//9, 10ஆம் வகுப்புகளில் 3ஆவது மொழி[இந்தி] தேர்வில் தேர்ச்சி பெறுவது இனி கட்டாயம்>சிபிஎஸ்இ உத்தரவு... 2027-28 கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இந்த 3ஆவது மொழிக்குத் தனியாக வாரிய அளவிலான பொதுத்தேர்வு ஏதும் நடத்தப்படாது//[https://www.dinakaran.com/news/language_proficiency_test_cbse/].
இது இந்தித் ‘திணிப்பின் ஒரு கட்டம். அடுத்தக் கட்டமாக, 2028-29லிருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும்.
அப்புறம், ஒன்றிய அரசுக்குள்ள அத்தனை அதிகாரங்களையும் பயன்படுத்தி, அனைத்துப் பள்ளிகளிலும்[மாநில அரசுகள் நடத்துபவை உட்பட] அனைத்து வகுப்புகளுக்கும் இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டுப் பொதுத் தேர்வும் நடத்தப்படும். இந்தியிலேயே பாடம் கற்பிக்கும்[பயிற்றுமொழி] முயற்சியும் மேற்கொள்ளப்படும்.
ஆக, எதிர்ப்புகளை முறியடித்து, இந்தியா முழுவதும் இந்தியைப் பரப்பி[ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் இந்தியே ஆதிக்கம் செலுத்துகிறது. தனியார் நிறுவனங்களிலும் ஆதிக்கம் பரவும்], இந்திக்காரன்களும், அதனால் பயன் பெறுபவன்களும்[இதை ஆளுவதற்கான குறிப்பிடத்தக்க வேறு தகுதி ஏதும் இவன்களுக்கு இல்லை] இந்தியாவை நிரந்தரமாக ஆளுவதுதான் இவன்களின் ஒரே குறிக்கோள்.
இவன்கள் முழங்கும் ஒருமைப்பாட்டின் உள்நோக்கமும் இதுதான்.
ஒருமைப்பாடு என்பது.....
ஒரே நாடு: இந்தியா
ஒரே இனம்: ‘இந்தி’யர்
ஒரே மொழி: இந்தி
ஒரே கட்சி ஆட்சி: ப.ஜ.க.
ஒரே ரேசன் கார்டு: ப.ஜ.க. கட்டுப்பாட்டில்
ஒரே தேர்வு[எழுதும் மொழி]: இந்தியில்
‘இந்தி’யன்&இந்தியால் பயன் பெறுபவன்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பாடாவிட்டால், வெகு விரைவில் ‘இந்தி’யன்கள் அல்லாத இந்தியர்கள் இந்த நாட்டில் கொத்தடிமைகளாக ஆவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.
