‘அவன்’ என்பதற்குத் தப்பாகப் பொருள்கொண்டு, தமிழினத்தைக் காக்கவந்த அருளாளனிராம் ஜோசப்பிடம் அடியேனைக் கைது செய்யும்படி[‘நாதக’ கார்த்திகா கைது செய்யப்பட்டதை நினைவுகூர்க] எவரும் கோரிக்கை வைத்துவிட வேண்டாம். சிறைக்குப் போய், சோளக்களி தின்பது இந்த வயசாளியின் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது.
இங்கே ‘அவன்’ என்பது, அனைத்து உயிர்களையும் படைத்து, ஒன்றோடொன்று போராடவிட்டு ‘மேலே’ இருந்து வேடிக்கை பார்க்கிற எல்லாம் வல்ல இறைவனை[‘அவன்’ இன்றி அணுவும் அசையாது]க் குறிக்கும்.
ஜோசப்பின் நல்லாட்சி சிறக்கவும், அவரின் செல்வாக்கு வளரவும், இடைஞ்சல் ஏதுமின்றி அவர் தமிழ்நாட்டை ஆட்சிபுரியவும் அயராமல் பாடுபடும்[ரோடுஷோக்கள் நடத்துவதன் மூலம்] உலகப் பேரழகி ‘திரிஷா’ வாழ்க!
அழகு சிதையாமலும், கவர்ச்சி குறையாமலும் அவர் வளமுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்!
வாழ்த்துங்கள்!!