பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஜக்கியை, காவல்துறையின் ‘விசாரிப்புக்கு’ உள்ளாக்காமல் இருப்பது, பிரதமர் மோடி அவர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும்.
ஈஷா ஆசிரமப் பயிற்சிக்குச் சென்று, அங்கிருந்து பெரும் பதற்றத்துடன் தப்பி ஓடி, எங்கோ ஒரு பாழுங்கிணற்றில் அழுகிய பிணமாகக் கிடந்தார் சுபஸ்ரீ என்னும் பெண்.
அவரின்[சுபஸ்ரீ] உடல் முறையாக ‘உடற்கூறு’ ஆய்வு செய்யப்படாமல், அவசர அவசரமாகத் தமிழ்நாடு காவல்துறையின் பாதுகாப்புடன் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.
இதுவும் பிரதமருக்கும் இங்குள்ள முதல்வருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை.
இந்த மரணம் தொடர்பாக, இதனோடு சம்பந்தப்பட்ட ஈஷா யோகா ஆசிரம அதிபர் ஜக்கி மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதோடு, அவரிடம் குறைந்தபட்ச விசாரணைகூட நடத்தப்படாதது ஏன் என்னும் கேள்வி எழுகிறது.
இது குறித்து எந்தவித விளக்கமும் இவ்விரு அரசுகளாலும் தரப்படவில்லை.
குறைந்தபட்ச விசாரணையைக்கூடத் தவிர்க்கும் அளவுக்கு உண்மையில் ஜக்கி கடவுளின் அவதாரமா, எல்லாம் ஜக்கிக் கடவுளின் திருவிளையாடல்கள் என்று நம்பி அமைதிகாப்பதற்கு?!
நம் குடியரசுத் தலைவர் அவர்கள் ஜக்கி கொண்டாடும் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்ள[18.02.2023] இருக்கிறார் என்னும் ஊடகச் செய்தி இந்தக் கேள்விக்கு வலிமை சேர்க்கிறது.
***தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களின் பேட்டியைச் செவிமடுத்ததன் விளைவு இந்தக் கேள்வி!
* * * * *
கீழே காணொலி[பெ. மணியரசன் அவர்களின் பேட்டி]: