வியாழன், 23 ஜூலை, 2026

’விசிலடிச்சான்’களுக்கு நம் வீரவணக்கம்!!![உரைநடைக் கவிதை]

ஆடுங்கடா ஆடுங்க

அந்தரத்தில் எம்பிக் குதித்து ஆடுங்க


குதித்துக் குதித்து ஆடுங்க

குலுங்கிக் குலுங்கி ஆடுங்க


ஒட்டுமொத்த உடம்பையும்

உலுக்கி உலுக்கிக் குலுக்கி ஆடுங்க


உடம்பு சூடேறி உள்மண்டை மூளை 

உருகிக் கரையும்வரை ஆடுங்க


குத்தாட்டம் போடும் உங்களின் குஞ்சி

ஆட்டத்தை நிறுத்தும்வரை ஆடுங்க


ஆடுங்கடா ஆடுங்க

நாடி தளரும்வரை ஆடுங்க


ஆடி அடங்கிவிட்டால்.....


உயிருள்ளவரை

கோடிகளில் புரளும் கூத்தாடிகளுக்காக

நீங்கள் ஆடமாட்டீர்கள்


ஆடுங்கடா ஆடி முடியுங்கடா!😅

===========

எச்சரிக்கை! 

இங்கே ‘குஞ்சி’ ஆணின் தலைமுடி(குடுமி)யைக் குறிக்கும்; ஆணின் அந்தரங்க உறுப்பை அல்ல. ஹி…  ஹி…  ஹி!!! 


‘குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல’... நாலடியார்.

=====================

ஐயோ பாவம் தமிழர்கள்!