செவ்வாய், 30 ஏப்ரல், 2024

விஜயகாந்துக்கு விருது! பாவம் ‘பாஜக’!!

‘விஜயகாந்திற்கு மே 9ஆம் தேதி பத்ம பூஷன் விருது’ -பிரேமலதா அறிவிப்பு[மாலைமலர்].

ஒரு நடிகராகவோ, கட்சித் தலைவராகவோ விருது[ஏதோ ஒரு பூஷன்] பெறும் அளவுக்கு வி.காந்த் தகுதி உள்ளவரா என்பதல்ல, அவர் உயிரோடு இல்லாத நிலையில் இதை வழங்குவது தேவையா என்பதே நம் கேள்வி.

விஜயகாந்த் என்றில்லை, வேறு எந்தவொரு பிரபலமானவராயினும் செத்தொழிந்த பிறகு(விருதுக்குத் தகுதி பெற்ற சிலரோ பலரோ உயிருடன் இருக்க) இதை வழங்குவது அர்த்தமற்ற செயல் ஆகும்.

சாதனை நிகழ்த்தியவருக்கு அவர் உயிர் வாழும்போதே விருது வழங்குவது மட்டுமே, அத்துறையில் அவர் மேலும் மேலும் சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்.

ஒருவேளை.....

தேர்தலுக்கு[தமிழ்நாடு] முன்பே ‘பாஜக’ அரசு இந்த அறிவிப்பைச் செய்திருந்தால்.....

தமிழ்நாட்டில் போட்டியிட்ட ‘பாஜக’ வேட்பாளர்களுக்குக் கொஞ்சமே கொஞ்சம் வி.காந்த் ரசிகர்கள் வாக்களித்திருப்பார்கள். அதை அந்த அரசு(பாஜக) செய்யத் தவறிவிட்டது.

பாவம் பாஜக!

ஆனாலும், இந்த அறிவிப்பு, ஜூன் மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு காணாமல் போகவிருக்கும்[அரசியலில்] ‘தேமுதிக’ தலைவி பிரேமலதா, “நான் பத்ம பூஷன் விருது பெற்ற விஜயகாந்தின் பெண்டாட்டியாக்கும்” என்று சொல்லிக்கொண்டு கொஞ்சம் நாட்களுக்கு அந்தக் கட்சியின்[அதன் ஆயுட்காலம்வரை] தலைவியாகக் காலம் தள்ளலாம்.

எது எப்படியோ, இப்படி இறந்துபோனவர்களுக்கு விருதுகள் வழங்கி, புறக்கணிக்கப்படும் சாதனையாளர்களை மனம் புழுங்க வைக்கும் வேண்டாத வழக்கத்துக்கு நடுவணரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கும்?!

ராகுல் காந்தி இந்த நாட்டின் பிரதமர் ஆன பிறகா?

* * * * *

https://www.maalaimalar.com/news/state/premalatha-vijayakanth-says-padma-vibhushan-to-vijayakanth-on-may-9th-715553?infinitescroll=1

* * * * *

‘பசி’யின் குறுங்காணொலி:

https://youtube.com/shorts/qv1-rWUd-FE?si=835MJhsPl2owvJ7U