீர்கள்?!
======================================================================
குறிப்பு:
''ஆஹா, ஒரு நாத்திகன் ஆத்திகரின் மனங்களைப் புண்படுத்திவிட்டான். அவனுக்குப் புத்தி புகட்டுவோம்'' என்று சீறி எழாதீர்! ''சாமியை வழிபடுவதற்கும் நெருப்புக்குண்டத்தில் நடப்பதற்கும் என்ன சம்பந்தம்?'' என்பது குறித்துக் கொஞ்சமே கொஞ்சமேனும்  சிந்திப்பீர்!!
======================================================================
நன்றி: தினத்தந்தி

18 கருத்துகள்:

  1. எது எது எப்படி எப்படி நடக்கணுமோ அது அது அப்படி அப்படியே நடக்கும். எல்லாம் அவன் செயல்.
    அம்மன் வேடிக்கை பார்க்கல. உம்ம மாதிரி ஆட்களின் நடவடிக்ககளைக் கண்காணிக்கிறா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பப் பயமா இருக்குங்க பக்கவாத்தியம்.

      என் தளத்தைத் தவிர வேறு எங்கேயும் பக்க வாத்தியம் வாசிக்கப் போறதில்லையா?!

      நன்றிங்க.

      நீக்கு
    2. //ரொம்பப் பயமா இருக்குங்க பக்கவாத்தியம்.///

      ஹா ஹா ஹா அந்த அம்மன் மேல சத்திமா.. படிச்சதும் வாய் விட்டுச் சிரிசிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா...:)

      நீக்கு
    3. முகவரி இல்லாத இந்தப் பக்க வாத்தியம் அடிக்கடி வந்து பயமுறுத்துகிறார். அவரும் இந்தப் பதிலைப் படிச்சிட்டுச் சிரிச்சிருப்பார்னு நினைக்கிறேன்.

      நன்றி அதிரா.

      நீக்கு
  2. இன்னும் பல மூடநம்பிக்கைகள் இருக்கு ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு நேரும்போது அவை பற்றியும் எழுதுவோம்.

      நன்றி D.D.

      நீக்கு
  3. "பாலி அம்மன் கோவில்" நண்பரே எழுத்துப் பிழையின்றி எழுதுங்கள்.

    "பலி அம்மன் கோவில்" என்பதே சரியாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினத்தந்தி 'பாலி அம்மன்' என்று குறிப்பிட்டதை நகல் செய்ததால் பிழை நேர்ந்துவிட்டது.திருத்தம் செய்துவிட்டேன்.

      மணவிழா ஏற்பாடுகளைச் செய்துகொண்டு,மறவாமல் நேரம் ஒதுக்கி என் பதிவுக்குக் கருத்துரை வழங்கியிருக்கிறீர்கள். உங்களின் பெருந்தன்மை என் மனதை நெகிழ வைக்கிறது.

      நன்றி...நன்றி நண்பரே.

      பரமக்குடி நாமக்கல்லிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது என்றாலும் தங்களின் இல்ல மணவிழாவில் கலந்துகொள்ள நினைத்தேன். அதே நாளில், இங்கும் நான் பங்கு பெற வேண்டிய நிகழ்வுகள் இருப்பதைச் சொல்லி, மீண்டும் மணமக்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

      தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் வாழ்த்துகளும் நன்றியும்.

      மீண்டும் நன்றி நண்பரே.

      நீக்கு
    2. நண்பரே மன்னிக்கவும்.

      பாலி பலி என்பதை நக்கலடித்துதான் எழுதினேன். கடைசியில் உண்மையிலேயே உங்களது எழுத்துப்பிழைதானா ?

      நல்ல தமாசு போங்க...

      நீக்கு
    3. பலி' வாங்கியதால் 'பலி அம்மன்' என்றீர்கள். கொஞ்சமும் யோசிக்கவில்லை. நல்ல தமாசுதான்.

      பலி அம்மனை மீண்டும் 'பாலி அம்மன்' ஆக்கிவிடுகிறேன்.

      மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
    4. என்ன நடக்குது இங்கே? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அம்மனை வைத்து விளையாடுறீங்களோ?:)..

      நீக்கு
    5. எங்களை விளையாடவிட்டு வேடிக்கை பார்ப்பதும் அந்த அம்மன்தான்!. ஹ...ஹ...ஹ!

      நீக்கு
  4. வில்லிவாக்கம் போலீசார் யார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்?
    தீ மிதித்த பக்தர்களும், அவர்களை தீ மிதிக்கவிட்டு வேடிக்கை பார்த்த அம்மனுமே குற்றவாளிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரித் துணிச்சலான நடவடிக்கைகளில் நம் போலீசார் ஈடுபட மாட்டார்கள். காரணம், சாமி பயம்.

      நன்றி நண்பர் வேகநரி.

      நீக்கு
  5. அறிவுப்பசிஜி, ஒரு புண் இருக்கிறதெனில்.. அதுக்கு மேலால மருந்து தடவிட்டால் மாறிடாது, அது எதனால உருவாகியது எனக் கண்டு பிடிச்சு அதுக்கு மருந்து கொடுத்தால்தான் அது மாறும்.. அதுபோல, மக்கள் இப்படி மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாகித் தவிக்கிறார்கள் எனில்.. அது மக்களுக்குள் இருக்கும் அதிக பிரச்சனைகள் துன்பங்கள் தானே காரணம்.. துன்பமில்லாத மனிதர் உருவாகும்போதுதான், இப்படியான நம்பிக்கைகளும் இல்லாது ஒழியும்.. அப்படியான நிலைமை எப்போது வருமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நல்ல கருத்துரை.

      நாம் மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாவதற்குத் துன்பங்கள் மிக முக்கிய காரணம்தான்.

      துன்பங்களைப் போக்க, அவற்றிற்கு மூலகாரணமான பிரச்சினைகளைகள் களையப்பட வேண்டும். எல்லோரும் நலமுடன் வாழ்தல் வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், துன்பங்களுக்கான பிரச்சினைகளைப் பெருமளவு குறைத்திட முடியும்.

      பிரச்சினைகள் குறைய, துன்பங்கள் குறையும்; மூடநம்பிக்கைகளும் குறையும். மக்கள் அனைவரும் சிறப்பாகச் சிந்திக்கக் கற்றால் இந்நிலை விரைவில் சாத்தியப்படக்கூடும்.

      சிந்திக்கத் தூண்டும் வகையில் அரிய கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  6. இந்த பசி பரமசிவம் இந்து கடவுளை பற்றி கேவலமாக சொல்லிவிட்டான். சங்கி- மங்கிகளே இவனுடைய செல்பேசிக்கு (1234567890) உடனடியாக ஆபாச செய்திகளை ஆயிரம் ஆயிரமாக அனுப்பிவையுங்கள்
    #arrest'pasi'paramasivam
    இப்படிக்கு
    சிறுநீர் ராஜா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூடநம்பிக்கைகளைச் சாடுகிற என்னை ஆபாசமாகத் திட்டித் தீர்த்தால் சங்கி-மங்கிகளின் மனம் சாந்தி அடையக்கூடும். அதன் பிறகேனும் நிதானமாகத் தங்கள் குறைகள் குறித்து யோசிப்பார்கள்.

      தங்களின் வழிகாட்டல் வரவேற்கத்தக்கது.

      வருகைக்கும், மறைமுகமாக என்னைப் பாராட்டிக் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி கிறுக்குச் சிறுநீர் ராஜா.

      நீக்கு