‘பக்கவாதம்’ குறித்து ஒரளவுக்கு நாம் அறிந்திருக்கிறோம்.
நம் மூளையின் ஒரு பகுதி[இடம், அல்லது வலம்] பாதிக்கப்படும்போது, நம் உடம்பின் ஒரு பக்கம் செயலிழத்தல்[வலப்பக்க மூளையில் பாதிப்பு என்றால் இடப்பக்க உடம்பும், மூளையின் இடப்பக்கத்தில் பாதிப்பு என்றால் உடம்பின் வலப்பக்கமும் செயலிழக்கும்] பக்கவாதம் ஆகும்.
இதை ‘ஒருபக்க’வாதம் என்றும் சொல்லலாம்.
மூளையின் அடிப்பகுதி[brain stem] பாதிக்கப்படும்போது[நம் உடம்பின் இரு பக்கமும்[ஒட்டுமொத்த உடம்பும்] செயலிழப்பதும் உண்டு. இதை நம் மொழியில் ‘இருபக்கவாதம்’ என்று கூறலாம்.
அறிவியல் மொழியில் சொன்னால், இதன் பெயர் ‘மூளைத் தண்டுவட(brain stem stroke)வாதம் ஆகும்.
அதென்ன ‘மூளைத் தண்டுவடம்?
இந்த மூளைத் தண்டுவடத்தில் பாதிப்பு நேரும்போது ஒட்டுமொத்த உடம்பும்[உடம்பின் இருபக்கமும்] செயல்படாமல் போகும். இந்நிலையில், கழுத்துக்குக் கீழே உள்ள உறுப்புகள் செயல்படாது[‘லாக் இன்’]. பேசுவதும் சாத்தியப்படாமல் போகலாம். அடையாளம் காண்பதும் கடினமானதாக அமையக்கூடும்.
மூளைத் தண்டுவடவாதத்தின் அறிகுறிகள்:
தலைச்சுற்றல், உடல் வலி, சோர்வு, உடலின் நிலையற்ற தன்மை(Imbalanced body) அதீத வியர்வை சுரத்தல், குமட்டல், வாந்தி, உடல் பலவீனம் அடைதல், தெளிவற்ற பேச்சு, இரட்டைப் பார்வை, மூச்சுவிடச் சிரமப்படுதல், ரத்த அழுத்தம் அதிகரித்தல் போன்றவை.
அறிகுறிகளைக் கண்டறிந்தவுடன் மருத்துவரை உடனடியாக அணுகுவதன் மூலம் இருபக்கவாதத்தின் தக்குதலைத் தவிர்க்கலாம்.
காரணங்கள்: இரத்தக் குழாயில் கட்டிகள், இரத்தக்கசிவுகள், திடீர் ‘தலை அல்லது கழுத்து’ அசைவுகளால் தமனியில் ஏற்படும் காயம் (இவை அரிதானவை) ஆகியன.
தவிர்க்கும் வழிகள்:
இளம் வயதிலிருந்தே, மதுவருந்துதல், புகைபிடித்தல் போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதும், உணவுக்கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளுதலும்.
==============================================================================
விரிவான தகவலுக்கு: https://www.stroke.org/en/about-stroke/types-of-stroke/brain-stem-stroke