கடந்த காலங்களில், ஆணாதிக்கம் காரணமாக உடலுறவு குறித்து மனம் திறந்து பேசும் வாய்ப்பு நம் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. ஓரளவுக்குச் சமத்துவம் வழங்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டில் அதற்கான துணிவைச் சிலர் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களிலும் மிகப் பெரும்பாலோர் தம் பெயர் சொல்ல விரும்புவதில்லை.
கீழே இடம்பெற்றிருப்பது, ‘தினமலர்’[29.02.2020] நாளிதழில், பெண்கள் குறித்த ஒரு தொடரின் இறுதிப் பத்தி.
இதில் யாரோ ஒரு ‘சாந்தா’வின், உடலுறவு குறித்த ‘கண்ணீர்க் கதை’ சொல்லப்பட்டுள்ளது. சொன்னவர் சாந்தா அல்ல; தொடர் கட்டுரையின் ஆசிரியர் ‘ஜெ’[இவரும் புனை பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிறார்!] என்பவர்.

இப்படி இன்னும் எத்தனை எத்தனை சாந்தாக்களின் கதைகளை ‘ஜெ’ பட்டியலிடுவாரோ தெரியவில்லை.
எதிர்காலத்தில், ஆண்களின் பாலுணர்ச்சிப் பலவீனங்களைப் பரப்புரை செய்வதற்கென்று இன்னும் பல ‘ஜெ’க்கள் முன்வரக்கூடும்.
மனைவியுடனான உடலுறவு விசயத்தில் அலட்சியம் காட்டும் ஆண்களின் பாடு இனி திண்டாட்டம்தான்!
=======================================================================